போகர் சப்தகாண்டம் 946 - 950 of 7000 பாடல்கள்
946. சுன்னமின்னமாவதற்கு
வகையைக்கேளு துடியான வெண்கருவுமெருக்கம்பாலும்
வன்னமின்ன ரெண்டுமொன்றாய்க்
கலக்கிக்கொண்டு வங்கத்தில்விட்டரைத்து வில்லைதட்டி
தின்னமின்ன வகலிலிட்டுப்
புடத்தைப்போடு தீர்க்கமா யாறியபின்னெடுத்துவாங்கி
என்னமின்ன நாலுபலம்
நிறுத்துக்கொண்டு இயலான சூதமது பலந்தானொன்றே
விளக்கவுரை :
947. மாற்றான மிருதாரு
சிங்கிவைக்க மாணாக்கா சொல்லுகிறேன் மகிழ்வாய்க்கேளும்
காற்றான
காரீயம்பலந்தான்பத்து கலரிதற்குள் நாலிலொன்று சரகெந்தியப்பா
மூற்றான கெந்திக்குப்பாதி
வெடியுப்பு முயற்சியாய்ப் பொடிபண்ணி வைத்துக்கொண்டு
தேற்றான
ஈயத்தைச்சட்டியிலேயுருக்கிச் சிறப்பாகப் பொடியிட்டு வருத்திடாயே
விளக்கவுரை :
[ads-post]
948. வறுத்திடவே பொடிபோலே
யீசஞ்சாறு மாசற்றபொடியெல்லாங் கலசத்திட்டு
நிறுத்திடவே கலசத்தில்
அரைவாசியிட்டு நேராதமேல்மூடிச் சீலைசெய்து
கறுத்திடவே யடுப்பேற்றிப்
பனிரண்டுசாமங்காலம் போவெரியிட்டு வுடைத்துவாங்கி
மறுத்திடவே பார்த்தாக்கால்
கம்பிபோலாம் மாசற்றமிருதாசிங்கியாமே
விளக்கவுரை :
949. ஆமப்பா பாஷாணம்
முப்பத்திரண்டு மப்பனேவைப்பதனைச் சொல்லிப்போட்டேன்
ஓமப்பா சித்தர்சொன்ன
நூலைப்போல ஒளித்துவைத்து சொல்லவில்லை
காமப்பா கருவெல்லாம்
ஆராய்ந்துபார்த்து நலமாகவொவ்வொன்றாய் பார்த்துகண்டு
சேமப்பா
ஏழாயிரஞ்சிக்கில்லாமல் சிறப்பாக வெளியாகத் திறந்திட்டேனே
விளக்கவுரை :
950. திறந்திட்ட சிவயோகி சித்தர்ஞானி சீராகப்பிழைக்கவென்று திருவுளத்துக்கொப்பாய்
திறந்திட்டேன்
சித்தருடன்வாதுகொண்டுச் சிவயோகிபரம்மநிஷ்டை முனிகளுக்காய்
திறந்திட்டேனாத்தா
சொல்லக்கேட்டுக்கேட்டுத் தேகசித்தியாகவென்று லோகத்தோர்கள்
திறந்திட்டேன்
தேவியுடபூசைக்காகச் சிவசொத்தை வறுமைபோலுண்டாயே
விளக்கவுரை :