போகர் சப்தகாண்டம் 941 - 945 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 941 - 945 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

941. வீரமிட்டால் சிவப்பாகுஞ் ஜெயநீரப்பா வீறுபட்ட சூதமது மதயானையொக்கும்
வாரமிட்ட புலிகையிலாடுபோல அடர்ந்துபோஞ் ஜெயநீரைகண்டவுடனப்பா
காரமிட்ட சூதத்தைக் கல்வத்திட்டுக் கடியதொருஜெயநீரால் மூன்றுநாளாட்ட
தூரமிட்ட வெண்ணெய்போலாகும்பாரு துடியான மத்தங்காய்க்குள் வைத்துவாட்டே

விளக்கவுரை :


942. வாட்டியே ஏழுபுடம்போட்டெடுத்து வரிசையாய்க் கரண்டிதனில் வெண்ணெய்குத்தியுருக்கி
பூட்டியே யெடுத்துப்பார் நாகத்துமீன்போல் புகழாகப் பளிச்சென்று மணியுமாகும்
ஊட்டியே உபசரங்கள் நூற்றிரண்டுபத்து உத்தமனே பாஷாணமறுபத்துநாலு
தீட்டியே லவணவகை இருபத்தைந்து திரமாகவாட்டினம் நவலோகத்தூடே

விளக்கவுரை :

[ads-post]

943. ஊட்டுமே சத்தெடுத்து விடுவித்தாக்கா லுத்தமனே சாரனைதானொன்றேயாச்சு
பூட்டிமேயிப்படியே இருபத்தொன்று போக்கான சத்தெடுத்துக் கொடுத்துகக்கில்
யாட்டுமே நிஜரூபமென்ற குளிகையாச்சு அண்டமுதல் பதங்களெல்லாம் நிமைக்குள்புக்கி
சூட்டுமே நீமீண்டுவருங்குளிகைவேதம் சுரூபசித்துங் கவனசித்துஞ் சுருக்கம்பாரே

விளக்கவுரை :


944. சுறுக்காகத் தாம்பரத்தின் சுன்னம்கேளு சுளுகாமம் புளியிலைபோல் தகடுவாங்கி
முறுக்காகப் பலமெட்டு நிறுத்துக்கொண்டு முனையான பழச்சாற்றி லூறவைத்து
நறுக்காகக் கழுவியதை யெடுத்துக்கொண்டு நாறுகின்ற செம்பினிய வூறல்போக்கி
அறுக்காக வெள்ளீயஞ் சட்டியிலேயுருக்கி இதமாக நிமிளைதனைப் பொடியாய்பண்ணே

விளக்கவுரை :


945. பண்ணியதோர் பொடிதானும் வங்கத்திலுருக்கு பரவியதோர் சமபாகம் நிறுத்துக்கொண்டு
ஒண்ணியதோர் வெடியுப்பு நிமிக்குப்பாதி யுத்தமனே பொடியாக்கி வேறேவைத்து
நண்ணியதோர் வங்கம்நின்றுருகும்போது நலமாக வொவ்வொன்றாய் மாறிமாறி
கண்ணியதோர் வங்கத்தில் போட்டுக்கிண்டு கசகாமல் சுன்னமதுவாகும்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar