போகர் சப்தகாண்டம் 746 - 750 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

746. தீரவே புடம்போட்ட மருந்துதன்னை திராவகத்தாலளர தீதுருட்டி மெழுகுபோல
ஆறவே முன்னுப்பில் கவசங்கட்டி அசையாதே கலசத்தில் பூநீறுவைத்து
ஊரவே அதின்மேலே உப்பைவைத்து உத்தமனே மேலுமந்த பூநீறுபோட்டு
தேறவே சில்லிட்டு சீலைசெய்து தீர்க்கமாய்க் கெஜபுமாய்ப் போட்டுவாங்கே

விளக்கவுரை :


747. வாங்கியே உப்புபண்ணி பார்த்தால் வயிரம்போல் இருகியாது தங்கல்போலாம்
ஓங்கியே கரியில்வைத்து உருக்கிப்பாரு உத்தமனே தங்கம்போல் கண்விட்டாடும்
தேங்கியே கரியில்நின்று கம்மித்தானால் சிறப்பாக முன்போல புடத்தைப்போடு
ஏங்கியே ஒருவருடன் பேசவேண்டாம் ஏத்தியே கடுங்காரச் சுன்னத்திலூதே 

விளக்கவுரை :

[ads-post]

பாலரசம்

748. சுன்னமென்ற குளிகைதன்னில் ஊதிப்பின் மைந்தா துடிராகப்பலம்நாலு நிறுத்திக்கொண்டு
சுன்னமென்ற திராவகத்தில் இதனைப்போட்டு கயறவே மத்தித்து வைத்துக்கொண்டு
பன்னமென்ற சூதமது பலந்தானெட்டு பாய்ச்சியே கல்வத்தில் திராவகத்தைப்பாறு
சின்னமென்ற சாமமொன்று அரைத்துநன்றாய் சிறப்பாக ரவிதனிலே போட்டிடாயே

விளக்கவுரை :


749. போட்டுவா யரைத்தரைத்து ரவிதனிலேயப்பா புகழாக மாதமொன்று மறவாமல்நீயும்
காட்டுவாய் சூதமது சிவப்பேயாகும் கண்டுகொள்ளா வேதையுமாம் கண்டுகொள்ளு
நீட்டவே குகையில்வைத்து காயவைத்து நினைவாகக் கையிடேகுளிர்ந்துபோகும்
பூட்டுவா வெந்நீரைக் கொப்பரையில் காய்ச்சி புகழாக துளிசூதம் அதுக்குள்போடே

விளக்கவுரை :


750. போட்டுடனே சூதந்தண்ணீர் போலேயாகும் போக்கான பலரசம் பரிட்சை செம்மை
காட்டுடனே நாலுபலம் நிறுத்துக்கொண்டு நலமான தங்கமது பலந்தானொன்று
பூட்டுடனே கல்வத்தில் இதனைப் போட்டு புகழான கருந்துளசி சாறுவிட்டு
தொட்டுடனே நாள்மூன்று அரைத்துபின்பு துடியான கெந்தகத்தை சேருபோடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 741 - 745 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

741. போட்டெல்லாம் பாங்கியுடன் சாராயம் வார்த்து பொருந்தவே மூன்றுநாள் ஆட்டுஆட்டு
ஆட்டெல்லாம் ரவியிலிட்டு ஐந்துபங்கு பண்ணி அப்பனே ஒருபங்கு கலசத்திலிட்டு
பூட்டெல்லாம் மாலையென்று சட்டிமூடி பகழாக மாஷத்தால் சீலைசெய்து
மூட்டெல்லாம் அடுப்பேற்றி பீங்கான் வைத்து முயற்சியாய் திராவகத்தை வாங்கிடாயே

விளக்கவுரை :


742. வாங்கிட்ட திராவகத்தை மறுசரக்கிலூற்றி வளமாக ரவியிலிட்டு கலசத்திற்போட்டு
தேங்கிட்ட திராவகத்தை வாங்கித்தீரு சிறப்பாக ஐந்து தரம் இப்படியே வாங்கு
பாங்கிட்ட அரக்காலே குப்பிபண்ணி பதனமாய் மூடிவைத்து பாங்கைக்கேளு
தேங்கிட்ட பாறையுப்பு பலமீரேழு சிறப்பாக திராவகத்தில் தோய்த்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

743. தோய்த்துமே தினமேழு ரவியிற்போடு தொன்மையாம் வெடியுப்பு சீனாக்காரம்
காய்த்துமே கடல்நுரையும் சூடனீந்து கலங்காத பூநீரில் காரம்வீரம்
தேய்த்துமே நவாச்சாரம் துரிசு வெள்ளை சிறப்பாகப்பதினொன்று திராவகத்திலாட்டி
ஏய்த்துமே வில்லைகட்டு ரவியிற்போடு இதமாக அகலிட்டு அவிர்ப்புடமாய்ப்போடே

விளக்கவுரை :


744. புடம்போடு அரைத்தரைத்து ஐந்துதரந்தானும் புகழாக எருவெடுத்து பத்துமட்டும்
திடம்போடு திராவகத்தில் பலந்தானேழு சிறப்பான புடம்போட மருந்தைதானும்
கடம்போடு குழம்பாக கரைத்துக்கொண்டு கல்லுப்பில் பிசறியல்லோ கரியோட்டில்வாட்டு
கடம்போடு குழம்பெல்லாம் தோய்த்து தோய்த்து வாட்டுவாட்டே

விளக்கவுரை :


745. வாட்டியே கவிசுக்கு மருந்துகேளு வகையாக பேறனென்ற கிளிஞ்சல்தன்னை
வாட்டியே சுண்ணாம்புஞ் சவுட்டுமண்ணில் கலங்காதே தண்ணீரில் கலந்துகொண்டு
மூட்டியே தீயெறித்து வற்றுமட்டும் உத்தமனே புடம்போட்டுத்தூளாய்ப்பண்ணி
நாட்டதியே திராவகத்தால் அரைத்தரைத்து நலமாக ஐந்துபுடம்போட்டுத்தீரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 736 - 740 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

736. ஏற்றியே வானுகையின்மேலேவைத்து இதமாகத் தீயெரித்து பனிரண்டுசாமம்
போற்றியே யாறவிட்டு எடுத்துக்கொட்டி புகழாகத்திராவகத்தில் அரைத்துலர்த்தி
தூற்றிய கொடிபோலே குப்பிக்கிட்டுச் சகமான வானுகையின்மேலேவைத்து
பாற்றியே பனிரண்டு சாமந்தானும் பக்குவமாய் தீயெரித்து ஆறவிட்டுவாங்கே

விளக்கவுரை :


737. வாங்கியெல்லாம் முன்போலே அரைத்தெடுத்து வரிசையாய் ஐந்துமுறைதீர்ந்துயேறு
தாங்கியே செந்தூரம் அருணன்போலே தலத்திலே இருக்குமப்பா இதனின்வேதை
ஓங்கியே கோடிக்கு ஒன்றுஓடும் உத்தமனே கதலியுட பழத்தைவாங்கி
தேங்கியே பணவிடைதான் உள்ளேகொள்ள சிவசிவாசூரியன்போல்தேகமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

738. ஆச்சப்பா திராவகத்தில் அனந்தம் வித்தை ஆராய்ந்து ஒவ்வொன்றாய்ப் பார்த்துத்தேறு
ஏச்சப்பா கட்டினமோ உருக்கினமோ கோடியெடுத்தோடும் குளிகைமுதல் செந்தூரங்கோடி
வாச்சப்பா சுன்னமுதல் களங்குகோடி வழங்கியதோர் குருக்கோடி மெழுகுகோடி 
பாச்சப்பா ஒவ்வொன்றில் வேதைகோடி பரிட்சிக்க தூமமுதலெட்டுமாமே

விளக்கவுரை :


துரிசி திராவகம்

739. ஆமென்ற துரிசியுட திராவகத்தைச் சொல்வேன் அப்பனே துரிசியொரு பலந்தான் நூறு
காமென்ற வெடியுப்பு பலந்தான் நூறு கலங்காத சீனமது பலந்தான் நூறு
வேமென்ற சவுட்டுவுப்பு பலமுமைந்து வெகுளாலே வளையலுப்பு பலமுமைந்து
தாமென்ற கெந்தியுப்பு பலமுமைந்து தயங்காதே இந்துப்பு பலமுமைந்தே  

விளக்கவுரை :


740. அஞ்சோடு சத்தியென்ற காரம்பத்து அப்பனே கல்லுப்பு பலமும்பத்து
நஞ்சோடு வீரமது பலமும் மூன்று நவாச்சாரமும் பத்துபலம்போடு
பிஞ்சோடு கருவங்கம் பலமுமூன்று பேசாதே வாதனையுப்பு உருவியுப்பு
பஞ்சோடு மணியுப்பு மேனியுப்பு பதறாதே ஒவ்வொன்றும் பலமும்போடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 731 - 735 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

731. இருக்கவே லோகமென்ற திராவகத்தை யியம்பிடவே பானந்தா உற்றுக்கேளு
பருக்கவே வெடியுப்பு பலந்தானூறு பரவியதோர் சீனமது எண்பத்தைந்து
சுருக்கவே துரிசியது நாற்பதாகும் சுளுவான சாரமது இருபதாகும்
உருக்கவே கல்லுப்பு பலந்தான்பத்து உயர்த்தியாம் பூநீறு பலந்தானஞ்சே 

விளக்கவுரை :


732. அஞ்சானசத்தியென்ற சாரம்நாலு அழகான கெந்தியுப்பு பலந்தான் மூன்று
வஞ்சான வுருவியுப்பு பலந்தானொன்று வகையெல்லாம் பொடித்துயொரு சட்டியிட்டு
கஞ்சான கழுதையுட ரத்தம் வார்த்து கடுகரைத்து ஏழுநாள்ரவியிற்போடு  
அஞ்சான அடிகனத்த கவாசத்திட்டு துடியறவே அடிக்கவசமட்டும் போடே

விளக்கவுரை :

[ads-post]

733. போட்டதன்மேல் சக்கரமாம் பாலைச்சுட்டி பொருந்தவே மேல்கவிழ்ந்து மாலும்தன்னால்
நாட்டதின்மேல் சீலைசெய்து ரவியில்வைத்து நலமாகவடுப்பேற்றி யெறிலயமாக
நீட்டதின்பின் பீங்கானால் கிண்ணிவைத்து நேர்ப்பாக சட்டியின்மேல் தண்ணீர்குத்தி
பூட்டதின்மேல் புகைபோடச் சலந்தான்வீழும் பொருந்திமுன்னீர்தனைதகற்றி பின்னீர்வாங்கே

விளக்கவுரை :


734. வாங்கியே முன்வைத்த சரக்குதன்னை வகையாக ஐந்துபங்குபண்ணிவைத்து
தேங்கியே ஒருபங்கில் தனையூத்து சிறப்பாக முன்போலே கவசத்திட்டு
தாங்கியே அடுப்பேற்றி யெரித்துவாங்கி சாதகமாய்முன்போலே மறுசரக்கிலூற்றி
பாங்கியே யுலரவிட்டு கவசத்திட்டு பக்குவமாய் ஐந்துதரம் இப்படியேவாங்கே

விளக்கவுரை :


735. வாங்கியே அரக்காலே குப்பிபண்ணி வளமாக திராவகத்தை அதிலேவாரு 
தேங்கியே சூதமொரு பலந்தானெட்டு சிறப்பாக கல்வத்தில் இட்டுக்கொண்டு
வாங்கியே தினமூன்று திராவகத்தாலாட்டி மறுபீங்கான்தன்னிலே வழித்தெடுத்து
தாங்கியே கரியோட்டில் வறுத்துக்கொண்டு சமரசமாய்ப் பொடிபோலே மேறுக்கேற்றே

விளக்கவுரை :


Powered by Blogger.