போகர் சப்தகாண்டம் 746 - 750 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 746 - 750 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

746. தீரவே புடம்போட்ட மருந்துதன்னை திராவகத்தாலளர தீதுருட்டி மெழுகுபோல
ஆறவே முன்னுப்பில் கவசங்கட்டி அசையாதே கலசத்தில் பூநீறுவைத்து
ஊரவே அதின்மேலே உப்பைவைத்து உத்தமனே மேலுமந்த பூநீறுபோட்டு
தேறவே சில்லிட்டு சீலைசெய்து தீர்க்கமாய்க் கெஜபுமாய்ப் போட்டுவாங்கே

விளக்கவுரை :


747. வாங்கியே உப்புபண்ணி பார்த்தால் வயிரம்போல் இருகியாது தங்கல்போலாம்
ஓங்கியே கரியில்வைத்து உருக்கிப்பாரு உத்தமனே தங்கம்போல் கண்விட்டாடும்
தேங்கியே கரியில்நின்று கம்மித்தானால் சிறப்பாக முன்போல புடத்தைப்போடு
ஏங்கியே ஒருவருடன் பேசவேண்டாம் ஏத்தியே கடுங்காரச் சுன்னத்திலூதே 

விளக்கவுரை :

[ads-post]

பாலரசம்

748. சுன்னமென்ற குளிகைதன்னில் ஊதிப்பின் மைந்தா துடிராகப்பலம்நாலு நிறுத்திக்கொண்டு
சுன்னமென்ற திராவகத்தில் இதனைப்போட்டு கயறவே மத்தித்து வைத்துக்கொண்டு
பன்னமென்ற சூதமது பலந்தானெட்டு பாய்ச்சியே கல்வத்தில் திராவகத்தைப்பாறு
சின்னமென்ற சாமமொன்று அரைத்துநன்றாய் சிறப்பாக ரவிதனிலே போட்டிடாயே

விளக்கவுரை :


749. போட்டுவா யரைத்தரைத்து ரவிதனிலேயப்பா புகழாக மாதமொன்று மறவாமல்நீயும்
காட்டுவாய் சூதமது சிவப்பேயாகும் கண்டுகொள்ளா வேதையுமாம் கண்டுகொள்ளு
நீட்டவே குகையில்வைத்து காயவைத்து நினைவாகக் கையிடேகுளிர்ந்துபோகும்
பூட்டுவா வெந்நீரைக் கொப்பரையில் காய்ச்சி புகழாக துளிசூதம் அதுக்குள்போடே

விளக்கவுரை :


750. போட்டுடனே சூதந்தண்ணீர் போலேயாகும் போக்கான பலரசம் பரிட்சை செம்மை
காட்டுடனே நாலுபலம் நிறுத்துக்கொண்டு நலமான தங்கமது பலந்தானொன்று
பூட்டுடனே கல்வத்தில் இதனைப் போட்டு புகழான கருந்துளசி சாறுவிட்டு
தொட்டுடனே நாள்மூன்று அரைத்துபின்பு துடியான கெந்தகத்தை சேருபோடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar