போகர் சப்தகாண்டம் 766 - 770 of 7000 பாடல்கள்
766. கட்டிவைத்து முன்போலே
புடத்தைப்போடு காணப்பா ஏழுபுடம்போட்டுத்தீரு
அட்டிவைத்த தந்தம்போல்
இருக்கும்பாரு ஆச்சரிய சாரத்தின்முடிவு சொல்லப்போகா
முட்டிவைத்து சாரத்தில்
செயநீர் கோடிமுதல் அண்டகுருக்கோடி செந்தூரங்கோடி
பொட்டிவைத்து திறந்ததுபோல்
வாதமாச்சு போக்கதிலே மெத்தவுண்டு புகட்டியாட்டே
விளக்கவுரை :
767. ஆடவேசாரத்தைக்கட்டியாக
அதின்மேலே சவ்வீரபூரம்போட்டு
நீடவேபகழோடு சூதமைந்தும்
நேரானவாய்நீரால் அரைத்துப்பூசி
கூடவேசண்ணாம்புக்
குகையிலிட்டு கூசாதே கரியோட்டிலூதிவாங்கு
சூடவே நீராகும்
பீங்கானில்வைத்து துடியாகப் பனியில்வைக்கச் செயநீராமே
விளக்கவுரை :
[ads-post]
768. மின்னஞ்செயநீரால்
சொல்லக்கேளு ஆச்சரியஞ் சூதவித்தைக் கல்வத்திட்டு
வேமுன்னஞ்செயநீரால்
அரைத்தரைத்து வெகுளாதே ரவிதனிலே காயப்போடு
தாமின்னம் இருபதுநாள்
அரைத்தரைத்து சார்பாக ரவிதனிலே காயப்போடு
சேமின்னம்
ஏழுசட்டைநீக்கிப்போடு சேர்ந்திருக்கும் சத்தானும் செய்திகேளே
விளக்கவுரை :
769. சேதிகள்தேங்காயின்
குடுக்கையிலே வார்த்து சிறப்பாக மெழுகடைத்து
வைத்துக்கொண்டு வாதிகேள்
ரவிமதியில் தகடுவாங்கி வளமான ரசம்தடவி
புடத்தைப்போடு பாதிகள்
பதினாறுமாற்றுமாகும் பாசத்தில் வேதையுமாம் பாருபாரு
சோதிகேளிந்தரசம் தின்றால்
காயஞ்சுறுக்காகச் சட்டைகக்கி வாலையாமே
விளக்கவுரை :
கெந்தகத்தயிலம்
770. ஆமின்னங்கெந்தகத்தின்
தயிலம்சொல்வேன் அப்பனேகெந்தகந்தான் பலமும்பத்து
காமின்னங்கற்றாழைக்குள்ளேவைத்து
கடுஆவின்நெய்ப்பாலிற் சுத்திப்பண்ணி
தேமின்னங்கல்வத்திலிதனைப்போட்டுச்
சிறப்பான குருக்த்திவிரையைவாங்கி
ஓமின்னமயிற்கொன்றை
விரையினூடே உற்பனமாய்ச் சமனாக்கி வெங்காய்ச்சாறே
விளக்கவுரை :