போகர் சப்தகாண்டம் 946 - 950 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

946. சுன்னமின்னமாவதற்கு வகையைக்கேளு துடியான வெண்கருவுமெருக்கம்பாலும்
வன்னமின்ன ரெண்டுமொன்றாய்க் கலக்கிக்கொண்டு வங்கத்தில்விட்டரைத்து வில்லைதட்டி
தின்னமின்ன வகலிலிட்டுப் புடத்தைப்போடு தீர்க்கமா யாறியபின்னெடுத்துவாங்கி
என்னமின்ன நாலுபலம் நிறுத்துக்கொண்டு இயலான சூதமது பலந்தானொன்றே

விளக்கவுரை :


947. மாற்றான மிருதாரு சிங்கிவைக்க மாணாக்கா சொல்லுகிறேன் மகிழ்வாய்க்கேளும்
காற்றான காரீயம்பலந்தான்பத்து கலரிதற்குள் நாலிலொன்று சரகெந்தியப்பா
மூற்றான கெந்திக்குப்பாதி வெடியுப்பு முயற்சியாய்ப் பொடிபண்ணி வைத்துக்கொண்டு
தேற்றான ஈயத்தைச்சட்டியிலேயுருக்கிச் சிறப்பாகப் பொடியிட்டு வருத்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

948. வறுத்திடவே பொடிபோலே யீசஞ்சாறு மாசற்றபொடியெல்லாங் கலசத்திட்டு
நிறுத்திடவே கலசத்தில் அரைவாசியிட்டு நேராதமேல்மூடிச் சீலைசெய்து
கறுத்திடவே யடுப்பேற்றிப் பனிரண்டுசாமங்காலம் போவெரியிட்டு வுடைத்துவாங்கி
மறுத்திடவே பார்த்தாக்கால் கம்பிபோலாம் மாசற்றமிருதாசிங்கியாமே

விளக்கவுரை :


949. ஆமப்பா பாஷாணம் முப்பத்திரண்டு மப்பனேவைப்பதனைச் சொல்லிப்போட்டேன்
ஓமப்பா சித்தர்சொன்ன நூலைப்போல ஒளித்துவைத்து சொல்லவில்லை
காமப்பா கருவெல்லாம் ஆராய்ந்துபார்த்து நலமாகவொவ்வொன்றாய் பார்த்துகண்டு
சேமப்பா ஏழாயிரஞ்சிக்கில்லாமல் சிறப்பாக வெளியாகத் திறந்திட்டேனே

விளக்கவுரை :


950. திறந்திட்ட சிவயோகி சித்தர்ஞானி சீராகப்பிழைக்கவென்று திருவுளத்துக்கொப்பாய்
திறந்திட்டேன் சித்தருடன்வாதுகொண்டுச் சிவயோகிபரம்மநிஷ்டை முனிகளுக்காய்
திறந்திட்டேனாத்தா சொல்லக்கேட்டுக்கேட்டுத் தேகசித்தியாகவென்று லோகத்தோர்கள்
திறந்திட்டேன் தேவியுடபூசைக்காகச் சிவசொத்தை வறுமைபோலுண்டாயே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 941 - 945 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

941. வீரமிட்டால் சிவப்பாகுஞ் ஜெயநீரப்பா வீறுபட்ட சூதமது மதயானையொக்கும்
வாரமிட்ட புலிகையிலாடுபோல அடர்ந்துபோஞ் ஜெயநீரைகண்டவுடனப்பா
காரமிட்ட சூதத்தைக் கல்வத்திட்டுக் கடியதொருஜெயநீரால் மூன்றுநாளாட்ட
தூரமிட்ட வெண்ணெய்போலாகும்பாரு துடியான மத்தங்காய்க்குள் வைத்துவாட்டே

விளக்கவுரை :


942. வாட்டியே ஏழுபுடம்போட்டெடுத்து வரிசையாய்க் கரண்டிதனில் வெண்ணெய்குத்தியுருக்கி
பூட்டியே யெடுத்துப்பார் நாகத்துமீன்போல் புகழாகப் பளிச்சென்று மணியுமாகும்
ஊட்டியே உபசரங்கள் நூற்றிரண்டுபத்து உத்தமனே பாஷாணமறுபத்துநாலு
தீட்டியே லவணவகை இருபத்தைந்து திரமாகவாட்டினம் நவலோகத்தூடே

விளக்கவுரை :

[ads-post]

943. ஊட்டுமே சத்தெடுத்து விடுவித்தாக்கா லுத்தமனே சாரனைதானொன்றேயாச்சு
பூட்டிமேயிப்படியே இருபத்தொன்று போக்கான சத்தெடுத்துக் கொடுத்துகக்கில்
யாட்டுமே நிஜரூபமென்ற குளிகையாச்சு அண்டமுதல் பதங்களெல்லாம் நிமைக்குள்புக்கி
சூட்டுமே நீமீண்டுவருங்குளிகைவேதம் சுரூபசித்துங் கவனசித்துஞ் சுருக்கம்பாரே

விளக்கவுரை :


944. சுறுக்காகத் தாம்பரத்தின் சுன்னம்கேளு சுளுகாமம் புளியிலைபோல் தகடுவாங்கி
முறுக்காகப் பலமெட்டு நிறுத்துக்கொண்டு முனையான பழச்சாற்றி லூறவைத்து
நறுக்காகக் கழுவியதை யெடுத்துக்கொண்டு நாறுகின்ற செம்பினிய வூறல்போக்கி
அறுக்காக வெள்ளீயஞ் சட்டியிலேயுருக்கி இதமாக நிமிளைதனைப் பொடியாய்பண்ணே

விளக்கவுரை :


945. பண்ணியதோர் பொடிதானும் வங்கத்திலுருக்கு பரவியதோர் சமபாகம் நிறுத்துக்கொண்டு
ஒண்ணியதோர் வெடியுப்பு நிமிக்குப்பாதி யுத்தமனே பொடியாக்கி வேறேவைத்து
நண்ணியதோர் வங்கம்நின்றுருகும்போது நலமாக வொவ்வொன்றாய் மாறிமாறி
கண்ணியதோர் வங்கத்தில் போட்டுக்கிண்டு கசகாமல் சுன்னமதுவாகும்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 936 - 940 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

936. வைத்திட்டுத் தீயெரிப்பாய் எட்டுநாள்தான் மாராமலிரவுபகலாறாமற்றா
னைத்திட்டு அடியதனில் தானேநிற்கும் நலமாகஆறவிட்டு உடைத்துவாங்கி
கைத்திட்டு கம்பியாயருணன்போலக் கட்டியாதிருக்குமப்பா ரத்தச்சிங்கி
பைத்திட்டு யிதினுடைய ஆட்டினாலே பத்துயுகமாடியல்லோ கரைகாணேணே

விளக்கவுரை :


937. கரைகாணா ரத்தசிங்கி பலந்தான்பத்து கலரிதற்குள் சூதமதுபலமும்பத்து
உரைகாணாக் கெந்தகமும் பலமும்பத்து உகந்துநின்ற வெடியுப்புப் பலமுமைந்து
பரைகாணா தாளகமும் பலமுமொன்று பரிவான சிலையதுவும் பலமுமொன்று
புரைகாணா வுரிசார்விட்டுயாட்டுப் பேரானநாள்மூன்று அரைத்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

938. மூன்றுநாள ரைத்திட்டுப் பொடியாய்ப்பண்ணி முயற்சியாய்க் காசிபென்ற மேருக்கேற்றி
பூணுநாள் வாலஉகையின் மேலேயாற்றிப் பொருந்தவே தீமூட்டுமூன்றுநாள்தான்
தோணுநாளாறவிட்டு உடைத்துவாங்கி துடியான யேமமென்ற சிங்கியாச்சே
வீணுநாள்போகாமல் வீசமிடையுண்ணு மேனியுமே தங்கநிறமாகும்பாரே

விளக்கவுரை :


939. தங்கநிறமானாக்கால் மேனிதானும் சாவேதுநோவேது கற்பாந்தகாலம்
மங்களமாம் பெண்மாய்கை தனையகற்றி பாழானபுளிப்பைத்தள்ளிவிட்டு
சங்குநிறமாகவே பாலிலுண்ணு சாவென்றதது பொய்யா மூகாந்தவரைநிற்கும்
கொங்கநிறமாகவுந்தான் லோகந்தன்னில் கொடுத்திடவே பதினாறு மாற்றுமாமே

விளக்கவுரை :


940. புடம்போட்டு யெடுத்துடனே குருவுமாகும் புகழாக நாலிலொன்று காரங்கூட்டி
திடம்போட்டுக் கல்வத்திலிட்டுயாட்டிச் சீராக நாற்சாமமாட்டுமாட்டு
தடம்போட்டு அண்டோட்டிலிட்டுமூடிச் சார்பாக புடம்போட்டு பணியில்வைக்க
நடம்போட்ட யாறுபோல் ஜெயநீராகும் நலமாக இந்நீரில் வீரம்போடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 931 - 935 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

931. அஞ்சான பூநீறுகாசுஐந்து ஆதியென்ற கெவுரியது காசுஐந்து
பிஞ்சான கெந்தகமும் காசுஐந்து பேசாத சிலையதுவும் காசுஐந்து
மஞ்சான வீரமது காசுமைந்து மாசற்ற லிங்கமுந்தான் காசுமைந்து
துஞ்சான தாளகமுங் காசுமைந்து துடியான வெடியுப்பு காசுமைந்தே

விளக்கவுரை :


932. காசுதானைந்தாகும் சீனமப்பா கலந்திந்த இடையெல்லா மறுபதாச்சு
மாசுதான் சூதமதும் அறுபதாகும் வாகான கல்வத்திலிட்டுக்கொண்டு
ஆசிதானேர்வானத் தயிலத்தாலே ஐந்துநாளரைத்து நன்றாய்வில்லைகட்டி
தூசுதான் நிழலுலர்த்தி அயத்தகடுக்குளழுத்தி துப்புரவாய்க் கிண்ணியைத்தான் பதித்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

933. பதித்திடவே யரைத்துநன்றாய் சீலைசெய்து பாங்கான முன்னிசைத்த மெழுகினாலே
நிதித்திட்டு இலுப்பைநெய்யால் விளக்குவைத்து நேராகவிளக்கெரிப்பாய் மூன்றுநாள்தான்
கொதித்திட்ட ரசமெல்லாம் பதங்கமேறுங் கொள்கியந்த பதங்கத்தைக் கத்திகொண்டுவாங்கி
விதித்தி ட்ட நவலோகம் நூற்றுக்கொன்றி விரைந்ததுவும் பனிரண்டு மாற்றுமாமே

விளக்கவுரை :


934. மாற்றான ரத்தசிங்கி வைப்புகேளு மருவியதில் காயசித்தி லோகசித்தியாகும்
கூற்றானயெமன்போலே சுருக்குமெத்த கொடியவிஷசூதத்தை நிமைக்குமுன்னே கொல்லும்
காற்றான காரீயம்பொடிபலந்தான்பத்து கனகத்தின்பொடிதானும் ரண்டரையேபலந்தான்
னீற்றான நாகத்தின் பொடிபலந்தானைந்து நெல்லிக்காய்க் கெந்தகந்தான் பலம்பத்துபோடே

விளக்கவுரை :


935. பத்துடனே வெடியுப்புப் பலமுமைந்து பாங்கான தாளகமும் பலமும்நாலு
கொத்துடனே குதிரைப்பல் பாஷாணமூன்று கொடிதான சாராயம் விட்டுஆட்டி 
சித்துடனே லோகமெல்லாம் கரையுமட்டுஆட்டி சிறப்பாக ரவியிலிட்டுப் பொடியாய்பண்ணி
மூத்துடனே காசிபென்ற மேருக்கேற்றி மூதண்டவாலுகையில் வைத்திடாயே

விளக்கவுரை :


Powered by Blogger.