போகர் சப்தகாண்டம் 986 - 990 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

986. செய்யவேசீலையதுவலுவாய்ச்செய்து ஜெயம்பெறவே வாலுகையாமேந்திரத்தில்
பையவே பாண்டமதை யடுப்பிலேற்றி பாங்கான கணபதிக்குப் பூசைசெய்து
துய்யவே மனோன்மணியால் பாதம்போற்றி துப்புரவாய்ச் சின்மயத்தை மனதிலுன்னி
வெய்யவே நாற்சாமமெரித்தபோது வேதாந்தசிந்தூரம்போலேயாச்சே

விளக்கவுரை :


987. ஆச்சப்பா செந்தூர மென்னசொல்வேன் அப்பனே நாதாக்கள்செய்யும்வேதை
மூச்சடக்கிக் காலாங்கிநாதர்தாமும் மூதுலகில் சமாதிமுகஞ்சென்றபோது
பாச்சனுடனெந்தனுக்கு வுபதேசித்த பாங்கான செந்தூர வேதையப்பா
ஆச்சரியமானதொரு சித்துவேதை ஆகாகா நாதாக்கள்வேதைதானே

விளக்கவுரை :

[ads-post]

988. தானானசெந்தூர மாரிப்பின்பு தாக்கானசோடசமாம் பூசைமார்க்கம்
கோனான குருவருளை முன்னேயெண்ணி கொற்றவனே லட்சமுறு மோதுவோது
தேனான மனோன்மணியும் நிர்த்தஞ்செய்வாள் தெகமதிலுந்தனுக்கு வாதஞ்சித்தி
மானானமகதேவர் கடாட்சத்தாலே மதியமுர்தங் கொண்டுமல்லோ வாழ்குவீரே

விளக்கவுரை :


989. வாழ்கவென்றால் செந்தூரந்தனையெடுத்து வளமான வெள்ளியது நூற்றக்கொன்று
தாழ்கவே தானுருக்கி கொடுத்தாயானால் தப்பாது மாற்றுபனிரண்டதாகும்
மூழ்கவே புடந்தனுக்கு யேகாதப்பா மூதுலகில் நவகண்டர் செய்யும்வேதை
வேழ்விமுகந் தானிருந்து வம்பால்பூசை மேதினியில் செய்துமல்லோ வெடுத்திடாயே

விளக்கவுரை :


990. எடுத்திடவே யேமமதுயென்னசொல்வேன் யெழிலான வைப்பதுவும் பிறவித்தங்கம்
கொடுத்திடவே செம்பதனில் நூற்றுக்கொன்று கொற்றவனே தானுருக்கிக்கொடுத்தபோது
தடுத்திடாவர்ணத்து சோடகமுமாகும் தாக்கான செம்பதுவும் தங்கச்செம்பாம்
கொடுத்திடா சமுசாரிக்கானவேதை கேசரத்திலிந்தவருஞ் செய்யலாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 976 - 980 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

976. நாலானசாமமது வரைத்ததின்பு நலமான சரக்கதுவும் மெழுகதாகும்
காலானமெழுகுதனை எடுத்துமைந்தா கலங்காமல் மூசைதனி லடைத்துக்கொண்டு
மாலானரவிதனிலே காயவைத்து மார்க்கமுடன் குகைதனிலேயேற்றியேதான்
பாலான துரித்தியது நன்மதாகும் பாலகனே தானுவந்து வூதிடாயே

விளக்கவுரை :


977. ஊதவேவங்கமது யென்னசொல்வேன் வுத்தமனே களங்கென்ற சத்துமாச்சு
நீதமுடன் சரக்கதுவும் சேர்ந்துமல்லோ நிட்களங்கமானதொரு வெள்ளையாச்சு
தோதமுடன் சவளைக்கு நாலுக்கொன்று துப்புரவாய்த் தங்கமதுவொன்றுங்கூட்டி
வாதமதுசெய்வதற்கு வழியுண்டாக்கி வளமுடையசத்துதனை யுருக்கிடாயே  

விளக்கவுரை :

[ads-post]

978. உருக்கிடவே யேமனென்ற சத்துமாச்சு வுத்தமனே கெந்தியது நாலுக்கொன்று
வருக்கமுடன் சூதமது இடைதான்கெந்தி வளமாகதான் சேர்த்துபொடித்துமைந்தா
பெருக்கமுடன் முப்புமென்ற பூநீரப்பா பேரான களஞ்சியது வொன்றேசேர்த்து
சுருக்கமுடன் பொற்கையான் சாற்றினாலே சுந்தரனே யரைத்திடுவாய் சாமம்நாலே

விளக்கவுரை :


979. சாமமதுநாற்சாம மரைத்தபின்பு சாங்கமுடன் ரவிதனிலே காயவைத்து
ஏமமென்ற பொடிதானும் காய்ந்தபின்பு யெழிலான மரக்கல்லால் கொண்டுமேதான்
நாமமென்ற வளையலது குப்பிதானும் நலமான சீலையதுயேழயஞ்செய்து
வாமமுடன் பொடியதனைக் குப்பிக்கேற்றி வளமான மரக்கல்லு கொண்டுமூடே

விளக்கவுரை :


980. மூடியேயேழுசீலை வலுவாய்ச்செய்து வுத்தமனே காய்ந்தாறி யெடுத்துமைந்தா
தேடியேதளவாயாம் மண்பாண்டத்தில் தேற்றமுடன் மணல்தனை விரல்நாற்போடு
கூடியேகுப்பிவாய்த் தெரியுமட்டும் கூசாமல் மணலதனைப்போடுபோடு
வாடியே மயங்காதே யருண்மைந்தாகேள் வளமாகமேல்மூடிச் சீலைசெய்யே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 971 - 975 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

971. உண்ணவே சங்கத்தின் செம்புகேளு ஒளியாகப் பலம்பத்துநிறுத்துக்கொண்டு
கண்ணவே ஐவேலிக் கொட்டைகோவை கலந்துநின்ற முசுமுசுக்கை மணித்தக்காளி
பண்ணவே அழுக்குறா ஆறுந்தானும் பலமும்வாங்கிச் சமமாகநிறுத்துக்கொண்டு
திண்ணவே நிழலுலர்த்திப் பூப்புடத்தில் சிறப்பாக வாங்கியல்லோ தயிலஞ்செய்யே

விளக்கவுரை :


972. செய்யப்பா தயிலத்தைவிட்டுஆட்டு சிறக்கவே எண்சாமம் வில்லைகட்டி
மெய்யப்பா ரவிதனிலே யுலரப்போடு மெதுவாகச் சீலைமண்ணேழுஞ்செய்து
வையப்பா வாலுகையில் தீயைமூட்டு மைந்தனே கைபாகம்நழுகிடாமல்
பொய்யப்பா போகாமல் சரவுலையிலூது போக்கெல்லாம் மணிமணியா யிறங்கும்பாரு

விளக்கவுரை :

[ads-post]

973. இறங்குகின்ற சரக்கெல்லாமெடுத்துக்கொண்டு எளிதாகக் கொடுக்குமுன் மருந்துகூட்டி
அறங்குகின்ற தயிலத்தாலரைத்தெடுத்து அடவாகவில்லைதட்டிச் சரவுலையிலூது
தாங்குகிற சத்தெல்லாமெடுத்துக்கொண்டு சார்பாக முன்போலவுருக்குமப்பா 
உறங்குகிற யானையைப்போல் சத்துவேக மொருநொடிக்குள் சூதமது விரைத்தப்போமே

விளக்கவுரை :


974. போமென்ற சூதத்தில் தங்கம்சேர்த்து பூவையாம் நாகமிட்டு கெந்தியிட்டு
ஆமென்ற வாலுகையில் செந்தூரித்தால் அருணன்போல் செந்தூரமாகும்பாரு
ஓமென்ற நவலோகம் நூற்றுக்கொன்று யுயர்ந்ததுவும்பதினாறு மாற்றமாகும்
தாமென்ற செந்தூரங்குன்றியுண்ணு சதகோடிவருடமெல்லாம் ஒருநாளாமே

விளக்கவுரை :


975. ஆமென்ற வக்கிராந்த சத்துகேளு அப்பனே பலம்பத்துநிறுத்துக்கொண்டு
ஓமென்ற வெண்காரம் பலந்தானைந்து உயர்ந்துநின்ற கெந்தியது பலமுமைந்து
வாமென்ற கௌரியது பலந்தான்ரண்டு வளமான சிங்கியது பலந்தானாலு
தேமென்ற மலைத்தேனாங்கதண்டுத் தேனுதீர்க்கமுடன் தானரைப்பாய்சாமம்நாலே

விளக்கவுரை :


Powered by Blogger.