971. உண்ணவே சங்கத்தின்
செம்புகேளு ஒளியாகப் பலம்பத்துநிறுத்துக்கொண்டு
கண்ணவே ஐவேலிக் கொட்டைகோவை
கலந்துநின்ற முசுமுசுக்கை மணித்தக்காளி
பண்ணவே அழுக்குறா
ஆறுந்தானும் பலமும்வாங்கிச் சமமாகநிறுத்துக்கொண்டு
திண்ணவே நிழலுலர்த்திப்
பூப்புடத்தில் சிறப்பாக வாங்கியல்லோ தயிலஞ்செய்யே
விளக்கவுரை :
972. செய்யப்பா
தயிலத்தைவிட்டுஆட்டு சிறக்கவே எண்சாமம் வில்லைகட்டி
மெய்யப்பா ரவிதனிலே
யுலரப்போடு மெதுவாகச் சீலைமண்ணேழுஞ்செய்து
வையப்பா வாலுகையில்
தீயைமூட்டு மைந்தனே கைபாகம்நழுகிடாமல்
பொய்யப்பா போகாமல்
சரவுலையிலூது போக்கெல்லாம் மணிமணியா யிறங்கும்பாரு
விளக்கவுரை :
[ads-post]
973. இறங்குகின்ற
சரக்கெல்லாமெடுத்துக்கொண்டு எளிதாகக் கொடுக்குமுன் மருந்துகூட்டி
அறங்குகின்ற
தயிலத்தாலரைத்தெடுத்து அடவாகவில்லைதட்டிச் சரவுலையிலூது
தாங்குகிற
சத்தெல்லாமெடுத்துக்கொண்டு சார்பாக முன்போலவுருக்குமப்பா
உறங்குகிற யானையைப்போல்
சத்துவேக மொருநொடிக்குள் சூதமது விரைத்தப்போமே
விளக்கவுரை :
974. போமென்ற சூதத்தில் தங்கம்சேர்த்து பூவையாம் நாகமிட்டு கெந்தியிட்டு
ஆமென்ற வாலுகையில்
செந்தூரித்தால் அருணன்போல் செந்தூரமாகும்பாரு
ஓமென்ற நவலோகம்
நூற்றுக்கொன்று யுயர்ந்ததுவும்பதினாறு மாற்றமாகும்
தாமென்ற
செந்தூரங்குன்றியுண்ணு சதகோடிவருடமெல்லாம் ஒருநாளாமே
விளக்கவுரை :
975. ஆமென்ற வக்கிராந்த சத்துகேளு
அப்பனே பலம்பத்துநிறுத்துக்கொண்டு
ஓமென்ற வெண்காரம்
பலந்தானைந்து உயர்ந்துநின்ற கெந்தியது பலமுமைந்து
வாமென்ற கௌரியது
பலந்தான்ரண்டு வளமான சிங்கியது பலந்தானாலு
தேமென்ற மலைத்தேனாங்கதண்டுத்
தேனுதீர்க்கமுடன் தானரைப்பாய்சாமம்நாலே
விளக்கவுரை :