போகர் சப்தகாண்டம் 986 - 990 of 7000 பாடல்கள்
986. செய்யவேசீலையதுவலுவாய்ச்செய்து
ஜெயம்பெறவே வாலுகையாமேந்திரத்தில்
பையவே பாண்டமதை
யடுப்பிலேற்றி பாங்கான கணபதிக்குப் பூசைசெய்து
துய்யவே மனோன்மணியால்
பாதம்போற்றி துப்புரவாய்ச் சின்மயத்தை மனதிலுன்னி
வெய்யவே நாற்சாமமெரித்தபோது
வேதாந்தசிந்தூரம்போலேயாச்சே
விளக்கவுரை :
987. ஆச்சப்பா செந்தூர மென்னசொல்வேன் அப்பனே நாதாக்கள்செய்யும்வேதை
மூச்சடக்கிக்
காலாங்கிநாதர்தாமும் மூதுலகில் சமாதிமுகஞ்சென்றபோது
பாச்சனுடனெந்தனுக்கு
வுபதேசித்த பாங்கான செந்தூர வேதையப்பா
ஆச்சரியமானதொரு சித்துவேதை
ஆகாகா நாதாக்கள்வேதைதானே
விளக்கவுரை :
[ads-post]
988. தானானசெந்தூர மாரிப்பின்பு
தாக்கானசோடசமாம் பூசைமார்க்கம்
கோனான குருவருளை
முன்னேயெண்ணி கொற்றவனே லட்சமுறு மோதுவோது
தேனான மனோன்மணியும்
நிர்த்தஞ்செய்வாள் தெகமதிலுந்தனுக்கு வாதஞ்சித்தி
மானானமகதேவர் கடாட்சத்தாலே
மதியமுர்தங் கொண்டுமல்லோ வாழ்குவீரே
விளக்கவுரை :
989. வாழ்கவென்றால்
செந்தூரந்தனையெடுத்து வளமான வெள்ளியது நூற்றக்கொன்று
தாழ்கவே தானுருக்கி
கொடுத்தாயானால் தப்பாது மாற்றுபனிரண்டதாகும்
மூழ்கவே புடந்தனுக்கு
யேகாதப்பா மூதுலகில் நவகண்டர் செய்யும்வேதை
வேழ்விமுகந் தானிருந்து
வம்பால்பூசை மேதினியில் செய்துமல்லோ வெடுத்திடாயே
விளக்கவுரை :
990. எடுத்திடவே
யேமமதுயென்னசொல்வேன் யெழிலான வைப்பதுவும் பிறவித்தங்கம்
கொடுத்திடவே செம்பதனில்
நூற்றுக்கொன்று கொற்றவனே தானுருக்கிக்கொடுத்தபோது
தடுத்திடாவர்ணத்து
சோடகமுமாகும் தாக்கான செம்பதுவும் தங்கச்செம்பாம்
கொடுத்திடா சமுசாரிக்கானவேதை
கேசரத்திலிந்தவருஞ் செய்யலாமே
விளக்கவுரை :