போகர் சப்தகாண்டம் 3886 - 3890 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3886. பாரேதான் வெகுகாலஞ் சமாதிபக்கல் பாரினிலே வருவாரும் போவாருண்டு
நேரேதான் அவர்களிடம் வார்த்தைபேசேன் நேர்யுடன் சமாதியிடம் பள்ளிகொள்வேன்
கூரேதான் சமாதியிடம் யிருந்துகொண்டு கொப்பெனவே தேவர்வருங்காலமட்டும்
ஊரேதான் போகாமல் காத்திருந்து உறுதியுடன் சேர்வையது கண்டிட்டேனே

விளக்கவுரை :


3887. கண்டிட்டேன் என்தேவா குருவேயென்ன கருவான யாக்கோபு மனதுவந்து
பண்டிதங்கள் கொண்டதொரு சீடனுக்கு பட்சமுடன் தானுரைப்பார் தரணிமீதில்
வண்டதுவும் மதுதனையே கவிழ்ந்தாப்போறும் மானபியாம்கோபு முனிவர்தாமும்
தண்டுலமான தொருதேகம்தானும் தாரிணியிலிருந் தென்னபலனுண்டாச்சே

விளக்கவுரை :

[ads-post]

3888. ஆச்சப்பா தேகமது நிலைநில்லாது வப்பனே லோகமெல்லாம் பொய்யேவாழ்வு
மூச்சடங்கி சமாதிதனிலிருந்துமென்ன மூதுலகில் பேருண்டாய்வாழ்ந்துமென்ன
பாச்சலுடன் சீடர்களுமாயிரம்பேர் பக்கமதில் தேகமதை கார்த்துமென்ன
மாச்சலுடன் மகாகோடி நிதிகளெல்லாம் மானிலத்தில் யான்தேடி வொன்றுங்காணேன்

விளக்கவுரை :


3889. காணேணே தேகமது காயகற்பம் கருவாக யான்கொண்டு பலனுமில்லை
தோணவே நாலுயுகமிருந்துமென்ன தொல்லுலகை யொருகுடையிலாண்டுமென்ன
வேணவே லாபமது வொன்றுங்காணேன் விண்ணுலகு காணுவது மெத்தநன்று
பூணவே சமாதிகொள்வேனென்று புகழுடனே சீடனுக்கு வுரைத்தார்தானே

விளக்கவுரை :


3890. தானான சீடனுக்குப் பின்னுஞ்சொல்வார் தன்மையுள்ள யாக்கோபு முனிவர்தாமும்
கோனான கபிநாயகன் சொன்னவாக்கு கொப்பெனவே குவலயத்தில் பொய்யாவண்ணம்
பானான மனோன்னமணியாள் கடாட்சத்தாலே பாரினிலே சமாதிக்குப் பின்னுஞ்சொல்வேன்
தேனான கண்மணியே சீடாபாலா தேகமதை நம்பவில்லை யென்றார்தாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3881 - 3885 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3881. முனியான யாக்கோபு சித்துதாமும் மூதுலகில் சமாதிவிட்டு வருகும்போது
கனியான நவக்கனிகள் ஒன்பதோடும் கடிதான ரொட்டியொன்று கையிலீந்தார்
தொனியான வாத்தியங்களோடுதானும் தோற்றமுடன் வையகத்தில் வருகும்போது
தனியான சீஷனவர் தன்னைப்பார்த்து தண்மையுடன் ஞானோபம் ஓதுவாரே  

விளக்கவுரை :


3882. ஓதுவார் யாக்கோபு முனிவர்தாமும் ஓகோகோ நாதாந்த சீஷருக்கு
நீதமுடன் ஞானோபதேசந்தன்னை நேர்மையுடன் தானுரைத்து புத்திகூறி
போதமுடன் சீடர்முகந் தன்னைநோக்கி பொங்கமுடன் யாக்கோபு கேட்கலுற்றார்
சாதமுடன் சமாதிக்கு சென்றபோது தாரிணியில் அதிசயங்கள் என்னென்றாரே

விளக்கவுரை :

[ads-post]

3883. என்றுமே யாக்கோபு சொன்னதற்கு எழிலாகச் சீஷனவர்தானுரைத்தார்
குன்றான என்தேவர் குருவேநாதா குவலயத்தை விட்டுமல்லோ சமாதிதன்னில்
அன்றுதான் போனவுடன் அவனிதன்னில் அனேகமாய்க் கூட்டமது மிகவாய்க்கூடி
இன்றுதான் யாக்கோபு சமாதிசென்றார் யினிதிரும்பி வருவதில்லை யென்றிட்டாரே

விளக்கவுரை :


3884. இட்டாரே வெகுமாண்பர் கும்பல்கூடி எழிலாக வேளிதங்கள் மிகவுஞ்சொன்னார்
திட்டமுடன் யாக்கோபு சமாதிசென்று திரும்பிவருங்காலமது யில்லையென்றார்
பட்டதொரு தேகமது மண்ணாய்ப்போச்சு பாரினிலே யாக்கோபு மடிந்துபோனார்
சட்டமுடன் யாக்கோபு மடிந்தாரென்று தாரிணியில் பெருங்கூச்சல் மிகஉதியாச்சே

விளக்கவுரை :


3885. ஆச்சப்பா யென்தேவா சாமிநாதா அவனிதனிலடியேனும் கேட்டிருந்தேன்
பேச்சடங்கிப் போனதொரு யாக்கோபுதானும் பேருலகில் வருவதுவும் பொய்யேயாகும்
கூச்சலுடன் வெகுமாண்பர் கும்பல்கூடி குவலயத்தில் வேகமுடன் வார்த்தைசொன்னார்
ஏச்சாகக் கூறினதோர் மொழிகட்கெல்லாம் எதிராக யானென்று பேசேன்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3876 - 3880 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3876. உறுதியாம் இன்னம்வெகு வதிசயங்கள் வுத்தமனே சொல்லுகிறேன் அன்பாய்க்கேளும்
குருடமுடன் வக்கினியாம் மாருபெய்யுங் குன்றின்மேல் காடெல்லாம் மெலிந்துகொல்லும்
சொரூபமுள்ள சித்தர்முனி ரிஷிகள்பேரில் சொர்னமழை பெய்வதும் மகிமையாகும்
அருமையுடன் தானியங்கள் எல்லாந்தங்கம் அப்பனே பொன்போலே வீசும்பாரே

விளக்கவுரை :


3877. பொன்னான மழைமாரிப் பொழியும்போது பொங்கமுடன் பூமிக்குள் இடியுண்டாகும்
சின்னமுடன் சமாதிதனில் கோஷ்டந்தானும் திறமுடனே பூமிதனில் கேட்கும்பாரு
மன்னவர்கள் ராசாதிராசரெல்லாம் மானிலத்தில் திசைமாறி போவார்கண்டீர்
துன்னவே சஊரியாள் சந்திராளும் துறைகாணார் திசைதனிலே நிற்பார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3878. நிற்பாரே வருந்துதிகள் அதிரங்காணும் நீணிலத்தில் மிருகமெலாம் ஞானம்கூறும்
அற்பமென்று நினையாதே அவனிதன்னில் ஆண்டவனார் நபிநாயன் கிருபைதன்னால்
சொற்பரிய சமாதிதன்னில் புத்துண்டாகும் சொர்ணமென்ற ஐந்துதலை நாகமப்பா
கற்பாறை மேலிருந்து ஞானம்சொல்லும் காசினியில் யாக்கோபு வருநாளாச்சே

விளக்கவுரை :


3879. ஆச்சென்று கூறுமப்பா நாகந்தானும் வவனியிலே யாக்கோபு வருவாரென்று
மூச்சடங்கிப் போனதொரு சித்துதாமும் மூதுலகில் வரப்போராரென்றுசொல்லி
பாச்சலுடன் நாகமது பரிந்துகூறும் பாருலகில் பார்த்தவர்கள் பிரமைகொள்வார்
கூச்சலுடன் நபிக்கூட்டமார்களப்பா கொற்றவனே சமாதியிடம் வருவார்பாரே

விளக்கவுரை :


3880. பாரேதான் பார்லோகம் தத்தளிக்கும் பாங்கான சமாதியது வெடித்துதங்கே
நேரேதான் யாக்கோபு முனிவர்தாமும் நேர்மையுடன் ஜெகஜோதிபோலேவந்தார்
சீரேதான் அல்லாவுத்தாலா வென்று சிறப்புடனே வாய்தனிலே கூறிக்கொண்டு
சேரேதான் வையகத்தில் வந்தாரப்பா சிறப்பான யாக்கோபு முனிவர்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3871 - 3875 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3871. இரங்கியே சமாதிதனிலிருந்துகொண்டு எழிலாகச் சீஷனுக்கு வதிதஞ்சொல்வார்
சுரங்கமென்ற குழிதனிலே போரேனப்பா ககுதிபொருள் கருவிகரணாதியெல்லாம்
வாங்கமுடன் வுள்ளடக்கி மனதிருந்தி வையகத்தின் வாழ்க்கையெல்லாம் தனையகற்றி
உரங்களுடன் பத்தாண்டு இருப்பேனென்று வுத்தமனே யாக்கோபு கூறினாரே

விளக்கவுரை :


3872. கூறினார் சமாதிதனிலிருந்துகொண்டு கொற்றவனே யென்சீஷர் குவாதெண்ணி
மாறிடவே கற்பாறைத் தன்னைமூடி மகத்தான சமாதிக்குப் பூசைமார்க்கம்
தேறிடவே தினந்தோறும் அர்ச்சித்தேதான் திறமுடனே நான்வருகுங்காலந்தன்னில்
வேறிவே எந்தனிட சமாதிமுன்னே விருப்பமுடன் காத்திருந்து காண்பீர்தானே

விளக்கவுரை :

[ads-post]

3873. தானேதான் நான்வருகுங்காலந்தன்னில் தகமையுள்ள வதிசயங்கள் மிகநடக்கும்
போனவுடன் மக்காவிலதிசயங்கள் பொங்கமுடன் நாவினாற் சொல்லொணாது
தேனமிர்தமானதொரு மழைதான்பெய்யும் தேசமெல்லாந் தேனாறுவோடும்பாரு
மானமிர்தமானதொரு வுத்தாரைவின் மார்க்கமுள்ள சமாதியது வெடிக்கும்பாரு

விளக்கவுரை :


3874. வெடித்தபின்பு வசரீரிவாக்குண்டாகும் வேதாந்த யாக்கோபு வருவாரென்று
மடிந்துவரும் மாந்தரெல்லாம் கடைசிநாளில் வையகத்தில் நாதாந்த நபியாருக்கு
துடியான குற்றமதை கேள்விகேட்டு துப்புறவாய் நாதாந்த நபியாருக்கு
முடியரசர் முதலானோர் முனிவர்தாமும் முன்னின்று கேள்விக்கு விடைசொல்வாரே

விளக்கவுரை :


3875. விடையான வார்த்தைக்கு வுறுதிசொல்லி மேன்மையுடன் பதவிக்கு இடமுந்தேடி
தடையறவே குற்றத்திற்காளதாகி தரணிதனில் வெகுபாவந் தலைமேற்கொண்டு
கடையான நாளதனில் பாவத்துக்காளாய்ப் பாருலகில் படுநரகம் வாய்க்கும்பாரு
குடையான கர்ணனாயிருந்திட்டாலும் குவலயத்தில் பாவத்துக்குறுதியாமே

விளக்கவுரை :


Powered by Blogger.