3876. உறுதியாம் இன்னம்வெகு
வதிசயங்கள் வுத்தமனே சொல்லுகிறேன் அன்பாய்க்கேளும்
குருடமுடன் வக்கினியாம்
மாருபெய்யுங் குன்றின்மேல் காடெல்லாம் மெலிந்துகொல்லும்
சொரூபமுள்ள சித்தர்முனி
ரிஷிகள்பேரில் சொர்னமழை பெய்வதும் மகிமையாகும்
அருமையுடன் தானியங்கள்
எல்லாந்தங்கம் அப்பனே பொன்போலே வீசும்பாரே
விளக்கவுரை :
3877. பொன்னான மழைமாரிப் பொழியும்போது
பொங்கமுடன் பூமிக்குள் இடியுண்டாகும்
சின்னமுடன் சமாதிதனில்
கோஷ்டந்தானும் திறமுடனே பூமிதனில் கேட்கும்பாரு
மன்னவர்கள்
ராசாதிராசரெல்லாம் மானிலத்தில் திசைமாறி போவார்கண்டீர்
துன்னவே சஊரியாள்
சந்திராளும் துறைகாணார் திசைதனிலே நிற்பார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
3878. நிற்பாரே வருந்துதிகள்
அதிரங்காணும் நீணிலத்தில் மிருகமெலாம் ஞானம்கூறும்
அற்பமென்று நினையாதே
அவனிதன்னில் ஆண்டவனார் நபிநாயன் கிருபைதன்னால்
சொற்பரிய சமாதிதன்னில்
புத்துண்டாகும் சொர்ணமென்ற ஐந்துதலை நாகமப்பா
கற்பாறை மேலிருந்து
ஞானம்சொல்லும் காசினியில் யாக்கோபு வருநாளாச்சே
விளக்கவுரை :
3879. ஆச்சென்று கூறுமப்பா
நாகந்தானும் வவனியிலே யாக்கோபு வருவாரென்று
மூச்சடங்கிப் போனதொரு
சித்துதாமும் மூதுலகில் வரப்போராரென்றுசொல்லி
பாச்சலுடன் நாகமது
பரிந்துகூறும் பாருலகில் பார்த்தவர்கள் பிரமைகொள்வார்
கூச்சலுடன்
நபிக்கூட்டமார்களப்பா கொற்றவனே சமாதியிடம் வருவார்பாரே
விளக்கவுரை :
3880. பாரேதான் பார்லோகம்
தத்தளிக்கும் பாங்கான சமாதியது வெடித்துதங்கே
நேரேதான் யாக்கோபு
முனிவர்தாமும் நேர்மையுடன் ஜெகஜோதிபோலேவந்தார்
சீரேதான் அல்லாவுத்தாலா
வென்று சிறப்புடனே வாய்தனிலே கூறிக்கொண்டு
சேரேதான் வையகத்தில்
வந்தாரப்பா சிறப்பான யாக்கோபு முனிவர்தானே
விளக்கவுரை :