போகர் சப்தகாண்டம் 4176 - 4180 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4176. சொன்னதொரு விதிமுறைகள் அனைத்தும்கூறி சுத்தமுடன் ஞானோபதேசமோதி
நன்னயமாய் வையகத்தில் வாழ்கவென்று நாதாந்தக் கண்மணியின் அருளைப்பெற்று
என்னாளுஞ் சித்தருக்கு முத்தனாக எழிலாக இருக்கவென்று வாசீர்மித்து  
பன்னவே பரப்பிமம் ஜோதிதன்னை புகட்டுவார் யுந்தனுக்குப் பண்பாய்த்தானே

விளக்கவுரை :


4177. தானான யின்னமொரு மார்க்கங்கேளு தகமையுள்ள புலிப்பாணி மைந்தாசொல்வேன்
தேனான தென்மதுரை வடமேற்கப்பா தெளிவான யானமலை யென்றொன்றுண்டு
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்கு சொன்னமார்க்கம்
பானான குருசொன்ன மொழிபடிக்கி பாலகனே குளிகையது கொண்டேன்பாரே 

விளக்கவுரை :

[ads-post]

4178. கொண்டேனே குளிகையது யானுங்கொண்டு கூரான யானைமலை காண்பதற்கு
அண்டமுடன் ஆகாயம் தான்பறந்து அழகான யானைமலை மீதிற்சென்றேன்
கண்டேனே வுச்சிதனில் மண்டபந்தான் காலான காலமது மூன்றுயோகம்
உண்டான சித்தரப்பா யங்கேயுண்டு வுத்தமனே கல்லடியாஞ் சித்தர்தாமே

விளக்கவுரை :


4179. கல்லான சித்தரப்பா மனேகமாண்பர் காசினியிலிருந்துவந்து மலைமேற்சென்றோம்
வல்லான யானைமலை வுச்சிதன்னில் வளமுடனே ஆயக்கால் மண்டபத்தில்
கொல்லரெனுஞ் சீஷர்களா மாயிரம்பேர் கூட்டமிட்டு வந்திருக்கக் கண்டேன்யானும்
வெல்லவே போகாது சித்தர்தம்மை வேகமுடன் தான்சபிப்பார் உறுதியாமே

விளக்கவுரை :


4180. உறுதியாம் மோனநிலைகொண்டசித்து மூதுலகில் பார்த்தவர்கள் யாருமில்லை
மருமமாம் வதீதமுதல் மகிமைகோடி வண்மையுள்ள சித்தர்களு மங்கேயுண்டு
நறுமனங்கள் கொண்டதொரு சித்துதம்மை நவிலவேமுடியாது மலைமேலப்பா
குறுமுனியாம் அகஸ்தியர்க்கு நேரதான கொற்றவர்கள் அங்கிருக்கக் கண்டேன்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4171 - 4175 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4171. என்னவே சீனபதி யுலகத்தோர்க்கு எழிலான கபடுகளுஞ் சூதுதானும்
பன்னவே பழிபாவம் தெரியாதப்பா பாருலகில் அம்மாண்பர் போலேயுண்டோ
துள்ளவே யாம்கண்ட மாச்க்கந்தன்னை துப்புறவாய் சீனபதியுலகத்தார்க்கு
முன்னவே காலாங்கி சொன்னாப்போல முயற்சியுடன் தானுரைப்பேன் மதியுள்ளோர்க்கே

விளக்கவுரை :


4172. பதியான சீனபதி மாண்பரேகேள் பாருலகில் கடலேழுஞ் சுத்திவந்தேன்
நிதியான நவகோடி திரவியங்கள் நேர்மையுடன் தானிருக்குந் தலமுங்கண்டேன்
துதியான சித்தர்முனி ரிஷிகள்தாமும் சூழ்ந்திருக்கும் கெம்பினுட நதியுங்கண்டேன்
மதியாத தவசிமுனி சித்தராசீர்மம் மார்க்கமுடன் கண்டுவந்தேன் மகிமைபாரே

விளக்கவுரை :

[ads-post]

4173. பாரேதான் கெம்பாறு நதியுங்கண்டேன் பாங்கான வோடைமுதல் அருவிகண்டஏன்
நேரேதான் கானாறு யாழிகண்டேன் நேரான கெம்புத்தூண் பாறைகண்டேன்
சாரேதான் மேலருவி வுள்ளருவி கண்டேன் சாங்கமுடன் கெம்பினுட மண்டபந்தான்
தீரேதான் வடகோடி மேல்பாகத்தில் தீரமுள்ள சித்தர்கள்தான் காவலுண்டே

விளக்கவுரை :


4174. காவலாங் கானாறுபதியிலப்பா கார்த்திருப்பார் வெகுகோடி சித்தரங்கே
ஆவலுடன் கெம்பெடுக்கப் போகும்போது வப்பனே யவர்கருணை மிகவேவேண்டும்
யேவலுடன் அவர்பணிக்கு முன்னேநின்று எழிலான கெம்பதனை எடுக்கலாகும்
கோபமது வாராமல் குருவின்முன்னே கொப்பெனவே யாசீர்மம் கொள்வீர்தாமே

விளக்கவுரை :


4175. கொள்ளவே யாசீர்மம் கொண்டபோது கொற்றவனே யுந்தமக்குத் தடமுஞ்சொல்வார்
விள்ளவே நிதியிருக்கு மிடமுஞ்சொல்லி விருப்பமுடன் கெம்பினுட நாடுஞ்சொல்லி
உள்ளதொரு வுடல்பொருள்கள் ஆவியோடு உத்தமனே உந்தனுக்குத் தத்தமீய்ந்து
கள்ளமின்றி தத்தம்வர நடக்கவென்று கடாட்சமுடன் அருள்வளஞ் சொல்வார்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4166 - 4170 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4166. காண்பித்தார் அயோத்திநகர் வோடைதன்னில் கனமான கெம்பினது அருவிகண்டேன்
ஆண்பான கெம்பினது அருமைதன்னை அப்பனே நாதாக்கள் சொல்வாரோசொல்
தூண்போல கல்லதுதான் இருக்கும்பாரு துடியான கெம்பினது வோடைதன்னை
சாண்போலே பாறையது மிகவிருக்கும் காண்பான சிறுகல்லு பொடியுமாமே

விளக்கவுரை :


4167. பொடியான கல்லதுதான் மணல்தானப்பா பொங்கமுடன் கழச்சிக்காய்ப்போலிருக்கும்
துடியான கெம்பதனை எடுப்பாரப்பா தூண்போன்ற கெம்புதனை எடுக்கமாட்டார்
படியான ஓடைக்குள் சித்தர்காவல் பாங்கான மேற்புறத்தே செல்லலாகா   
அடிபோன்ற கானாறுவதிலேயுண்டு அற்புதமா வருவியென்ற வாழியாமே

விளக்கவுரை :

[ads-post]

4168. ஆழியாம் மேலருவில் தன்னிலப்பா வப்பனே கழற்சிக்காய் அளவுபோலும்
நாழியால் தான்கொண்டு கெம்பழுக்கும் நாயகனே பொடிமணலா யருவிபாயும்
நீழியுடன் கீழருவில் தூண்போல்கெம்பு நீடான மலைபோலே யிருக்கும்பாரு
தாழினிட மிளைகின்ற கெம்புமார்க்கம் தகமையுடன் வெகுபேர்கள் காணார்தாமே

விளக்கவுரை :


4169. காணாரே கெம்பினுட வாட்டின்மார்க்கம் காசினியில் காலாங்கி கிருபையாலே
தோணாத கருவிகரணாதியெல்லாம் தோற்றமுடன் எந்தனுக்கு காண்பித்தார்பார்
பூணாத துறைமுதலுங் காணாருந்தான் பொங்கமுடன் கெம்பினது வருவிதானும்
மானமுதும் கெம்பினிட தீவுதன்னை மார்க்கமுடன் கண்டுவந்தேன் தேசமாமே

விளக்கவுரை :


4170. தேசமா மின்னமொரு மார்க்கம்சொல்வேன் சிறப்பான சீனபதி வுலகத்தார்க்கு
மோசமது தெரியாத மாந்தரப்பா மூதுலகில் சீனபதியாரைப்போல
பாசமுடன் மெய்யென்று நம்பு மாண்பர் பாருலகில் சீனபதியுலகமப்பா
நாசமுள்ள மற்றதோர் தேசமெல்லாம் நலமான கருமிகள்தான் என்னலாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4161 - 4165 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4161. சொன்னவுடன் அடியேனும் கால்நடுங்கி சித்தமுடன் தலைகுனிந்து சாஷ்டாங்கித்தேன்
நன்னயமாய் காலாங்கிநாதர்தம்மால் நாடிவந்தேன் ஆசீர்மம் தன்னையென்றே
வுன்னிதமாய் கெம்புநதி காணவென்று உகந்ததொரு குளிகைதனைக் கொண்டுவந்து
மன்னவே யாசீர்மம் கிட்டிவந்தேன் பட்சமுடன் எந்தனுக்கு அருள்செய்வீரே

விளக்கவுரை :


4162. அருளென்று சொல்லுகையில் வடியேன்மீது வன்புடனே கிருபையது மிகப்புரிந்து
தெருள்கலையிற் தெள்ளமுதே தேனேமானே தெவிட்டாத கண்மணியே போகர்பாலா
இருளகற்றஞ் செந்தேனே சிங்கவெறே எழிலான குணக்குன்றே யோகவானே
பொருளான ஞானோபதேசங்கேட்கும் பொன்னவனே யுந்தனுக்கு யருள்சொல்வேனே

விளக்கவுரை :

[ads-post]

4163. சொல்வேனே ஞானோபதேசந்தன்னை சூட்சாதி சூட்சமத்தை யுனக்குரைப்பேன்
வல்லதொரு காலாங்கிநாதர்பாலா வளமையெல்லா முந்தனுக்கு யோதுவேன்யான்
வெல்லவே ஞானோபதேசமெல்லாம் விருப்பமுடன் உனக்களிப்பேன் என்றுசொல்லி
புல்லவே பூதலத்தின் மகிமையெல்லாம் புகழ்ச்சியுடன் எந்தனுக்கு ஓதுவாரே

விளக்கவுரை :


4164. ஓதுவார் கெம்பாறு நதியுஞ்சொன்னார் ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை
வாதுரைத்த எந்தனுக்கு ரிஷியார்தாமும் வண்மையுள்ள ஞானோபமுரைத்தாரப்பா
மாதுமனோன்மணியாள் கிருபையாலே மகத்தான மகிமைகளும் சொன்னாரப்பா
சேதுபந்த மானதொரு கடலின்நேர்மை செப்பினார் எந்தனுக்கு செப்பினாரே

விளக்கவுரை :


4165. செப்பினார் கெம்புதனை எடுக்கவல்லோ சேதுபந்தம் அயோத்திக்கு மேற்கேயப்பா
ஒப்பவே கெம்பாறு வடமுகத்தில் ஓங்கியதோர் வோடையுண்டு குகைதானுண்டு
வெப்புடனே வடகோடி யாற்றையப்பா விண்ணுலகில் கண்டவர்கள் யாருமில்லை
நெப்பமுடன் எந்தனுக்கு வுளவுசொல்லி நேர்மையுடன் ஓடைதனை காண்பித்தாரே

விளக்கவுரை :


Powered by Blogger.