4171. என்னவே சீனபதி
யுலகத்தோர்க்கு எழிலான கபடுகளுஞ் சூதுதானும்
பன்னவே பழிபாவம் தெரியாதப்பா
பாருலகில் அம்மாண்பர் போலேயுண்டோ
துள்ளவே யாம்கண்ட
மாச்க்கந்தன்னை துப்புறவாய் சீனபதியுலகத்தார்க்கு
முன்னவே காலாங்கி
சொன்னாப்போல முயற்சியுடன் தானுரைப்பேன் மதியுள்ளோர்க்கே
விளக்கவுரை :
4172. பதியான சீனபதி மாண்பரேகேள் பாருலகில் கடலேழுஞ் சுத்திவந்தேன்
நிதியான நவகோடி திரவியங்கள்
நேர்மையுடன் தானிருக்குந் தலமுங்கண்டேன்
துதியான சித்தர்முனி
ரிஷிகள்தாமும் சூழ்ந்திருக்கும் கெம்பினுட நதியுங்கண்டேன்
மதியாத தவசிமுனி
சித்தராசீர்மம் மார்க்கமுடன் கண்டுவந்தேன் மகிமைபாரே
விளக்கவுரை :
[ads-post]
4173. பாரேதான் கெம்பாறு
நதியுங்கண்டேன் பாங்கான வோடைமுதல் அருவிகண்டஏன்
நேரேதான் கானாறு யாழிகண்டேன்
நேரான கெம்புத்தூண் பாறைகண்டேன்
சாரேதான் மேலருவி வுள்ளருவி
கண்டேன் சாங்கமுடன் கெம்பினுட மண்டபந்தான்
தீரேதான் வடகோடி
மேல்பாகத்தில் தீரமுள்ள சித்தர்கள்தான் காவலுண்டே
விளக்கவுரை :
4174. காவலாங் கானாறுபதியிலப்பா
கார்த்திருப்பார் வெகுகோடி சித்தரங்கே
ஆவலுடன் கெம்பெடுக்கப்
போகும்போது வப்பனே யவர்கருணை மிகவேவேண்டும்
யேவலுடன் அவர்பணிக்கு
முன்னேநின்று எழிலான கெம்பதனை எடுக்கலாகும்
கோபமது வாராமல்
குருவின்முன்னே கொப்பெனவே யாசீர்மம் கொள்வீர்தாமே
விளக்கவுரை :
4175. கொள்ளவே யாசீர்மம் கொண்டபோது
கொற்றவனே யுந்தமக்குத் தடமுஞ்சொல்வார்
விள்ளவே நிதியிருக்கு
மிடமுஞ்சொல்லி விருப்பமுடன் கெம்பினுட நாடுஞ்சொல்லி
உள்ளதொரு வுடல்பொருள்கள்
ஆவியோடு உத்தமனே உந்தனுக்குத் தத்தமீய்ந்து
கள்ளமின்றி தத்தம்வர
நடக்கவென்று கடாட்சமுடன் அருள்வளஞ் சொல்வார்பாரே
விளக்கவுரை :