போகர் சப்தகாண்டம் 4286 - 4290 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4286. எரிக்கவே செந்தூர மென்னசொல்வேன் எழிலான நாற்சாமமானபின்பு
சொரிக்கவே மணலதுவுஞ் சிவந்துமெத்த சுத்தமுடன் செந்தூரங் காந்தியாச்சு
பரியான செந்தூர மென்னனொல்வேன் பாருலகில் சித்தர்முனி செய்வாரோதான்
சரியான வேதையிது ரோமர்வேதை சட்டமுடன் முடித்தாரே சித்துமாமே

விளக்கவுரை :


4287. சித்தான ரோமரிஷி செந்தூரத்தை திறமுடனே குப்பியது திறந்துபார்க்க
சத்தான சரக்கெல்லா மொன்றாய்ச்சேர்த்து சாங்கமுடன் செந்தூரம் நாவோயில்லை
சுத்தமுடன் மனோன்மணியைத் துதித்துமேதான் சுகமுடனே செந்தூரமெடுத்தார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4288. எடுத்துமே செந்தூரம் மைந்தாகேளு எழிலான வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
கொடுத்துமே தானுருக்கி யெடுத்துக்கொண்டு கொற்றவனே யோட்டில்வைத்து வூதும்போது
படுத்ததொரு மாற்றதுவும் என்னசொல்வேன் பாலகனே வயததுவும் எட்டதாகும்
அடுத்துமே தங்கமது நாலுக்கொன்று வப்பனே புடம்போடத் தங்கமாச்சே

விளக்கவுரை :


4289. தங்கமென்றால் சுயத்தங்கம் பிரிதிலாச்சு தாரணியில் சமுசாரிக்காணவேதை
பங்கமது வொருக்காலும் நேராதப்பா பண்பான மாணபர்களுக்கான வேதை
புங்கசித்து எட்டுவகை யடையலாகும் புகழான ரோமரிஷிவேதைதானும்
வங்கசத்துக்கொருநாளும் யிடையாதப்பா வர்ணமென்ற செந்தூர வேதையாமே

விளக்கவுரை :


4290. வேதையாமின்னமொரு போக்குகேளும் வீரான செந்தூரமென்னசொல்வேன்
பாதையாம் நெய்தேனிற் குன்றிதானும் பாலகனே மண்டலந்தான் கொண்டாயானால்
தீதகன்று தேகமது கற்றூணாகும் திறமான சட்டையது தள்ளும்பாரு
மீதலத்தில் உண்டவருஞ் சித்தனாவார் புகழான செந்தூரக் களங்குதானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4281 - 4285 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4281. காணவே தேகமது சட்டைதள்ளி காசினியில் வெகுகால மிருந்தசித்து
தோணவே யுகாந்தவரை கண்டசித்து தொல்லுலகில் ஆசைதனைதுறந்தசித்து
பூணவே கைலங்கிரி வாழுசித்து புகழான ரோமரிஷி
வேணபடி மயிற்கற்பம் கொண்டசித்து மேதினியில் சுயரூப சித்துதானே

விளக்கவுரை :


4282. தானான யின்னமொரு மார்க்கங்கேளு தகமையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
மானான ரோமரிஷியுண்டகற்பம் மகத்தான மயிலினது எச்சமப்பா
வூனான வுடல்தனிலே வந்தயெச்சம் வுத்தமனே ரோமரிஷி பாகங்கேளே

விளக்கவுரை :

[ads-post]

4283. கேளேதான் எச்சமதைக்காரமிட்டு கிருபையுடன் மூசைதனில் அடைத்துமல்லோ
தோளேதான் வாராமல் வுலையில்வைத்து கொற்றவனே வஜ்ஜிரமாம் குகையைத்தானும்
பாளேதான் போகாமல் பதுங்கவூதி பக்குவமாய்த் தானெடுத்தார் களங்குமாச்சு
தூளேதான் களங்கமது நாலுக்கொன்று துப்புரவாய்க் காந்தமது சேர்த்திட்டாரே

விளக்கவுரை :


4284. இட்டாரே தங்கமது பத்துக்கொன்று எழிலாகக் குழிக்கல்லில் பொடியதாக்கி
சட்டமுடன் கையானின் சாற்றினாலே தானரைப்பாய் நாற்சாமமமானபின்பு
திட்டமுடன் ரவிதனிலே காயவைத்து திடமான காசிபென்ற குப்பிக்கேற்றி
வட்டமுடன் மரக்கல்லால் கொண்டுமூடி வண்மையுடன் சீலையது செய்தார்தாமே

விளக்கவுரை :


4285. செய்தாரே காசிபென்ற குப்பிதன்னை செம்மையுடன் தளவாஆம் பாண்டந்தன்னில்
பையவே மணலதனைக் கொட்டுமைந்தா பாங்குபெற நடுமையங் குப்பிதன்னை
பெய்யவே குப்பிமேல் மணலைக்கொட்டி பேரான மேற்பாண்டந் தன்னைமூடி
துய்யவே வாலுகையாம் ஏந்திரத்தில் துப்புரவாய் நாற்சாமமெரித்திட்டாரே  

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4276 - 4280 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4276. மார்க்கமா மின்னமொரு வயனஞ்சொல்வேன் மகத்தான ரோமரிஷி மகிமைபாரு
தீர்க்கமுடன் கந்தரது வாகனந்தான் திறமான புள்ளிமயில் பட்சியாகும்
சேர்க்கவே கெந்தியது தாளந்தானும் சிறப்பான சூதமது தன்னோடொக்க
ஏர்க்கவே சரக்கதுவும் சமனதாக எழிலான கருங்குருவை யரிசிகூட்டே

விளக்கவுரை :


4277. கூட்டவே சரக்குக்கு ரெட்டியப்பா கொற்றவனே யரிசியது ரெண்டதாகும்
நீட்டவே மூன்றையுந்தா னொன்றாய்க்கூட்டி நீதியுடன் குழிக்கல்லில் பொடியதாக்கி
தாட்டிகமாய்ச் சலமதனில் பிசைந்துகொண்டு சட்டமுடன் மயிலுக்குத் தாக்கிப்பாரு
வட்டமுடன் மண்டலமுந்தாக்கியேதான் மகத்தான எச்சமதை ஒன்றாய்ச்சேரே

விளக்கவுரை :

[ads-post]

4278. சேர்க்கவே ரோமமது வுதிர்ந்துபோகும் செம்மையுடன் மயிலதுவுங் காரமேறி
தீர்க்கமுடன் காயாதிகற்பமாகி திரமான மயிலினது ரோமம்போகும்
ஏற்கவே ஆறாண்டு சென்றபின்பு எழிலான ரோமமது விளையும்பாரு
மூர்க்கமென்ற மயிலுக்கு ரோமமாகி முன்போலே வாலுக்கு யேதுவாமே

விளக்கவுரை :


4279. ஏதுவாங்காரர் மேகந்தன்னைக்கண்டு எழிலாக மயிலாடி வுறவுசெய்யும்
சாதுடனே மயில்தனைப் பிடித்துவந்து சட்டமுடன் ரோமரிஷி முயார்தாமும்
தீக்கற்றி மாமிஷத்தை எடுத்துக்கொண்டு திறமுடனே அறுசுவையாந் தன்னோடொக்க
மூதுறவே கைபாகஞ்செய்துகொண்டு மூப்பகல மண்டலந்தான்கொண்டார்பாரே

விளக்கவுரை :


4280. பாரேதான் ருசிபாகம் அறிந்தசித்து பாருலகில் வெகுகால மிருந்தாரப்பா
சீரேதான் மாமிசத்தைக்கண்டபோது சிறப்பான ரோமரிஷி முனியார்தாமும்
தீரேதான் தேகமது கற்றூணாகி திரைநிறையுமற்றுமல்லோ புனிதனானார்
மேரேதான் வேருவென்ற சித்தனாகி மேதினியில் வெகுகாலம் இருந்தார்காணே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4271 - 4275 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4271. எட்டான மாற்றதுவும் தங்கம் எழிலான ஸ்ரீராமர் காசியப்பா
மட்டான தங்கமது மதிப்புமெத்த மகிதலத்தில் மகிமையது மகிழப்போமோ
திட்டமுடன் கெந்தியென்ற தங்கச்செம்பாம் சிவராஜயோகியவன் செய்வான்பாரு
சட்டமுடன் விதியாளி செய்வானல்லால் சாங்கமுடன் மற்றவருஞ் செய்யார்தாமே

விளக்கவுரை :


4272. செய்யாரா மற்றொருவரானாலுந்தான் செம்மையுடன் கைபாகஞ்செய்பாகந்தான்
எய்யாது கெந்தினுட செம்புமார்க்கம் யெடுக்கவுமே பாகமது காணப்போமோ
மையான கெந்தியது செம்பேயானால் மகத்தான வேதையிது கோடிக்கோடும்
துய்யதொரு மதிகாணும் பழுத்ததங்கம் துப்புறவாய் பின்னுமந்த மதியில்தாக்கே

விளக்கவுரை :

[ads-post]

4273. தாக்கவே பத்துக்கு வொன்றுதங்கம் தண்மையுடன் வுருக்கிப்பார் மாற்றேயாகும்
நோக்கமுடன் கெந்தியென்ற செம்புதன்னை நேர்மையுடன் ஆறுமாற்றாணிமேலே
நூக்கமுடன் பத்துக்கு ஒன்றுதாக்க துடியான மாற்றதுவும் பத்தேயாகும்  
வாக்கயுவும் பொய்யாது ரோமர்வேதை வண்மையுள்ள கலெந்தியென்ற செம்புதானே

விளக்கவுரை :


4274. தானான சேவலென்ற மாமிசத்தை தகமையுடன் ரோமத்தைப்போக்கிநன்றாய்
தேனான குடல்போக்கி எலும்புபோக்கி தெளிவுறவே அறுசுவையுந்தன்னோடொக்க
பானான பதமேத்தி சமைத்துமல்லோ பாங்குபெற மாமிசத்தையுண்டபோது 
மானான தேகமது காயகற்பம் மகத்தான சாரமது ஏறலாச்சே

விளக்கவுரை :


4275. ஏறவென்றால் மண்டலந்தான் இப்படியே கொண்டால் எழிலான தேகமது கற்றூணாகும்
சீரலென்ற சுவாசமது கீழ்நோக்காகும் சிறப்பான தேகமது காந்திவீசும்
பீக்கலென்ற சுரோனிதம்தான் கட்டிப்போகும் பேரான தாதுவிர்த்தி யதிகமாகும்
கூறவே முடியாது சேவல்கற்பம் குவலயத்தில் ரோமரிஷிமார்க்கந்தானே

விளக்கவுரை :


Powered by Blogger.