4281. காணவே தேகமது சட்டைதள்ளி காசினியில் வெகுகால மிருந்தசித்து
தோணவே யுகாந்தவரை கண்டசித்து
தொல்லுலகில் ஆசைதனைதுறந்தசித்து
பூணவே கைலங்கிரி வாழுசித்து
புகழான ரோமரிஷி
வேணபடி மயிற்கற்பம்
கொண்டசித்து மேதினியில் சுயரூப சித்துதானே
விளக்கவுரை :
4282. தானான யின்னமொரு
மார்க்கங்கேளு தகமையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
மானான ரோமரிஷியுண்டகற்பம்
மகத்தான மயிலினது எச்சமப்பா
வூனான வுடல்தனிலே
வந்தயெச்சம் வுத்தமனே ரோமரிஷி பாகங்கேளே
விளக்கவுரை :
[ads-post]
4283. கேளேதான் எச்சமதைக்காரமிட்டு
கிருபையுடன் மூசைதனில் அடைத்துமல்லோ
தோளேதான் வாராமல்
வுலையில்வைத்து கொற்றவனே வஜ்ஜிரமாம் குகையைத்தானும்
பாளேதான் போகாமல் பதுங்கவூதி
பக்குவமாய்த் தானெடுத்தார் களங்குமாச்சு
தூளேதான் களங்கமது
நாலுக்கொன்று துப்புரவாய்க் காந்தமது சேர்த்திட்டாரே
விளக்கவுரை :
4284. இட்டாரே தங்கமது
பத்துக்கொன்று எழிலாகக் குழிக்கல்லில் பொடியதாக்கி
சட்டமுடன் கையானின்
சாற்றினாலே தானரைப்பாய் நாற்சாமமமானபின்பு
திட்டமுடன் ரவிதனிலே
காயவைத்து திடமான காசிபென்ற குப்பிக்கேற்றி
வட்டமுடன் மரக்கல்லால்
கொண்டுமூடி வண்மையுடன் சீலையது செய்தார்தாமே
விளக்கவுரை :
4285. செய்தாரே காசிபென்ற
குப்பிதன்னை செம்மையுடன் தளவாஆம் பாண்டந்தன்னில்
பையவே மணலதனைக் கொட்டுமைந்தா
பாங்குபெற நடுமையங் குப்பிதன்னை
பெய்யவே குப்பிமேல்
மணலைக்கொட்டி பேரான மேற்பாண்டந் தன்னைமூடி
துய்யவே வாலுகையாம்
ஏந்திரத்தில் துப்புரவாய் நாற்சாமமெரித்திட்டாரே
விளக்கவுரை :