சிவவாக்கியம் 46 - 50 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

ஒடுக்க நிலை

46. சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்
சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்
மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

கிரியை

47. சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம்
பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும் ஒன்றலோ?
காதில்வாளில், காரை, கம்பி, பாடகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ?

விளக்கவுரை :

[ads-post]

அறிவு நிலை

48. கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.

விளக்கவுரை :

49. அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர்,
துறைஅறிந்து நீர்குளித்த அன்றுதூமை என்றிலீர்,
ப்றையறிந்து நீர்பிறந்த அன்றுதூமை என்றிலீர்,
புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே.

விளக்கவுரை :

50. தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 41 - 45 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

41. வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்கிறீர்;
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ?
வாயில்எச்சில் போகஎன்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!

விளக்கவுரை :

42. ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில்., பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில்., மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!

விளக்கவுரை :

[ads-post]

43. பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?
பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?
குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே.
அறுப்பென செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால்.

விளக்கவுரை :

44. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் சங்குமோ?
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ?
இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ?
செம்பொன் அம்பலத்துளே தெளிந்த சிவாயமே.

விளக்கவுரை :

45. சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரே
சத்திஏது? சம்புஏது சாதிபேத அற்றது
முத்திஏது? மூலம்ஏது மூலமந் திரங்கள்ஏது?
வித்தில்லாத வித்திலே இதினெனதென்று இயம்புமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 36 - 40 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

36. செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!

விளக்கவுரை :

37. பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே!

விளக்கவுரை :

[ads-post]

38. இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதினும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான்
உருக்கிநெஞ்சை உட்கலந்திங்கு உண்மைகூற வல்லீரேல்
சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமோ!

விளக்கவுரை :

39. கலத்தின்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின்மாயை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ!

விளக்கவுரை :

40. பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!

விளக்கவுரை :



சிவவாக்கியம் 31 - 35 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

31. நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்;
நெருப்பும்நீரும் உம்முளே நினைந்துகூற வல்லீரேல்
சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமோ!

விளக்கவுரை :

32. பாட்டில்லாத பரமனைப் பரமலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிமங்கை பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்துக் குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பைக் கூப்பிடா முகிஞ்சதே.

விளக்கவுரை :

[ads-post]

தரிசனம்

33. செய்யதெங்கி லேஇளநீர் சேர்த்தகார ணங்கள்போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன்.
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே.

விளக்கவுரை :

அறிவு நிலை

34. மாறுபட்டு மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே.
மாறுபட்ட தேவரும் அறிந்துநோக்கும் என்னையும்
கூறுபட்டுத் தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே.

விளக்கவுரை :

35. கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.

விளக்கவுரை :
Powered by Blogger.