சிவவாக்கியம் 61 - 65 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

61. அறத்திறங் களுக்கும்நீ, அண்டம்எண் திசைக்கும்நீ,
திறத்திறங் களுக்குநீ, தேடுவார்கள் சிந்தைநீ,
உறக்கம்நீ, உணர்வுநீ, உட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே.

விளக்கவுரை :

62. அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ,
கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க ளானநீ,
புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர்,
கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே.

விளக்கவுரை :

[ads-post]

63. மைஅடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐயிறந்து கொண்டுநீங்கள் அல்லல்அற்று இருப்பீர்கள்
மெய்அறிந்த சிந்தையால் விளங்குஞானம் எய்தினால்
உய்யறிந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்வீரே.

விளக்கவுரை :

64. கருவிருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குருவிருந்து சொன்னவார்த்தை குறித்துநோக்க வல்லீரேல்
உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்றுநீர்
திருவிளங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே!

விளக்கவுரை :

65. தீர்த்தம்ஆட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்,
தீர்த்தம்ஆடல் எவ்விடம் தெளிந்துநீர் இயம்புவீர்?
தீர்த்தமாக உம்முளே தெளிந்துநீர் இருந்தபின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயஅஞ் செழுத்துமே!

விளக்கவுரை :



சிவவாக்கியம் 56 - 60 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

56. தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்;
எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுத்துகூறி மகிழுவார்;
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.

விளக்கவுரை :

57. எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான்
சத்தியான வித்துளே முளைத்தெழும் அச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தன்ஆடல் கண்டபின் அடங்கல்ஆடல் காணுமே.

விளக்கவுரை :

[ads-post]

58. உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்;
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்துவீர்;
செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருத்திடில்
சுற்றமாக உம்முளே சோதிஎன்றும் வாழுமே.

விளக்கவுரை :

59. போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே.

விளக்கவுரை :

60. அகாரம்என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ?
உகாரம்என்ற அக்கரத்துள் உவ்வுவந்து உதித்ததோ?
அகாரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதோ?
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 51 - 55 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

51. சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே.

விளக்கவுரை :

52. கைவடங்கள் கண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்?
எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணிஎண்ணிப் பார்க்கிறீர்?
பொய்யுணர்ந்த சிந்தையைப் பொருந்திநோக்க வல்லீரேல்
மெய்கடந்து உம்முளே விரைந்து கூறல்ஆகுமே.

விளக்கவுரை :

[ads-post]

53. ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ,
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா,
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.

விளக்கவுரை :

54. இடத்ததுன்கண் சந்திரன், வலத்ததுன்கண் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம், வலக்கைசூலம் மான்மழு;
எடுத்தபாதம் நீள்முடி, எண்திசைக்கும் அப்புறம்,
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே?

விளக்கவுரை :

55. நாழிஅப்பும் நாழிஉப்பும் நாழியான வாறுபோல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடம்
ஏறில்ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீண் நரகிலே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 46 - 50 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

ஒடுக்க நிலை

46. சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்
சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்
மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

கிரியை

47. சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம்
பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும் ஒன்றலோ?
காதில்வாளில், காரை, கம்பி, பாடகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ?

விளக்கவுரை :

[ads-post]

அறிவு நிலை

48. கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.

விளக்கவுரை :

49. அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர்,
துறைஅறிந்து நீர்குளித்த அன்றுதூமை என்றிலீர்,
ப்றையறிந்து நீர்பிறந்த அன்றுதூமை என்றிலீர்,
புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே.

விளக்கவுரை :

50. தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.

விளக்கவுரை :
Powered by Blogger.