சிவவாக்கியம் 61 - 65 of 525 பாடல்கள்
61.
அறத்திறங் களுக்கும்நீ, அண்டம்எண்
திசைக்கும்நீ,
திறத்திறங் களுக்குநீ, தேடுவார்கள் சிந்தைநீ,
உறக்கம்நீ, உணர்வுநீ, உட்கலந்த
சோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே.
விளக்கவுரை :
62.
அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல
மானநீ,
கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க
ளானநீ,
புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர்,
கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
63.
மைஅடர்ந்த கண்ணினார்
மயக்கிடும் மயக்கிலே
ஐயிறந்து கொண்டுநீங்கள் அல்லல்அற்று இருப்பீர்கள்
மெய்அறிந்த சிந்தையால் விளங்குஞானம் எய்தினால்
உய்யறிந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்வீரே.
விளக்கவுரை :
64.
கருவிருந்த வாசலால்
கலங்குகின்ற ஊமைகாள்
குருவிருந்து சொன்னவார்த்தை குறித்துநோக்க வல்லீரேல்
உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்றுநீர்
திருவிளங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே!
விளக்கவுரை :
65.
தீர்த்தம்ஆட வேணுமென்று
தேடுகின்ற தீனர்காள்,
தீர்த்தம்ஆடல் எவ்விடம் தெளிந்துநீர் இயம்புவீர்?
தீர்த்தமாக உம்முளே தெளிந்துநீர் இருந்தபின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயஅஞ் செழுத்துமே!
விளக்கவுரை :