இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 56 - 60 of 130 பாடல்கள்

56. எள்ளிற்றை லம்போல எங்கும் நிறைபொருளை
உள்ளிற் றுதித்தே யுணர்வடைந்து போற்றீரே.   

விளக்கவுரை :

நெஞ்சொடு கிளத்தல்

57. பூமியெல்லா மோர்குடைக்கீழ் பொருந்தவர சாளுதற்குக்
காமியம்வைத் தாலுனக்குக் கதியுளதோ கன்மனமே.   

விளக்கவுரை :

58. பெண்ணாசை யைக்கொண்டு பேணித் திரிந்தக்கால்
விண்ணாசை வைக்க விதியிலையே கன்மனமே.       

விளக்கவுரை :

59. மேயும் பொறிகடமை மேலிடவொட் டார்க்குவினை
தேயுமென்றே நல்வழியிற் செல்லுநீ கன்மனமே.         

விளக்கவுரை :

60. பொன்னிச்சை கொண்டு பூமிமுற் றுந்திரிந்தால்
மன்னிச்சை நோக்கும் வாய்க்குமோ கன்மனமே.

விளக்கவுரை :



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 51 - 55 of 130 பாடல்கள்

51. மூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்
தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே. 

விளக்கவுரை :

52. தூய மறைப்பொருளைச் சுகவா ரிதியமிர்தை
நேய முடனாளு நிலைபெறவே போற்றீரே.       

விளக்கவுரை :

53. சராசரத் தைத்தந்த தனிவான மூலமென்னும்
பராபரத் தைப்பற்றிப் பவமறவே போற்றீரே.      

விளக்கவுரை :

54. மண் ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக்
கண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே.    

விளக்கவுரை :

55. பொய்ப்பொருளை விட்டுப் புலமறிய வொண்ணாத
மெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே.      

விளக்கவுரை :



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 46 - 50 of 130 பாடல்கள்

46. சொல்லென்னு நற்பொருளாம்           பசுவே
          சோதியைப் போற்றாக்கால்
இல்லென்று முத்திநிலை                       பசுவே
          எப்பொருளுஞ் சொல்லுமே.        

விளக்கவுரை :

பலரொடு கிளத்தல்

குறள் வெண்செந்துறை

47. கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.

விளக்கவுரை :
           
48. மனம் வாக்கு காயமெனும் வாய்த்தபொறிக் கெட்டாத
தினகரனை நெஞ்சமதிற் சேவித்துப் போற்றீரே. 

விளக்கவுரை :
           
49. காலமூன் றுடங்கடந்த கதிரொளியை யுள்ளத்தாற்
சாலமின் றிப்பற்றிச் சலிப்பறவே போற்றீரே.     

விளக்கவுரை :

50. பாலிற் சுவைபோலும் பழத்தின் மதுப்போலும்
நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே.  

விளக்கவுரை :
Powered by Blogger.