இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 76 - 80 of 130 பாடல்கள்

76. அன்னையைப் போலெவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முத்தியடை புல்லறிவே. 

விளக்கவுரை :

சித்தத்தொடு கிளத்தல்

கண்ணிகள்

77. அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீ பற - பர
          மானந்தங் கண்டோமென்று தும்பீ பற
மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற - மலை
          மேலேறிக் கொண்டோமென்று தும்பீபற.

விளக்கவுரை :
           
78. அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை
          ஆணவங்க ளற்றோமென்றே தும்பீபற
தொல்லைவினை நீங்கிற்றென்றே தும்பீபற - பரஞ்
          சோதியைக் கண்டோமெனத் தும்பீபற.    

விளக்கவுரை :

79. ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
          அருவே பொருளாமெனத் தும்பீபற
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு
          தெய்வீகங் கண்டோமென்றே தும்பீபற.   

விளக்கவுரை :

80. மூவாசை விட்டோமென்றே தும்பீபற - பர
          முத்திநிலை சித்தியென்றே தும்பீபற
தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்த
          செகத்தை யொழித்தோமென்று தும்பீபற.

விளக்கவுரை :



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 71 - 75 of 130 பாடல்கள்

71. ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே
கூத்துப் புரிகின்ற கோளறிவாய் புல்லறிவே.      

விளக்கவுரை :

72. இருட்டறைக்கும் நல்விளக்காய் இருக்குமுன்றன் வல்லமையை,
அருட்டுறையில் நிறுத்திவிளக் காகுநீ புல்லறிவே.       

விளக்கவுரை :

73. நல்லவழியிற் சென்று நம்பதவி யெய்தாமல்
கொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே.        

விளக்கவுரை :

74. கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல
மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே.

விளக்கவுரை :

75. வாசிக்கு மேலான வான்கதியுன் னுள்ளிருக்க
யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே.       

விளக்கவுரை :



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 66 - 70 of 130 பாடல்கள்

66. சாகா திருப்பதற்குத் தான்கற்ற கல்வியன்றோ
வாகான மெய்க்கல்வி வகுத்தறிநீ கன்மனமே.   

விளக்கவுரை :

அறிவொடு கிளத்தல்

67. எல்லாப் பொருள்களையு மெண்ணப் படிபடைத்த
வல்லாளன் றன்னை வகுத்தறிநீ புல்லறிவே.    

விளக்கவுரை :
           
68. கட்புலனுக் கெவ்வளவுங் காணா திருந்தெங்கும்
உட்புலனாய் நின்றவொன்றை உய்த்தறிநீ புல்லறிவே.  

விளக்கவுரை :

69. விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்க முண்டாகும்,
செழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்ததறிநீ புல்லறிவே.        

விளக்கவுரை :

70. மெய்யிலொரு மெய்யாகி மேலாகிக் காலாகிப்
பொய்யிலொரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே.     

விளக்கவுரை :
Powered by Blogger.