அகப்பேய் சித்தர் பாடல்கள் 6 - 10 of 90 பாடல்கள்
           
6. வாக்காதி யைந்தடியோ                      அகப்பேய்
          வந்த வகைகேளாய்
ஒக்கம தானதடி                                    அகப்பேய்
          உண்மைய தல்லவடி.

விளக்கவுரை :
           
7. சத்தாதி யைந்தடியோ                        அகப்பேய்
          சாத்திர மானதடி
மித்தையு மாகுமிடி                               அகப்பேய்
          மெய்யது சொன்னேனே.

விளக்கவுரை :
           
8. வசனாதி யைந்தடியோ                      அகப்பேய்
          வண்மையாய் வந்ததடி
தெசநாடி பத்தேடி                                 அகப்பேய்
          திடனிது கண்டாயே.

விளக்கவுரை :
           
9. காரண மானதெல்லாம்                      அகப்பேய்
          கண்டது சொன்னேனே
மாரணங் கண்டாயே                              அகப்பேய்
          வந்தவி தங்களெல்லாம்

விளக்கவுரை :
           
10. ஆறு தத்துவமும்                            அகப்பேய்
          ஆகமஞ் சொன்னதடி
மாறாத மண்டலமும்                           அகப்பேய்
          வந்தது மூன்றடியே.

விளக்கவுரை :



அகப்பேய் சித்தர் பாடல்கள் 1 - 5 of 90 பாடல்கள்

1. நஞ்சுண்ண வேண்டாவே          அகப்பேய்
          நாயகன் தாள்பெறவே
நெஞ்சு மலையாதே                              அகப்பேய்
          நீயொன்றும் சொல்லாதே.

விளக்கவுரை :

2. பராபர மானதடி                                அகப்பேய்
          பரவையாய் வந்ததடி
தராதல மேழ்புவியும்                            அகப்பேய்
          தானே படைத்ததடி.

விளக்கவுரை :
           
3. நாத வேதமடி                                   அகப்பேய்
          நன்னடங் கண்டாயோ
பாதஞ் சத்தியடி                                    அகப்பேய்
          பரவிந்து நாதமடி    

விளக்கவுரை :
           
4. விந்து நாதமடி                                  அகப்பேய்
          மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும்பூதம்                                அகப்பேய்
          அதனிட மானதடி    

விளக்கவுரை :
           
5. நாலு பாதமடி                                   அகப்பேய்
          நன்னெறி கண்டாயே
மூல மானதல்லால்                               அகப்பேய்
          முத்தி யல்லவடி.

விளக்கவுரை :
Powered by Blogger.