பட்டினச் சித்தர் பாடல்கள் 186 - 190 of 196 பாடல்கள்


186. எச்சிலென்று சொல்லி இதமகிதம் பேசாதீர்
எச்சில் இருக்கும் இடம் அறியீர் - எச்சில்தனை
உய்த்திருந்து பார்த்தால் ஒருமை வெளிப்படும் பின்
சித்த நிராமயமா மே.

விளக்கவுரை :

187. எத்தனை பேர் நட்டகுழி ? எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ் ? நித்தநித்தம்
பொய்யடா பேசும் புவியில்மட மாதரைவிட்டு
உய்யடா உய்யடா உய் !

விளக்கவுரை :

188. இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் !

விளக்கவுரை :

189. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தோ - வித்தகமாய்க்
காதிவிளை யாடிஇரு கைவீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான் !

விளக்கவுரை :

190. மாலைப் பொழுதில்நறு மஞ்சள் அரைத் தேகுளித்து
வேலை மினுக்கிட்டு விழித்திருந்து - சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்ற பிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின் ?

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் பாடல்கள் 181 - 185 of 196 பாடல்கள்


181. மேலும் இருக்க விரும்பினையே வெளிவிடையோன்
சீலம் அறிந்திலையே சிந்தையே கால்கைக்குக்
கொட்டை இட்டு மெத்தை இட்டுக் குத்திமொத்தப் பட்ட உடல்
கட்டை இட்டுச் சுட்டுவிடக் கண்டு

விளக்கவுரை :


182. ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே - வன்கழுக்கள்
தத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக் குத்தித் தின்னக் கண்டு.

விளக்கவுரை :

183. இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே ?
மன்னர் இவர் என்றிருந்து வாழ்ந்தாரை - முன்னம்
எரிந்தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை
உரிந்துருட்டிப் போட்டது கண்டு !

விளக்கவுரை :


184. முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும் அம்மட்டோ இம்மட்டோ ?
நாம்பூமி வாழ்ந்த நலம்.

விளக்கவுரை :

185. எத்தனை நாள்கூடி எடுத்த சரீரம் இவை ?
அத்தனையும் மண்திண்ப தல்லவோ ? - வித்தகனார்
காலைப் பிடித்து மெள்ளக் கங்குல்பகல் அற்ற இடத்தே
மேலைக் குடியிருப்போ மே !

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் பாடல்கள் 176 - 180 of 196 பாடல்கள்


176. இருக்கும் இடம் தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன் - பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே என்தேகம்
இளைத்தாலும் போகேன் இனி.

விளக்கவுரை :

177. விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் பட்டது பட்(டு)
எந்நேரமும் சிவனை ஏந்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்.

விளக்கவுரை :

178. ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே - மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி.

விளக்கவுரை :


179. வெட்ட வெளியான வெளிக்கும் தெரியாது
கட்டளையும் கைப்பணமும் காணதே - இட்டமுடன்
பற்றென்றால் பற்றாது பாவியே நெஞ்சில் அவன்
இற்றெனவே வைத்த இனிப்பு

விளக்கவுரை :

180. இப்பிறப்பை நம்பி இருப்பாரோ ? நெஞ்சமே
வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் - சொப்பனம்போல்
விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தப்பஞ் சிட்டு அப்பைக்
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் பாடல்கள் 171 - 175 of 196 பாடல்கள்



திருவையாறு


171. மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன்
கையாறவும் அடியேன் கால் ஆறவும் காண்பார்
ஐயா திருவை யாறா

விளக்கவுரை :

திருக்குற்றாலம்


171. காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு !

விளக்கவுரை :

பொது


172. சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம் தேடி விட்டோமே - நித்தம்
பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண்

விளக்கவுரை :


173. தோடவிழும் பூங்கோதைத் தோகை உனை இப்போது
தேடினவர் போய்விட்டார் தேறியிரு - நாடி நீ
என்னை நினைத்தால் இடுப்பில் உதைப்பேன் நான்
உன்னை நினைத்தால் உதை.

விளக்கவுரை :

174. வாசற் படிகடந்து வாராத பிச்சைக்குஇங்
காசைப் படுவதில்லை அண்ணலே - ஆசைதனைப்
பட்டிருந்த காலமெல்லாம் போதும் பரமேட்டி
சுட்டிறந்த ஞானத்தைச் சொல்.

விளக்கவுரை :

175. நச்சரவம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும்
இச்சையிலே தான் அங் கிருப்பதுவும் - பிச்சைதனை
வாங்குவதும் உண்பதுவும் வந்துதிரு வாயிலிலே
தூங்குவம் தானே சுகம்.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் பாடல்கள் 166 - 170 of 196 பாடல்கள்


166. எருவாய்க்கு இருவி ரல்மேல் ஏறுண்டிருக்கும்
கருவாய்கோ கண்கலங்கப் பட்டாய் - திருவாரூர்த்
தேரோடும் வீதியிலே செத்துக் கிடக்கின்றாய்
நீரோடும் தாரைக்கே நீ

விளக்கவுரை :

திருக்காஞ்சி


167. எத்தனை ஊர்? எத்தனை வீ(டு) எத்தனை தாய் ? பெற்றவர்கள்
எத்தனை பேர் இட்டழைக்க ஏன் என்றேன் - நித்தம்
எனக்குக் கலையாற்றாய் ஏகம்பா கம்பா
உனக்குத் திருவிளையாட்டோ?

விளக்கவுரை :

திருக்கச்சிக்காரோணம்


168. அத்திமுதல் எறும்பீ றானவுயிர் அத்தனைக்கும்
சித்தமகிழ்ந் தளிக்கும் தேசிகா - மெத்தப்
பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப்பற்றி
இசிக்குதையா காரோண ரே.

விளக்கவுரை :

திருக்காளத்தி


169. பொய்யை ஒழியாய் புலாலை விடாய் காளத்தி
ஐயரை எண்ணாய் அறம் செய்யாய் - வெய்ய
சினமே ஒழியாய் திருவெழுத்தைந்து ஓதாய்
மனமே உனக்கென்ன மாண்பு ?

விளக்கவுரை :

திருவிருப்பையூர்


170. மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் பாடல்கள் 161 - 165 of 196 பாடல்கள்


வெளிப்பட்டபின் பாடிய தலப் பாடல்கள்

திருவிடைமருதூர்


161. மென்று விழுங்கி விடாய்க்கழிக்க நீர்தேடல்
என்று விடியும் எனக்கு எங்கோவே - நன்றி
கருதார் புரமூன்றும் கட்டழலால் செற்ற
மருதா உன் சந்நிதிக்கே வந்து.

விளக்கவுரை :


திருவொற்றியூர்

162. கண்டம் கரியதாம் கண் மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல் அழகியதாம் - தொண்டர்
உடல் உருகத் தித்திக்கும் ஓங்கு புகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு.

விளக்கவுரை :

163. ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு
இடு மருந்தை யான் அறிந்து கொண்டேன் - கடு அருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியிற் பொடி !

விளக்கவுரை :

164. வாவிஎல்லாம் தீர்த்த(ம்) மணல் எல்லாம் வெண்ணீறு
காவனங்கள் எல்லாம் கணநாதர் - பூவுலகில்
ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றியூர் !

விளக்கவுரை :

திருவாரூர்


165. ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநா ளென்(று)
ஊரூர்கள் தோறும் உழலுவீர் - நேரே
உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
விளக்கிருக்கத் தீத்தேடு வீர்.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் பாடல்கள் 156 - 160 of 196 பாடல்கள்


156. அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள
முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்
மகனே” என அழைத்த வாய்க்கு ?

விளக்கவுரை :


கலிவிருத்தம்


157. முன்னை இட்ட தீ முப்பு ரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவ யிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

விளக்கவுரை :

நேரிசை வெண்பா


158. வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை

விளக்கவுரை :


159. வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய் ?

விளக்கவுரை :


160. வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் - பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் பாடல்கள் 151 - 155 of 196 பாடல்கள்



தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது பாடியவை


151. ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி ?

விளக்கவுரை :

152. முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன் ?

விளக்கவுரை :


153. வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன் ?

விளக்கவுரை :


154. நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்தி பகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீமூட்டுவேன் ?

விளக்கவுரை :


155. அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு ?

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் பாடல்கள் 146 - 150 of 196 பாடல்கள்


146. கல்லால் எறியுண்டும் காலால் உதையுண்டும் காளைகையில்
வில்லால் அடியுண்டு முன்னால் விடமுண்டு மேலளித்துப்
பல்லால் புரமெரிஏ கம்பவாணர் பாதாம்புயத்தின்
சொல்லால் செவியினில் கேளாதிருந்ததென தொல்வினையே.

விளக்கவுரை :

147. ஒரு நான்குசாதிக்கு மூவகைத் தேவர்க்கும் உம்பருக்கும்
திருநாளும் தீர்த்தமும் வேறுளதோவத் திசை முகனால்
வருநாளில் வந்திடும் அந்தக் கண்ணாளன் வகுப்பொழியக்
குருநாதனாணைக் கண்டீர் பின்னைஏதுக் குவலயத்தே?

விளக்கவுரை :

148. பாரோ நீரோ தீயோ வளியோ படர்வானோ
ஆரோ நானென்று ஆய்வுறுகின்றேன் அறிவில்லேன்
பாரோ நீரோ தீயோ வெளியோ படர்வானோ
ஆரோ நானென்று ஆய்வுறுகின்றஅது நீயே !

விளக்கவுரை :


149. நாப்பிளக்கப் பொய்உரைத்து நன்னிதியந் தேடி
நாம்ஒன்றும் அறியாத நறியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்தொளையிற்கால் நுழைத்துக்கொண்டே
ஆப்புஅதனை அசைத்துவிட்ட குரங்கனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.

விளக்கவுரை :

அறுசீர் விருத்தம்


150. மத்தளை தயிர்உண் டானும் மலர்மிசை மன்னி னானும்
நித்தமும் தேடிக் காரை நிமலனே நீஇன் றேகிச்
செய்த்தளைக் கயல்பாய் நாங்கூர் சேந்தனை வேந்தனிட்ட
சைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டு ளானே.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் பாடல்கள் 141 - 145 of 196 பாடல்கள்


141. நாய்க்கொரு சூலும் அதற்கோர் மருத்துவம் நாட்டில் உண்டோ?
பேய்க்கொரு ஞானம் பிடிபடுமோ? பெரும் காஞ்சிரங்காய்
ஆக்குவர் ஆர்? அருந்துவர் ஆர்? அதுபோல் உடம்பு
தீக்கிரை யாவதல்லால் ஏதுக்கு ஆம்? இதைச் செப்புமினே !

விளக்கவுரை :

142. கச்சில் கிடக்கும் கனதனத்தில் கடைக் கண்கள் பட்டே
இச்சித் திருக்கின்ற ஏழை நெஞ்சே இமவான் பயந்த
பச்சைப் பசுங்கொடி உண்ணா முலை பங்கர் பாதத்திலே
தைச்சுக் கிடமனமே ஒரு காலும் தவறில்லையே.

விளக்கவுரை :

143. மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவும்
கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை
போனாலும் பேறு இருந்தாலும் நற்பேறிது பொய் யன்றுகாண்
ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே !

விளக்கவுரை :

144. சற்றாகிலும் தன்னைத் தானறியாய் தனை ஆய்ந்தவரை
உற்றாகிலும் உரைக்கப் பொருந்தாய் உனக்கான நிலை
பற்றாய் குருவைப் பணியாய் பரத்தையர் பாலில் சென்று என்
பெற்றாய்? மடநெஞ்சமே? உனைப் போல் இல்லை பித்தனுமே

விளக்கவுரை :

145. உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே
ஒளியிட்ட தாள் இரண்டுள்ளே இருத்துவதுள் இண்மையென்று
வெளியிட்டு அடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலனே !

விளக்கவுரை :
Powered by Blogger.