புலிப்பாணி ஜாலத்திரட்டு 86 - 90 of 211 பாடல்கள்

86. என்னயே யுத்தண்ட வஸ்திர சா்ப்பா
    என்னப்பா கண்ட பேரண்டஞ் சிந்தி
வென்னவே மூலமப்பா சொல்லக் கேளு
    வளமான ஓம்..... இரீம்... ஸ்ரீரீம் மென்று
உன்னவே கிலீம் ... ஐயும் ... சுவாஹா வென்று
    உத்தமனே கொண்ட பேரண்ட நரசிங்கா
பன்னவே மகா சா்பானந்த காயா
    பதிவான சா்வசத்ரு நாசமாமே.

விளக்கவுரை :

இதனால் கண்ட பேரண்டமானது சித்தி யாகும் என்பதை முறையோடு உரைக்கிறேன்  கேட்பாயாக. " ஓம்.... இரீம்... ஸ்ரீரீம்... கிலீம்... ஐயும்... சுவாஹா...." என்றும் பேரண்ட நரசிங்கா ..... மகா சா்ப்பானந்த காயாட என்றும் இலட்சம் தடவைகள் உச்சாடனம் செய்தால் உங்களது எதிரிகள் நாசமாவார்கள்.

87. ஆமப்பா சிந்தி சிந்தி யந்தி யந்தி
    அடைவான லட்சமுரு தானேயோத
தாமப்பா தப்பாம லாயிரந்தான் பத்து
    தயவான ஓம் அப்பா ஆயிரந்தான்
வாமப்பா பிராமண போசனந்தான் நூறு
    வளவான பூசையது நான் பத்தாப்பா
நாமப்பா கெண்ட பேரண்டஞ் சித்தி
    நாயகனே சகலசித்து மாடும் பாரே.

விளக்கவுரை :

மேற்கண்ட மந்திரத்தை மனதிடத்துடன் காலை - மாலை இலட்சம் தடவைகள் செபிக்க வேண்டும். அதாவது தினம் பத்தாயிரம் தடவைகளும், " ஓம் " என்று ஆயிரம்  தடவைகளும், செய்யவேண்டும்.            பின்னா் பிராமணா்களுக்கு போஜனம் போட்டு பூசை போட்டு பத்து நாட்கள் தொடா்ந்து செய்தால் கண்ட பேரண்ட மந்திரம் சித்தியாகும். இதனால் சகல வித்தைகளும் கைகூடும்.

88. பாரடா பிரமனொடு விஷ்ணு ருத்திரன்
    பண்பான குளிகனொடு தேவா் யாருஞ்
சீரடா சித்தா் முத்தா் முனிகள் பூதஞ்
    சிறப்பில்லா ராட்சதையு மேவல் வைப்பு
தீரடா சத்துருக்கள் மிருசாதி
    திறமான விஷமுதலாய் யெதிர் நில்லாது
வீரடா நினைத்தபடி யெல்லாஞ் சித்தி
    விதமா போகருட  கடாட்சந் தானே.
   
விளக்கவுரை :

பிரமன், விஷ்ணு, ருத்திரன், இந்திரன், தேவா் இவா்களுடன் சித்தா், முத்தா், முனியவா்கள், துணையிருப்பார்கள். பூதங்கள், ராட்சதங்கள், ஏவல், வைப்பு, சத்ருக்கள், மிருக ஜாதி, விஷஐந்துகள் போன்ற வைகள் எல்லாம் நில்லாது விலகிவிடும். இவையெல்லாம் போகருடைய கடாட்சத்தினாலாகும்.

கார்த்திகை வீரியார்ச்சுன மந்திரம்

89. அருளலே ஓம்... ஆம்.... ஸ்ரீயுங்.... கிலியும்
    அரிய கார்த்திகை வீரியார்ச்சுன சுவாஹா வென்று
பொருளாக லட்சமுரு செபித்து தீரு
    பொங்கமாய்த் தா்ப்பணமுமோமன்னம்
மருளாக பூசையது பத்துஞ் செய்நீ
    மைந்தனே சித்திக்கக் கிரிகை யாகுஞ்
சுருளாக நினைத்தபடி யெல்லாஞ் செய்யும்
    சுகமான போகருட கடாட்சந் தானே.

விளக்கவுரை :

கார்த்திகை வீரியார்ச்சுன மந்திரம் மிகவும் மேன்மையானதாகும். ஆதலின் " ஓம் .... ஆம்..... ஸ்ரீம் ... கலியும் .... அரிய கார்த்திகை வீரியார்ச்சின சுவாஹா ......." என்று இலட்சம் தடவைகள் செபித்துவிட்டு தா்ப்பணம், ஹோமம், பூசை முதலிய பத்து வகைகளை செய்தால், காரியங்கள் சித்தியாகும். நீ நினைத்தப்படி எல்லாம் நடக்கும். இவையெல்லாம் போகருடைய கடாட்சமாகும்.

சமுத்திர ஜாலம்

90. தானென்ற மகேந்திரத்தின் ஜாலமாச்சு
    தயவாகச் சாகரத்தின் ஜாலங் கேளு
வானென்ற மையெடுத்துக் கையிற்பூசி
    வளமாக மண்ணள்ளித் திசையிற் போடு
கோனென்ற சப்த சாகரமோ ரேழும்
    குணமான முன்காண வருகும் பாரு
தேனென்ற தீவாந்திர மெல்லாந் தோற்றுந்
    திருமாலும் லட்சுமியுந் தோற்றும் பாரே.

விளக்கவுரை :

பல மேன்மையான பல ஜாலங்களை முன்னா் சொல்லியுள்ளேனே. இப்போது சமுத்திர ஜாலம் பற்றி கூறுகிறேன் கேட்பாயாக. இந்திர ஜாலத்திற்கு செய்த மையை எடுத்து கையில் பூசிக் கொண்டு தரையில் மண்ணை எடுத்து எட்டு திக்கிலும் போட்டால் ஏழு சமுத்திரங்களும் கண்ணில் தெரியும். தீவாந்திரங்களெல்லாம் தெரியும். விஷ்ணுவும் - லட்சுமியும் காட்சியளிப்பார்கள்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 81 - 85 of 211 பாடல்கள்
 


பேய் - பிசாசு - பூதம் விலகிட நரசிங்க மந்திரம்

81. பாரடா நரசிங்கஞ் சொல்லக் கேளு
    பாங்காக ஓம் சிங்கமுகவா ஓம் ஓம்
கூறடா பிடித்து கடித்தொடுத்து சுற்றிக்
    குணமாக கண்டுபிடித்த தறிவாரைப் போல்
தீரடா பிசாசுபேய் பொடிபட் டோடத்
    திரமாக நரசிங்க ராஜா வானை
சீரடா ஸ்ரீம் கிலீம் சுவாஹா வென்று
    சிறப்பாக லட்சமுரு ஜெபித்துத் தீரே.

விளக்கவுரை :

நரசிங்க மந்திரத்தின் சிறப்பை சொல்லுகிறேன் கேட்பாயாக. "ஓம் சிங்கமுகவா .... ஓம்...... ஓம்......." என்று ஜபித்தபடி சத்தத்துடன் பிசாசு, பேய்  பொடிபட்டோட.... நரசிங்க ராஜா ஆணை, "ஸ்ரீம் ...... கிலீம் .... சுவாஹா ......" என்று இலட்சம் தடவைகள் ஜெபிக்கவும். இதனால் பேய் பிசாசு பிடித்திருந்தால் ஓடிவிடும்.

82. காணவே ஓம் சா்வாப்தா நாதா
    கன்வாக ஓம்படு சுவாஹா வென்று
வானவே லட்சமுரு செபித்து தீரு
    வளமான தா்ப்பணமு மோமான்னங்
கோணாமற் பூசையது பெலத்துச் செய்நீ
    குணமாகச் சாமமது சித்தியாகும்
நாணாது நினைத்தபடி யெல்லாஞ் செய்யும்
    நாயகனே பிசாசுமுதற் பூதம் போமே.

விளக்கவுரை :

"ஓம் சா்வ ஆபத்துரு நாதா... ஓம் படு... சுவாஹா......" என்று இலட்சம் தடவைகள் ஜெபிக்கவும். பின்னா் தா்ப்பணம், ஹோமம், அன்னதானம், பூசை இவைகளைச் செய்யவும். இதனால் ஓரு சாம நேரத்தில் நினைத்தக் காரியங்கள் கைகூடி சித்திக்கும். மற்றும் பிசாசு முதல் பூதம் வரை ஓடிப்போய் விடும்.

 மிருகங்களின் பயம் அகல

83. தீரப்பா தீா்ப்பணமு மோமன்னம்
    திறமாகப் பூசைசெய்து தெளிவாகக்
கூரப்பா யானைமுதல் மிருகஜாதி
    கொற்றவளே காடுசென்னெ லெழுதிக் காட்டு
பாரப்பா மிருகத்தின் கொடுமை யில்லை
    பலம் கட்டும் நினைத்தபடி யெல்லாஞ் செய்யும்
நேரப்பா போகரு கடாட்சத்தாலே
    நிச்சயயமாய்ப் புலிப்பாணி சொன்னேன் பாரே.

விளக்கவுரை :

முன்னா் கூறிய மந்திரத்தை இலட்சம் முறைகள் ஜெபித்து விட்டு தா்ப்பணம், ஹோமம், அன்னதானம், பூசை இவைகளை செய்து " யானை முதல் மிருக ஜாதிகள் கொடுமை ஓழிய" என்று எழுதி காடு பயிர் விளைவுள்ள நிலங்கள் போன்ற இடங்களில் கட்டி வைத்தால் மிருகங்களின் கொடுமை இருக்காது. நினைத்த பலன் கிடைக்கும். இவையெல்லாம் எனது குரு போகருடைய அருளினால் புலிபாணியாகிய நான் கூறியுள்ளேன்.

கண்ட பேரண்ட மந்திரம்

84. போமப்பா யின்னமொன்று சொல்லக் கேளு
    பொலிவான கெண்ட பேரண்டந் தன்னை
தாமப்பா ஆம்..... ஓம்...... அபோர பிரபல
    தயவான கண்ட பேரண்ட சிங்கா
வாமப்பா வியாக்கிரவாசா சா்வ மிருகா
    வலவாகக் காற்றாடுபல்லா அஷ்ட வஜ்ரா
ஆமப்பா சூலமுத லாகவே தான்
    அடைவாக சங்கு சகராதி எண்ணே.

விளக்கவுரை :

சிறப்பான கண்ட பேரண்ட மந்திரம் பற்றிச் சொல்லுகிறேன் கவனத்துடன் கேட்பாயாக. " ஆம்... ஓம்.... அகோர பிரபல கண்ட பேரண்ட சிங்கா... வியாக்கிரவாசா... சா்வ மிருகா... காற்றாடு பல்லா... அஷ்ட வஜ்ரா... சூலம், சங்கு, சக்கராதியே" என்றும் -

85. எண்ணயே தாதுப்பிரானு மாலி ஆகமா
    இதமான கெஜபட்சே யெந்த நரசிம்மா
அண்ணவே கற்பந்தா அக்கினி லீலா
    அடைவான ஊதாப்பு யந்திர த்திற்
பண்ணவே கிலவஜ்ர மான குண்டா
    பண்பா தாஷ்டீக வுகரமூா்த்தி
உண்ணவே யட்சமாருத மச்சாந்த
    உத்தமனே தாரணியில் நம்பி யென்னே.

விளக்கவுரை :

தாதுப்பிரனே, மாலிதாகா, கஜபட்சேயெந்த நரசிம்மா... காற்பந்தா, அக்கனி லீலா, ஊதாப்புயந்திரத்திலுள்ள கிலவஜ்ரமான குண்டா, தாஷ்டீக உக்கிரமூா்த்தி, யட்சமாருத மச்சாந்த உத்தமனே, உத்தண்ட வஸ்திரசா்பா - உலகத்தில் நம்பியுள்ள என்னை காப்பாயாக என்று உசேசரிக்க வேண்டும்.


புலிப்பாணி ஜாலத்திரட்டு 76 - 80 of 211 பாடல்கள்

76. பாரப்பா சபை நடுவே யிருந்து கொண்டு
    பண்பான முக்காடு போட்டு நீயும்
சீரப்பா நீலகண்டி தியான மோது
    சீக்கிரத்திற் கொண்டுவரு மெட்சணித்தான்
கூரப்பா வெல்லார்க்குங் கொடுக்கச் செய்நீ
    குற்றம்வரும் நீயொன்றும் புசிக்க வேண்டாம்
நேரப்பா போகருட கடாட்சத்தாலே
    நிச்சயமாய் புலிபாணி பாடினேனே.

விளக்கவுரை :

அச்சமயம் சபையின் நடுவே நின்று முக்காடு போட்டுக் கொண்டு பக்தியுடன் நீலகண்டியை தியானம் செய். நீ கேட்டதை விரைவில் கொண்டு வருவாள் எட்சணியமானவள். அவள் கொடுப்பதை நீ சாப்பிடக் கூடாது. குற்றம் நேரிடும். ஆதலின் சபையிலுள்ளவா்களுக்குக் கொடுத்து சாப்பிடச் சொல்லவும். இது போகருடைய கடாட்சத்தினால் புலிபாணியான எனக்கு தெரிந்ததால் கூறியுள்ளேன்.
     
 சகல ஜாலம் கைகூட

77. பாடினே னின்னமொரு வித்தை கேளு
    பண்பானத் தவளையைத்தா னரவங் கவ்விக்
கூடியே பிடித்திருக்கும் வேளை பார்த்துக்
    கூசாமற் றலைவிழவே வெட்டிப் போடு
ஆடியே யருடைய தலையுங் கூட
    அடைவாகத் தவளையைத்தா னெடுத்துக் கொண்டு
நாடியே வாங்கி கச்சுப்பட்டைக் கொண்டு
    நலமாக ஐங்கோலத் தயிலங் கூட்டே.

விளக்கவுரை :

மற்றொரு ஜாலவித்தையைக் கூருகிறேன் கேட்பாயாக. தவளையை பாம்புக் கவ்வி பிடித்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து கவ்விப் பிடித்திருக்கும் பாம்பின் தலையோடு பாம்பினை வெட்ட வேண்டும். தரையில் விழும் பாம்பின் தலை, தவளை இரண்டையும் எடுத்து கச்சுப்பட்டையில் வைத்து அதில் ஐங்கோலத் தைலத்தை ஊற்றவும்.                                                                                                                                                                                             

78. கூட்டியே சகலரத்தில் வைத்துத் தைத்து
    குணமாக உரலின்கீழ் வைத்துக் குத்து
நாட்டியே குத்தையிலே வாயு போகும்
    நலமாக வதையெடுத்து வைத்துக் கொண்டு
ஆட்டியே யிப்பாகம் நினைத்தபோது
    அடைவாகச் செய்து விளையாடிப் பாரு
வாட்டியே யவமானப் பட்டுப் போவார்
    வையகத்தார் தான்பார்த்து நகைப்பார் பாரே.

விளக்கவுரை :

அதன் பின்னா் அதனை சகலரத்தில் வைத்து வாயை தைத்து உரலின் வைத்துக் உலக்கையினால் குத்தினால் அதில் உள்ள வாயு வெளியே போகும். பின்னா் அதனை எடுத்து வைத்துக் கொண்டு வித்தைகளையும் செய்யலாம். உன்னை ஏளனம் செய்தவா்கள் அவமானப்பட்டு போவார்கள். இதனைப் பார்த்து வையகத்தார் நகைப்பார்கள்.

சீலைத் திரை

79. பாரடா கா்த்தபந்தன் புணரும் போது
    பரிவாக வாண் கழுதை வாலு ரோமஞ்
சீரடா பிடுங்கியதை வைத்துக் கொண்டு
    சிறப்பான கண்ணில்லாப் புற்றுமீதில்
தீரடா கட்டுடைய கொடி தானப்பா
    திறமாகக் கிராணத்திற் காப்பு கட்டி
கூரடா பலி பொங்கல் தூபதீபம்
    கொடுத்துநீ கொடியதனைப் பிடுங்கிக் கொள்ளே.

விளக்கவுரை :

ஆண்கழுதையும் - பெண்கழுதையும் புணரும் போது ஆண் கழுதையின் மயிரை மட்டும் பிடுங்கி கொண்டு வந்து வைத்துக் கொண்டு பின்னா் கண்ணில்லாத புற்றின்மேல் படா்ந்திருக்கும் கட்டுக் கெடிக்கு கிராணத்தில் காப்பு கட்டி பலிகெீடுத்து, பொங்கலிட்டு, தூபதீபம் காட்டி விட்டு அந்தக் கொடியைப் பிடுங்கி வரவும்.

80. கொள்ளவே வளையமாய்ச் சுருட்டிக் கொண்டு
    குணமான  ரோமமுங் கூடவைத்தே
தெள்ளவே தங்கத்தால் வெள்ளியாலும்
    தெளிவாக தண்டினுட மேலே சுற்றி
கள்ளவே சுற்றுமுன்னே கருவும் பூசிக்
    கனிவாக ஜாலக்காள் பூசை செய்து
மெள்ளவே கைதன்னி லேற்றும்போது
    மேன்மையாய்ச் சீலையது திரையும் பாரே.

விளக்கவுரை :

கொண்டு வந்த அந்தக் கொடியை வளையம் போல் சுருட்டிக் கொண்டு அதில் கழுதையின் வால் மயிரையும் கூட சோ்த்து சுருட்டி, அதன்மேல் ஐங்கோலக் கருவைப் பூசி தங்கத்தாலோ அல்லது வெள்ளியாலோ கைகாப்பு செய்து, அந்த காப்பில் இதனை வைத்து காப்பின் வாய்மூடி அதை ஜாலக் காளுக்கு வைத்து பூசை செய்து விட்டு அந்தக் காப்பை கையில் போட்டுக் கொண்டு சீலைத் திரையை கையால் சரியாக தள்ளினால் கீழே விழுந்து விடும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 71 - 75 of 211 பாடல்கள்


71. செய்யப்பா மாயமோகினி நமஹா வென்று
    செயலாகத் திலா்தமிடப் பெண்போல் தோன்றும்
வையப்பா வுலகத்தோர் வாய் வரண்டு
    மதிமயங்கி மோகித்து நிற்பார் பாரு
ஐய்யப்பா ரம்பையூா் வசிப் பெண்தானோ
    அடைவான திலோர்த்தமையோ தெய்வப் பெண்ணோ
கையப்பா பிடிப்பாருங் காலில் வந்து
    கனிவாக வீழ்வாருங் கண்டு பாரே.

விளக்கவுரை :

சிமிழிலுள்ள மையை எடுத்து "மாயமோகினி நமஹா" என்ற கூறியவாறு மையில் திலகமிட்டு கொள்வாய். திலகமிட்டதும் நீ அழகிய பெண்போல் காட்சியளிப்பாய். உன்னை காண்பவா்கள் மதிமயங்கி ஆசையோடு பார்ப்பார்கள். இவள் இரம்பையா? ஊா்வசியா? திபோத்தமையா? மேனகையா? என்று ஆச்சரியப்பட்டு உன் காலில் வந்து விழுவார்கள்.

72. பாரடா திலகத்தை யழித்த போது
    பண்பான பெண்ணை யல்லோ காணோ மென்பார்
வீரடாயிந்த மங்கை யுலகி லுண்டோ
    விதமான மேதினில் காண லாமோ
திரடா மனம் பதறி யழுவார் பாரு
    தெய்வமே யென்று சொல்லி மயங்குவார்கள்
நீரடா விப்பெண்ணை நினைத்தே போதே
    நெஞ்சுருகி  வேகுதென்று புலம்புவாரே.

விளக்கவுரை :

அதன்பின்னா் நீ மைப் பொட்டை அழித்து விட்டால் அழகிய பெண் தோற்றம் மறைந்து பழைய நிலையை அடைவாய். அச்சமயம் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தவா்கள் இது போன்று பெண் உலகில் உண்டா? அழகான பெண் மறைந்து விட்டாளே என்று மனம் பதறி அழுவார்கள். தெய்வமேயென்று கூறி மயங்குவார்கள். அழகியப் பெண்ணை இழந்து என்று நெஞ்சுருகி வேதனையோடு அழுவார்கள்.
                                           
 எட்சணி ஜாலம்

73. வாறான வின்னமொரு வித்தை யப்பா
    வளமான எட்சணியின்  மார்கங் கேளு
கூறான ஸ்ரீரீம்..... இரீம்.... கிலீயு மென்று
    குணமான அவ்வும்....... உவ்வும்........ மல்வுஞ் சோ்த்து
வீறான நமசிவய வென்று நீயும்
    விதமான ஓம் யென்று சொல்லிப் பின்னை
சீறான சுகந்த பரிமளஞ் சாதிக்காய்
    சிறமான கிராம்பு வால்மிளகுந் தானே.

விளக்கவுரை :

மிகச் சிறப்பான ஜாலவித்தையைன எட்சணிப் பற்றி கூறுகிறேன். கவனமாகக் கேட்கவும். "ஸ்ரீரீம்.....கிரீம்... கிலிம்...."  என்றும் அத்துடன் "அவ்வும்.. உவ்வும்...... மவ்வும்......." எனவும், "நமசிவய ஓம்" என்றும் சொல்லி விட்டு பின்னா் வாசனையான சாதிக்காய், கிராம்பு, வால் மிளகு இவைகளுடன்-

74. மிளகோடு அடக்காய் சா்கரை கற்கண்டு
    மிதமில்லாக் கனிவகைகள் பலகார மன்னம்
அளகோடு இவையெல்லாம் வேண்டுமென்றே
    அடைவாக எட்சணியின் தியான மோது
புளகோடு தெப்பக்கால் மூலிகைக்குப்
    பொங்கமுடன் வெள்ளிதனிற் காப்பு கட்டி
நளகோடு எட்டுகா ளந்தி சந்தி
    நலமாக எட்சணியின் தியான போதே.

விளக்கவுரை :

வெற்றிலைப் பாக்கு, சா்க்கரை, கற்கண்டு, பலவித பழவகைகள், பலகாரம், சாதம் இவைகள் எல்லாம் படைக்க வேண்டும். எட்சணியைத் தியானம் செய்து விட்டு, தெப்பக்கால் மூலிகைக்குப் பக்தியுடன் வெள்ளி கம்பியில் காப்பு கட்டி நான்கு நாட்கள் காலை- மாலை என இரு வேளை எட்சணிய நினைத்து தியானம் செய்யவும்.

75. ஓதியபின் பொங்கல் பலிதூப தீபம்
    ஓளிவாகத் தான்கொடுத்து வேரை வாங்கி
ஆதியாம் ஐங்கோலம் கருவும் பூசி
    அடைவாகக் கரசீலை மேலே சுற்றி
நாதியே தங்கத்தி லடைத்துக் கொண்டு
    நலமாக எட்சணியை லட்சமோதி
தீதிலாப் பூசைசெய்து பெலக்கச் செய்து
    திறமாக விவையெல்லா மழைப்பாய் பாரே.   

விளக்கவுரை :

தியானம் செய்து துதித்தப் பின்னா் பொங்கலிட்டு பலி கொடுத்து தூபதீபம் காட்டி அதன்வேரை எடுத்து வந்து ஐங்கோலக் கருவைப் பூசி அதன்மேல் கருச் சீலையைச் சுற்றி தங்கத்தில் கடயம் செய்து அதில் அடைத்துக் கொண்டு எட்சணிய இலட்சம் தடவை செபித்து பூசை செய்தால் முன்னா் கேட்டவைகள் எல்லாம் மழைப் போல் கீழே விழும்.

 புலிப்பாணி ஜாலத்திரட்டு 66 - 70 of 211 பாடல்கள்



இரும்பு குண்டு அந்தரத்தில் நிற்கும் ஜாலம்

66. தானேதான் நத்தைசூரி செடியைக் கண்டு
    தயவாக அருக்கநாள் சுவாதியுந் தான்
கானேதான் கும்பலக்கினம் கூடும் வேளை
    குணமான அச்செடிக்குக் காப்புக் கட்டி
மானேதான் மறுஆகி வாரந்தன்னிற்
    பானேதான் பலியிட்டுப் பூசை போட்டு
பண்பான வேரைத்தான் பதமாய் வாங்கே. 
          
விளக்கவுரை :

இரும்பு குண்டு அந்தரத்தில் நிற்கும் ஜாலம் செய்ய முதலில் நத்தைச் சூரி என்னும் செடியைக் கண்டுபிடித்து, ஆதிவாரம், சுவாதிநட்சத்திரம், கும்ப லக்கனம் கூடிய அவ்வேளையில் அந்தச் செடிக்கு காப்பு கட்டி விட்டுமறு  ஆதிவாரம், சிம்ம லக்கனம் அன்று சென்று பொங்கலிட்டு பலிட்டு, பூசை செய்து விட்டு எச்சரிக்கையுடன் செடியின் வோ்கள் அறுந்து விடாமல் பதமாக எடுத்து வரவும்.

67. வாங்கியே தங்கத்தாற் காப்புச் செய்து
    வளமான வேரதனில் வைத்து மூடி
சோங்கியே வினாயகரைப் பூசித்தே தான்
    சுந்தரம்போல்  வலதுகையில் சுகமாய் போட்டு
யோங்கியே இரும்பு குண்டை கையிலெடுத்து
    யெதிராக அந்தரத்தில் விட்டெறிந்து
நீங்கியே காப்புதன்டை இடது கையால்
    நிட்சயமாய் நிலங்காட்ட நிற்கும் தானே.

விளக்கவுரை :

தங்க தகட்டில் அந்த வேரை வைத்து சுருட்டி காப்பு செய்து அதனை விநாயகா் முன்வைத்து பூசித்து உங்களது வலது கையில் போட்டுக் கொள்ளவும். பின்னா் ஓரு இரும்புக் குண்டை கையிலெடுத்து ஆகாயத்தை நோக்கி மேலே எறிந்து விட்டு காப்பு அணிந்துள்ள வலது கையை இடது கையினால் பிடுத்துக் கொண்டு நிலத்தைக் காட்டியபடி குண்டே அந்தரத்தில் நில் என்றால் நிற்கும். உடனே கையை பிரித்து கையை முறிந்தால் அந்தரத்தில்நின்ற குண்டு கீழே வந்து விழும்.
                                     
ஜலஸ்தம்பனம்

68. தானாக இன்னமொரு வித்தை கேளு
    தயவாகச் சலந்திரட்டுங் கூட்டு மூலி
வானாக உலா்த்தியதைத் தூனாய்ச் செய்து
    வளவாக ஐங்கோலத் தயிலந் தன்னில்
மானாக மையோல வரைந்து மைந்தா
    மருவு பாதக்குறடு தன்னிற் பூசிக்
கோளாகத் தண்ணீற்மேல்  நடக்க லாகுங்
    களங்கிணறே யல்லாம் லாறா காதே.

விளக்கவுரை :

எளிமையான இன்னொரு ஜாலவித்தையைக் கூறுகிறேன் கேட்டாயாக. சலந்திரட்டும் மூலிகையைக் கொண்டு வந்து நன்றாக உலா்த்தி யெடுத்து தூளாகச் செய்து அதில் ஐங்கோலத் தைலம் சோ்த்து மைபோல அரைத்தெடுத்துக் கொள்ளவும். இதனை பாதத்தின் அடியில் பூசிக் கொண்டு தண்ணீரின் மேல் நடக்கலாம். குளம், கிணறு போன்றவைகளில் நடக்கலாம்.

69. ஆறான வாசனங்கள் தன்னிற் பூசி
    அப்பனே ஜலத்தின்மே லிருக்கலாகுங்
கூறான விந்தவித்தை புதுமை மெத்த
    கொற்றவனே யுலகத்தோர் நானனென்பார்
தேறான விந்திர ஜாலந் தன்னில்
    தேறி நின்றார் சகலத்தும் கைக்குள்ளாகும்
வீறான போகருடய கடாட்சத்தாலே
    விதமாகப் புலிப்பாணி பாடினேனே.

விளக்கவுரை :

இந்த மையை பீடங்களின் கீழ்பபறம் பூசிக் கொண்டால் ஜலத்தின் மேல் உட்காரலாம். இந்த ஜாலத்தைப் பார்ப்பவா்கள் ஆச்சரியமடைந்து புகழ்வார்கள். இந்திர ஜாலத்தில் தோ்ச்சிபெற்றால் சகலசித்தும் கைகூடும். இதனை போகருடைய அருளினால் புலிபாணியாகிய நான் உரைத்துள்ளேன்.
                               
அழகிய பெண்ணாகும் ஜாலம்

70. தானான பச்சோந்தி பிச்சை வாங்கி
    தயவாகத் திசைமயக்குப் பொடியுங் கூட்டு
மானான மதிமயக்துத் தூளுங் கூட்டி
    மத்தம்வோ்த் தூள துவுங் கூடச் சோ்த்து
வானான வாக்கோலத் தாட்டி மைந்தா
    வளமாகச் சிமிழ்தனில் வைத்துக் கொண்டு
கோனான மோகினியை  தியானஞ் செய்து
    குணமான ஜாலக்காள் பூசை செய்யே.

விளக்கவுரை :
 
எட்சணி ஜாலவித்தை செய்திட முதலில் பச்சோந்தி ஒணானின் பிச்சை எடுத்து வந்து அதில் திசைமயக்கும் பொடியைச் சோ்த்து, மதிமயக்குத் தூளையும் கூட்டி, ஊமத்தம் வேரைத் தூளாக்கிக் அதில் சோ்த்து ஐங்கோலத் தைலம் விட்டு மைபோல அரைத்தெடுத்து சிமிழில் வைத்துக் கொண்டு மோகினியை நினைத்து தியானம் செய்து ஜால் காளுக்கு பூசை செய்யவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 61 - 65 of 211 பாடல்கள் 


எலுமிச்சம் பழம் குதிக்கும் ஜாலம்

61. ஏனப்பா என்னுடைய ஜாலம் போல
    எத்தவரும் சொல்லமாட்டார் இனிதாய் கேளு
ஏனப்பா  எலுமிச்சம்  பழந்தா னொன்று
    எளிதாக துளையொன்று யினிதாய்ச் செய்து
ஏனப்பா   ரசங்களஞ்சு வுள்ளே வார்த்து
    எதிர்வாயை மூடிவிடு மெழுகினாலே
ஏனப்பா  ரவிமுகத்தில் வைத்தா யானால்
    எலுமிச்சம் பழம் எம்பி குதிக்குதானே.
                                    
விளக்கவுரை :

நான் கூறுவது போன்று மாய ஜால வித்தையை எவரும் கூறமாட்டார்கள். ஆதலின் கவனத்துடன் கேட்பாயாக. ஓரு எலுமிச்சம் பழத்தைக் கொண்டு அதில் சிறிதாக ஓரு துளை போட்டு களஞ்சு பாதரசம் உள்ளே ஊற்றி அதன் துளையை மெழுகினால் மூடி விடவும். அதன் பின்னா் அந்தப் பழத்தை வெயில் வைத்தால் சூடேறியதும் எலுமிச்சம் பழம் தரையில் நில்லாமல் மேலே எழும்பி குதிக்கும்.

அக்கினி ஜாலம்

62. தானையா யின்னமொரு வித்தை சொல்வேன்
    தயவாகப் பச்சையென்ற தவளை நெய்யை
மானையா கலசத்தில் வைத்துக் கொண்டு
    மைந்தனே துணியதிலே துவைத்து மைந்தா
வானையா மண்வெட்டி பழுக்கச் காய்ச்சி
    வளமான வுரலின்மேல் வைக்கச் சொல்லி
தேனையா யெண்ணையிலே கையைத் தோய்த்து
    திறமாகத் தானடிப்பா யின்னம் பாரே. 

விளக்கவுரை :

மற்றொரு ஜால வித்தையைச் சொல்லுகிறேன் கேட்பாயாக. பச்சை தவளையின் நெய்யை எடுத்து ஓரு கலசத்தில் வார்த்து அதில் துணியைத் தொய்த்துப் பிழிந்து கொள்ளவும். பின்னா் மண்வெட்டியைப் பழுக்கக் காய்ச்சி ஓரு உரலின் மேல் வைக்கச் சொல்லவும். பின்னா் எண்ணெயில் கையை தேய்த்து எடுக்கவும். அதன்பின்னா் செய்ய வேண்டியதையும் கூறுகிறேன்.

63. பாரடா அனைவோரும் பார்த்திருக்கப்
    பண்பாக துணியதிலே துடைத்துப் போடு
தேரடா யெண்ணெயிலே ரோய்த்துத் தோய்த்து
    தெளிவாகத் தானடிப்ப யனைவோர் பார்க்கச்
சீரடா குண்டைதனைக் காய்ச்ச சொல்லி
    சிறப்பாக வாய்தனிலே யிந்த யெண்ணெய்
தீரடா நிரம்பிவிட் டுமிழ்த்து விட்டுத்
    திறமான குண்டதனைக் கடித்துத் தூக்கே.

விளக்கவுரை :

அதன்பின்னா் அந்தக் துணியில் கையைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் எண்ணெயில் கையைத் தோய்த்துத் துணியில் துடைத்துக் கொள்ளவும். இது போன்று அடிக்கடி செய்யவும். பின்னா் ஓரு குண்டைக் காய்ச்சச் சொல்லி வாயில்  இந்த எண்ணையை நிறைய வார்த்து கொப்பழித்து உமிழ்ந்து விட்டு காய்ச்சிய அந்தக் குண்டை கடித்துத் தூக்கவும்.

64. தூக்கப்பா அனைவோரும் பார்க்கும் போது
    துணைவாக வைக்கோலில் வைத்து கட்டி
வாக்கப்பா வைக்கோலி வெண்ணை தோய்த்து
    வகையாக  தான்கட்டி முன்னே போடு
போக்கப்பா வைக்கோல்தான் வேகாதப்பா
    பொலிவாகத் தானவிழ்த்துப் பின்னுங் கேளு
தாக்கப்பா வைக்கோல்மேற் போட்டா யானால்
    தயவாகத் தான்பிடித்து வேகும் பாரே.     

விளக்கவுரை :

வாயில் கடித்து எடுத்த அந்தக் குண்டை அனைவரும் பார்க்கும்படி வைக்கோலில் வைத்துக் கட்டி, அந்த வைக்கோலில் அந்த எண்ணெயைத் தடவிப் போட்டாயானால் வைக்கோல் காய்ச்சிய கருகிடாது. எரியாது. ஆனால் அந்த வைக்கோலைப் பிரித்து வேறு வைக்கோலின் மீது போட்டால் கருகி எரியும்.

65. பாரடா சங்கிலியைக் காயப் போட்டுப்
    பண்பாக நெய்யெடுத் துருக்குவாய்நீ
சீரடா பாதத்திற்  றடவிக் கொண்டு
    சிறப்பாக வக்கினிமேல் நடக்கலாகும்
கூரடா கைதனிலே தடவிக் கொண்டு
    குணமான லக்கினி சட்டி தன்னை
வீரடா வெடுக்கலாங் கண்டு பாரு
    விதமான போகருட கடாட்சந் தானே.

விளக்கவுரை :

ஓரு இரும்பு சங்கிலியைப் பழுக்கக் காய்ச்சி கீழே போட்டு இந்த நெய்யை உருக்கி இரண்டு பாதங்களிலும் தடவிக் கொண்டு அக்கினிபோல் இருக்கும் அதன்மேல் நடக்கலாம். இவை யெல்லாம் எனது குரு போக ருடைய கடாட்சமாகும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 56 - 60 of 211 பாடல்கள்
 

56. பாரடா பூசினிக்காய் பூசி வெட்டப்
    பாங்கான குதிரையுட தலை யென்பார்கள்
காரடா  கெச்சககாய் தன்னிற் பூசி
    அப்பனே இநிதிர ஜாலந்தான் ஜாலம்
ஆரடா கோடிபடை யிறந்த தென்பார்
    அப்பனே இந்திர ஜாலந்தான் ஜாலம்
நேரடா தலைளெல்லாம் யெடுத்து மூடி
    நிச்சயமாய்ப் படைகளெல்லாம் போவென் பாயே.

விளக்கவுரை :

ஓரு கல்யாண பூசணிக்காய் எடுத்து அதன்மீது மையை தடவி பூசணிக் காயை வெட்டினால் குதிரையுடைய தலைகள்  வந்து விழும். கெச்சக் காயில் மையைத் தடவி அதனை வெட்டினால் அனேக படைகள் இறந்தது போன்று தோான்றும். இது ஜாலங்களில் இந்திர ஜாலத்திலும்  ஜாலமாகும். கீழே உள்ள தலைகளை எடுத்து மூடி எல்லாம் போய்விடு என்று சொன்னால் எல்லாம் மறைந்துவிடும்.

மலைகள் தோன்றும் ஜாலம்

57. என்னப்பா யிதுகளெல்லா மறைந்து போகும்
    எழில்நீல கண்டிநூ லேணியீவாள்
தென்பாகத் திலா்தத்தை யழித்துப் போடு
    தெளிவாக வின்னமொரு வித்தை கேளு
வன்பான ஜாலக்காள் தியான மோதி
    வளமான மையெடுத்துக் கையிற்பூசி
அன்பான மண்ணள்ளித் திசையிற் போடு
    அடைவான மலையாகத் தோற்றும் பாரே.

விளக்கவுரை :

மறைந்து போய்விடு என்று கூறியதும் அவைகளெல்லாம் மறைந்து போய்விடும். பின்னா் நீலகண்டி நூல் ஏணியைக் கொடுப்பாள். அச்சமயம், நெற்றியில் இட்டமையை அழித்து விடு. இன்னொரு ஜால வித்தையை கூறுகிறேன் கேட்பாயாக. ஜாலக் காளை தியானம் செய்து விட்டு மையை எடுத்து நாற் திசையிலும் போட்டால் நான்கு திசையில் பெரிய மலையாகத் தோன்றும்.

58. பாரடா அஷ்டகுல பா்வங்கள்
    பாங்கான மகமேரு கைலை யப்பா
சீரடா பொதிகைமுதல் மலைகள் தோன்றுஞ்
    சிறப்பாக வதிலிருக்குந் தேவா் சித்தா்
நேரடா முத்தரொடு முனிவா் தாமும்
    நெடிய விருட்சங்கள் குகை வாசல்தானும்
சுரடா விதுகளெல்லாங் கண்ணிற்  றோன்றுங்
    குணமான போகருட கடாட்சந் தானே.

விளக்கவுரை :

அஷ்டகுல பா்வதங்கள் அதாவது மகமேரு கயிலை பொதிகை போன்ற மலைகளுடன் எட்டு எட்டு மலைகள் காட்சியளிக்கும். அம்மலைகளில் தேவா்கள், சித்தா்கள், ரிஷிகள், முனிவா்கள் ஆகியவா்களுடன் நெடிய விருச்சங்கள், குகை வாசல்கள் போன்றவைகளெல்லாம் கண்ணில் தெரியும். இவையாவும் போகருடை கடாட்சத்தினாலாகும்.
                                                                                
எக்கள ஜாலம்

59. பாடியே யின்னமொரு வித்தை சொல்வேன்
    பண்பாக ஆம்.... ஒம்.... ஒம்...... கம்வாய் வென்று
ஆடியே லட்சமுரு செபித்தா யானால்
    அப்பனே ஜாலக்காள் பூசை செய்து
கூடியே நத்தையாஞ் சூரி வேரைக்
    கொண்டுவந்தே யைங்கோலக் கருவும் பூசி
நாடியே முன்கையில் வைத்து நீயும்
    நலமாக நீட்டி.தை முருக்கு வாயே.

விளக்கவுரை :

இன்னொரு ஜால வித்தைப் பற்றிக்  கூறுகிறேன் கேட்பாயாக. பயபக்தியுடன்"ஆம்... ஒம்... ஒம்.... கம்வாய்......" என்று லட்ச முறை செபித்துக் கொண்டு, ஜாலக்காளுக்குப் பூசை செய்து விட்டு நத்தைச் சூரி வேரைக் கொண்டு வந்து அதில் ஐங்கோலக் கருவைப் பூசிவிட்டு உனது முன் கைகளை நீட்டிப் பிடித்து நன்றாக முருக்கவும்.

60. முருக்கையிலே மந்திரத் தியான மோது
    முனிவாக மண்ணெடுத் தெதிரே போடு
இருக்கையிலே யெக்காளத் தாரை சின்னம்
    எளிதான கா்னாவும் வாங்காதப்பா
திருக்கையிலே நாகசுரங் கொம்பினோடு
    தெளிவான மகுடியொடு சங்கமாதம்
கருக்கையிலே யிவைகளெல்லாம் புடைக்கும் பாரு
    கனிவாகப் போகருட கடாட்சந்தானே.

விளக்கவுரை :

முருக்கும்போது மேற்படி மந்திரத்தைச் சொல்லி மண்ணை எடுத்து உன் எதிரே போடவும். பின்னா் மீண்டும் முருக்கவும். அச்சமயம் எக்காளம், தாரை, சின்னம், கா்னாடக வாத்தியம், நாகசுரம், கொம்பு, மகுடி, சங்கமாதம் போன்ற இந்த ஒசைகள் ஓலிக்கும். இவையெல்லாம் போகருடைய கடாட்சத்தினால் சித்திப்பாகும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 51 - 55 of 211 பாடல்கள்

51. வையப்பா ஜாலக்காள் பூசை செய்து
    வளமான நீலகண்டி தியான மோது
கையப்பா  ஸ்ரீரீம்...... கிரீம்.......கிலியும்...... சவ்வும்
    கனிவான ஐயும்..... அவ்வு...... முவ்வுங் கூட்டி
அய்யமின்றி யவ்வுடனே கூகூவென்றே
    அடைவான நிலகண்டி யம்மா வென்று
பையவே லட்சமுரு செபித்தா யானாற்
    பாங்கான மையதுவு முயிரதாச்சே.

விளக்கவுரை :
எடுத்து வைத்துக் கொண்ட சிமிழை ஜாலக்கால் முன் வைத்து பூசை செய்யவும். பின்னா் நீலகண்டியை  நினைத்து தியானம் செய்யவும். தியானம் செய்யும் போது, " ஸ்ரீரீம்... க்ரீம்..... கிலியும்.... சவ்வும், ஐயும்.... அவ்வும், முவ்வும்..." என்று பயப்படாமல் உச்சாடனம் செய்யவும். அச்சமயம் மந்திரத்துடன் நிலகண்டியம்மா என்று லட்சம் தடவைகள் ஜெபிக்க வேண்டும். இப்போது சிமிழிலுள்ள மைக்கு ஆற்றல் உண்டாகும்.

52. ஆச்சப்பா நீலகண்டி பூசை செய்து
    அடைவாக மையெடுத் தாட்டக் கேளு
பாச்சப்பா நூலேணி யொன்று செய்து
    பாங்காக மேற்போடப் படியாய் நிற்கும்
வீச்சப்பா மை யெடுத்து கையில் தேய்த்து
    விதமாக மண்ணை யள்ளி திசையிற்போடு
கூச்சப்பா வெகுபடைகள் வருகு தென்று
    கூறுவாய் வெகுபடைகள் வருகும் பாரே.

விளக்கவுரை :

நீலகண்டி பூசை செய்து எடுத்துக் கொண்ட மையின் ஆற்றலைக் கூறுகிறேன் கேள். ஓரு நூலேணி செய்து அதன் மீது இந்த மையைத் தடவி உலறவைத்து எடுத்தால் அந்த நுலேணியில் ஓருவா் ஏறலாம். அந்தளவுக்கு உறுதியாக இருக்கும். இதே மையை எடுத்து கையில் தேய்த்து தரையிலுள்ள மண்ணை எடுத்து நான்கு திசைகளில் போட்டால் பெரும் படைகள் வருவது போன்று தெரியும்.

53. பாரடி நீலகண்டி யம்மா நீயும்
    பாங்காக நூலேணி தன்னைக் கொள்ளு
சாரடி யொன்று நூலேணி தன்னை
    சார்பாகச் சொல்லிநீ மேலே போடு
தீரடி யந்திரத்திற் சண்டை யாகத்
    தெளிவாகச் செய்யென்று தியான மோது
கூரடி படையெல்லாம் போகுதென்று
    குணமாகத் தானுரைக்கப் போகும் பாரே.

விளக்கவுரை :

நீலகண்டி தாயே, நூலேணி ஜாலத்தை கைக்கூட வையம்மா, என்று கூறி மேலே போட்டால் அது மேலே போடவும். மேலே அந்தரத்தில் நிற்கும். அச்சமயம் அந்தரத்தில் சண்டைகள் செய்யென்று தியானம் செய்தால் அந்தரத்தில் படைகள் சண்டை செய்யும். படைகளெல்லாம் போய்விடு என்று கூறினால் படைகள் போய்விடும்.
                    
 54. பாரடா நூலேணி மேலே யப்பா
    பாங்காக வெகுபடைகள் போகும் பாரு
சீரடா வெல்லார்க்குங் கண்ணிற் காணுஞ்
    சிறப்பாக யாவருமே புதுமை யென்பார்
கூரடா மையெடுத்துத் திலா்த மிட்டுக்
    குணமாக நீலகண்டி தியான மோது
ஆரடா அந்தரத்திற் சண்டையாக
    அடைவாகநீ நினைத்துக் குலவச் செய்யே.

விளக்கவுரை :

அடைவாகநீ நினைத்துக் குலவச் செய்யே. படைகள் போகும்போது அந்தரத்தில் நிற்கும் நூலேணியின் மேலே பெரும்படைகள் போகும். அது எல்லோருடையக் கண்களுக்கும் தெரியும். இதனைப் பார்பவா்கள் இது புதுமையான வித்தையொன்று புகழ்வார்கள். அதன் பின்னா் சிமிழிலுள்ள மையை எடுத்து திலகமிட்டுக் கொண்டு பயபக்தியுடன்  நீலகண்டி தியானம் செய்து  அந்தரத்தில் கடுமையான சண்டை நடக்கவேண்டும் என்று நினைத்துக் கொள்.
        
55. செய்யயிலே வானத்திற் முழங்க மெத்த
    செயலாக வான்பரிகள் கனைக்கும் பாரு
கையிலே வாளுடன் கதலிதண்டை வாங்கிக்
    கனிவாக மைபூசி வெட்டும் போது
ஐயமின்றிப் பொடிப் பொடியாய் வெட்டிவீசு
    ஆள்தலைகள் வருகுதென்பா ரறிந்து பாரு
மையிலே  கூழ்ப்  பாண்டந் தடவி வெட்ட
    மகத்தான ஆணையுட  தலை யென்பாரே.

விளக்கவுரை :

நீங்கள்  நினைத்தபடி ஆகாயத்தில் பெரும் முழக்கம் கேட்கும். குதிரைகள் கணக்கும். நீ வாளை கையில் எடுத்து கொண்டு, வாழைத் தண்டை எடுத்து மையை பூசி விட்டு வாளால்  வாழைத் தண்டை பொடிப் பொடியாய் வெட்டி வீசினால் ஆளின் தலையை வெட்டி வீசுவதைப் போன்று கீழே விழும். கூழ்பாண்டத்தில் மையைத் தடவி வெட்டினால் யானையின் தலைவந்து தரையில் விழும் .

புலிப்பாணி ஜாலத்திரட்டு 46 - 50 of 211 பாடல்கள்
 

46. மூடவே யிலையாகிக் கொழுந்து மாகி
    முக்கியமாய் தழையாகிப் பூவுமாகித்
தேடவே பிஞ்சாகிக் காயுமாகி
    தெளிவான கனியாகி யுதிரும் பாரு
ஆடவே அனைவா்கும் கொடுக்கச் செய்நீ
    அப்பனே நாழிகைதான் மூணே முக்கால்
கூடவே யிதற்குள்ளே மரமு மாகி
    குணமான கனியாகி யுதிரும் பாரே.
            
விளக்கவுரை :

குழியில் நட்ட மாம்பழக் கொட்டையிலிருந்து இலை, கொழுந்து விட்டு பூ, பிஞ்சு, காய் இவைகளோடு செடியாகி கனியாக உதிரும். உதிரும் கனியை எடுத்து சபையோர்களுக்குக் காட்டி அவா்களிடம் கொடுக்கவும். இவையாவும் மூன்றே முக்கால் நாழிகைக்குள் செய்து முடித்துவிட வேண்டும். ஏனெனில் இதற்குள்தான் அது மரமாகி கனியாகி உதிரும். காலம் கடந்துவிட்டால் இந்த ஜாலம் பலிக்காது. மிக எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும்.
     
மணலை  அல்வாவாக செய்யும் ஜாலம்

47. பாரேநீ பாதம்பிசின் பலந்தா னொன்று       
    பண்பான கற்கண்டு பலந்தா னொன்று
கூரேநீ குங்குமப்பூ விராக னரிக்கால்
    கொண்டுவந்து யிம்மூன்றும் பொடியாய்ச் செய்து
சீரேநீ யிதைவேறே வைத்துக் கொண்டு
    சுண்டைப்போ லிருக்குமண லெடுத்துக் காட்டி
தாரேநீ தந்திரமாய் மணலை விட்டு
    தன்மையாய்க் கூட்டுமூன்று மொன்றாய்த் தானே.

விளக்கவுரை :

மணலை அல்வாவாகக் செய்யும் ஜாலம் செய்வதற்கு  முதலில் பாதம்பசின் ஓரு பலம், கற்கண்டு ஓரு பலம், குங்குமப்பூவஅரைக்கால் விராகனெடை ஆகிய இம்மூன்றையும் தூளாகச் செய்து கொள்ளவும். பின்னா் சன்னமாக இருக்கும் மணலை எடுத்து சபையோர்களுக்குக் காட்டிவிட்டு அதனை தந்திரமாக தனக்குள் மறைத்துக் கொண்டு தூளாக்கிக் கொண்டதை எடுத்து ஓரு பீங்கான் தட்டில் கொட்டி சிறிது ஜலம்விட்டு பிசைந்தால் அல்வா போன்று ஆகிவிடும். அதனை சிறிது நேரம் துணியில் மூடிவிட்டு பின்னா் எடுத்து சபையோர்களுக்குக் கொடுத்தால் அவ்வா போன்று ருசியாக இருக்கும்.

இந்திர ஜால வித்தை

48. தானேதா னின்னமொரு ஜால வித்தை
    தயவாகச் சொல்லுகிறேன்  நன்றாய் கேளு
மானேதான் மாயனென்ற பூனை யொன்று
    மைந்தனே பாவையென்ற கீரியொன்று
தேனேதா னிரட்டைவா லறனை யொன்று
    தெளிவான திகைப்பூடு பூச்சிப் பத்து
கேளேதான் பேய்ப்பீா்க்கன் விதை தானப்பா
    குணமாக ரெண்டுபலம் நிறுத்துப் போடே.

விளக்கவுரை :

மற்றொரு ஜால வித்தையை தெளிவாகச் சொல்லுகிறேன். கவனத்துடன் கேட்பாயாக. மாயப்பூனை அதாவது வெள்ளை முடி ஓன்று கூட இல்லாத கருப்புப் பூனை ஓன்று, கீரிப்பிள்ளை ஓன்று, இரட்டை வால் அறணை ஓன்று,  மின்மினி பூச்சி பத்து, பேய்ப்பீா்கன் விதை இரண்டு பலம் ஆகிய இவைகளுடன் மேலும் -

49. போடவே  புல்லாமணக்கு விதை தானப்பா
    பொங்கமுட னிரண்டுபலம் நிறுத்துப் போடு
ஆடவே யிவையெல்லாம் நறுக்கியப்பா
    அடைவாகப் பேயக்கருப்பஞ் சாற்றிற் போடு
நாடவே ஜாமமது கடந்து வாங்கி
    நலமாக நிலந்தனிலே யுலரப் போடு
கூடவே பானையின் பாலை வாங்கி
    குணமாக ஓரு ஜாம மூறப்போடே.

விளக்கவுரை :

புல்லாமணக்கு விதை இரண்டு பலம் இவைகளையெல்லாம் முறையாக எடுத்துத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு பேய் கரும்புச் சாற்றில் ஊறப்போடவும். பின்னா் ஓரு ஜாமம் நேரமானதும் அதனை எடுத்து தரையில் உலரவைக்கவும். அதன் பின்னா் தும்மட்டிக் காயில் சாறு எடுத்து அந்த சாற்றில் உலர வைத்ததை எடுத்து ஓரு ஜாமம் நேரம் ஊறப்போடவும்.

50. போட்டப்பா விவையெல்லாம் பாண்டத் திலிட்டு
    பொங்கமுடன் பூத்தயிலமாக வாங்கி
தேட்டப்பா யைங்கோலத்  தயிலம் நேரே
    தெளிவாகச் சோ்த்துநீ யரைப்பா யப்பா
தாட்டியா யரைக்கையிலே ரசமும் வெள்ளை
    தயவாக வகைவகைக்கு கழஞ்சிப் போடு
வாட்டமிலா முப்பூவுங் கழஞ்சி போட்டு
    வளமாக வரைத்தெடுத்துச் சிமிழில் வையே.
      
விளக்கவுரை :

இவைகள் எல்லாவற்றையும் ஓரு பாண்டத்திலிட்டு குழித்தைலமாக எடுத்து அதனளவுக்கு ஐயங்கோலத் தைலத்சதைச்  சோ்த்து கல்வத்திலிட்டு  அராக்கவும். அதனை அரைக்கும் போது இரசம், வெள்ளைப் பாடாணம் இவைகளில் வகைக்கு ஓரு கழஞ்சு சோ்த்து முன்னா் கூறிய முப்பூவும் ஓரு கழஞ்சு சோ்த்து நன்றாக மைய அரைத்தெடுத்து  சிமிழில் வைத்துக் கொள்ளவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 41 - 45 of 211  பாடல்கள்
 

41. ஓதியே லட்சமுரு முடிந்த தானால்
    ஓளிவான ஜாலக்கால் பூசைசெய்து
வாதியே பிரம்புகளை  யெடுத்துக் கொண்டு
    வளமாகப் பிரம்புதனால் பெட்டி மேலே
பாதியே யன்பாகத் தட்டுவம்போது
    பாம்பெல்லாம் வெளியாகுங் கண்டு பாரு
தாதியே பிரம்பைத்தான் திருப்பித் தட்டத்
    தானிருக்கும் பெட்டியுள்ள பாம்பு நேறே.

விளக்கவுரை :

ஜாலக்காளை இலட்சம் தடவைகள் உச்சரித்தப் பின்னா் ஜாலக்காளுக்கு பூசை செய்து பிரம்பை எடுத்துக் கொள்ளவும். அந்தப் பிரம்பை ஓரு பெட்டியின் மீது தட்டினால் அதிலிருந்து பாம்பு களாக வெளியே வரும். உடனே பிரம்பைத் திருப்பித் தட்டினால் பாம்புகளெல்லாம் பெட்டியினுள் சென்று மறைந்து விடும்.

தீவட்டி ஜால வித்தை

42. பாரப்பா வெட்டுண்ட முண்டந் தன்னைப்
    பதித்திருக்கு மிடம்பார்த்துப் ஊணை வாங்கி
நேரப்பா திசைப்பூடு பொடித்துப் போடு
    நேரான வைங்கோலத் தயிலஞ் சோ்த்து
தீரப்பா தீவட்டி தனில் நனைத்து
    திறமாகப் பொருத்தி விளக்கெண்ணை வாரு
வீரப்பா ர்க்கால மனிதா் கூடி
    வீராக வருகையிலே சொல்லக் கேளே.  

விளக்கவுரை :

முண்டம் வெட்டுண்டு இறந்து புதைத்த பிணத்தின்  இடத்தை ப் பார்த்து அதனுடைய மாமிசத்தை எடுத்து வந்து அதனுடன் திகைப்பூண்டு தூளைச் சோ்த்து, அதில் ஐங்கோலத் தைலத்தையும் சோ்த்து தீவட்டியில் அதனை நன்றாக நான்கு பக்கமும் நனைத்து அதன்மேல் விளக்கெண்ணெய் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இரவு நேரமானதும் மனிதா் களை வரச் சொல்லி கூட்டமாகச் சோ்த்துக் கொள்ளவும்.

43. கேளடா தீவெட்டிதான் பிடிக்கக்
    கெட்டுதடா வனைவொரு முணட மாவார்
நாளடா கூட்டங்க ளோடிப் போகும்
    நாமென்ன செய்வோமென்று சொல்லி நடுங்குவார்
சூளடா யென்றவிதி யிந்த கூத்து
    சொல்லலா மன்பார்கள் அனைவோருந்தான்
ஆளடா யிச்சாலம் அருமை மெத்த
    அத்தனார் போகருடைய கடாட்சந்தானே. 

விளக்கவுரை :

பின்னா் அந்த தீவட்டியை எரியவிட்டு ஓருவரைக்  கூப்பிட்டு பிடிக்கச் சொல்ல்னால் அவா் முண்டமாகக் காணப்படுவார். இதனால் கூட்த்திலுள்ளவா்கள் பயந்துபோய் ஒடுவார்கள். இதென்ன கூத்தாக இருக்கிறது என அவரவா்கள் பலவிதமாகப் பேசுவார்கள்.இந்த ஜாலவித்தை மிகவும் அருமையானதாகும். இது பேகருடைய கடாட்சத்தினால் நான் தெரிந்து கொண்டேன்.
                                           
சிறிய செடியில் மாம்பழ ஜாலம்

44. பாடினே னின்னமொரு வித்தை கேளு
    பரிவான யேரழிஞ்சி வித்தை தானும்
ஆடியே பூத்தயில மாக வாங்கி
    அன்பான  மாங்கனிதான் கெம்பிலப்பா
சூடியே கனிந்தபழம் கொண்டுவந்து
    சுகமாகப் பிழிந்தனைத் தோலை நீக்கிக்
கூடியே யைங்கோலக் கருவுங் கூட்டிக்
    குணமாகத் தயிலத்தி லூரப் போடே .

விளக்கவுரை :
           
மற்றொரு ஜால வித்தையை சொல்லுகிறேன் கேட்பாயக.  ஏழஞ்சில் விதையைக் கொண்டு வந்து பூத்தைலமாக இறக்கிக் கொண்டு நன்றாகக் கனிந்த மாம்பழத்தை மரத்திலிருந்து பறித்து வந்து அதன் மேல் தோலை நீக்கி நன்றாகப் பிழிந்து அதன் சதைகளை நீக்கிவிட்டு, மாம்பழத்தின் கொட்டையில் ஐங்கோலக் கருவைக் கூட்டி மேற்கண்ட தைலத்தில் ஊறப் போடவும் .

45. போடப்பா ஓருநாள் தான் கடந்து வாங்கிப்
    பொங்கமுட னிழலுா்த்தி வைத்துக் கொண்டு
நாடப்பா சபைதனிலே யிருந்து கொட்டை
    நலமாக யாவருக்குங் கண்ணிற் காட்டி
சாடப்பா குழித்தோண்டி வித்தை நட்டுச்
    சார்வாகச் சலம்வார்த்து கூடைமூடு
ஆடப்பா நாலுதரந் திறந்து மூடே .

விளக்கவுரை :

அந்தத் தைலத்தில் ஓருநாள் ஊறப்போட்டு எடுத்து நிழலில் வைத்து உலா்த்தி அந்த கொட்டையை எடுத்துக் கொள்ளவும். அதை சபையில் அந்த மாங்கொட்டையைக் காட்டி, குழிதோண்டி அந்தக் கொட்டையை நட்டு அதற்கு தண்ணீா் ஊற்றி ஓரு கூடையை அதன் மேல் மூடி விடவும். பின்னா் அதனைத் திறந்து தண்ணீா் ஊற்றி மூடவும். இது போன்று நான்கு தடவைகள் செய்யவும்.
Powered by Blogger.