புலிப்பாணி ஜாலத்திரட்டு 136 - 140 of 211 பாடல்கள்

ஈடு முறை குளிகை
136. பாடியே யீடொன்று சொல்லக் கேளு
பண்பான அடைக்கலான் குருவி ஆண்தான்
ஆடியே பிடித்துவந் தபானத் தைத்து
அதின்வாயில் வூசியென்ற காந்தம் வெள்ளை
கூடியே வாயைநீ தைத்துப் போடு
குணமான சிறுபாண்ட மதிலே விட்டு
நாடியே வஸ்துவொரு படிதான் வார்த்து
நலமாக வாய்மூடி சீலை செய்யே.
விளக்கவுரை :
பல ஐதிவித்தைகளைப் பாடியுள்ள நான் இப்போது ஈடுமுறை ஒன்று சொல்லப் போகிறேன் கேட்பாபாக. அடைக்கலான் குருவியில் ஆண் குருவியைப் பிடித்துவந்து அதன் அபான வாயைத் தைத்துவிட்டு அந்தக் குருவியின் வாயில் ஊசி காந்தம் , சங்கு பாடாணம் , ஆகியவற்றைப் போட்டு அதன் வாயை தைத்துவிடவும். பின்னர் சிறு பாண்டத்தில் அதனை வைத்து கள்ளு ஒரு படி வார்த்து மேலே ஒரு பண்டத்தை மூடி மண்சீலை செய்யவும்.
137. செய்தபின் யடுப்பேற்றித் தீயை மூட்டி
சிறப்பாக ஒரு சாதி விறகினாலே
வைய்துமே மற்றியபின் யெடுத்துக் கொண்டு
வளமான குழியம்மி தன்னிற் போட்டு
கொய்தபின்பு ரோமமுட னஸ்தி தள்ளிக்
குலமாகக் கொடியும் ஊமத்தை வித்தும்
பைதபின்பு சுழல்வண்டு மின்னிற் பூச்சிப்
புகுத்த குழியானை யிந்திர கோபந்தானே.
விளக்கவுரை :
அதன்பின்னர் அப்பாண்டத்தை அடுப்பி லேற்றி ஒரே ஜாதி மரத்தின் விறகினால் எரித்து எரித்து வற்றியதும் பாண்டத்தை இறக்கி அதனை எடுத்து அதன் சிறகு , எலும்பு இவைகளை நீக்கிவிட்டு அதன் சதையைக் கல்வத்திலிட்டு கொடி ஊமத்தை விதை , சுழல் வண்டு , மின் மினி பூச்சி ,பண்ணிப் பூசி , இந்திர கோவப் பூச்சி ஆகிய இவைகளுடன் மேலும் -
138. தானென்ற தொட்டக்கால் வாடிவேறுந்
தயவான நாயுருவி கையான் வேறுந்
தேனென்ற திகைபூடு பூச்சி யப்பா
திறமாக வகைவகைக்கு விராக னொன்று
கோனென்ற ஈப்புரிய மீயுங்கூடங்
கொற்றவனே ஆடையொட்டி ஐவிரவி கஞ்சா
வானென்ற பேய்க்கருப்பஞ் சாற்றினாலே
வகைவகைக்கு சரியிடையாய் விட்டு ஆட்டே .
விளக்கவுரை :
தொட்டாற் சுருங்கி வேர் , நாயுருவி வேர் , கரிசாலஞ் கண்ணி வேர் , திகைப்பூடுப் பூச்சி ஆகிய இவைகளில் வகைக்கு ஒரு விராகன் எடை வீதம் எடுத்துக் கொண்டு மேலும் - ஈப்புலியும் , ஈயும் ஆடையொட்டியும் , ஜவிரலிற் கொஞ்சவும் வகைக்கு ஒரு விராகன் எடைவீதம் சேர்த்து பேய்க்கருப்பஞ் சாறு சரி எடையாக விட்டு அரைக்கவும்.
139. ஆட்டப்பா குளிகையது துவரை போல
அப்பனே செய்துநீ நிழலிலுலர்த்தி
நாடப்பா மந்திரந்தான் சொல்லக் கேளு
நமோ இங் ... இங் ... சிங் ... சிங் ... சுவாஹா வென்று
மாட்டப்பா விந்துவிட்டுக் குழைத்து நீயும்
மங்கையருக் கருசுவையில் தாம்பூலத்திற்
கூட்டப்பா மங்கையர்கள் விராக மீறிக்
கொப்பனையார் தாமணைய வருவார் பாரே.
விளக்கவுரை :
மைய அரைத்தெடுத்துத் துவரை அளவுக்கு குளிகைகளாகச் செய்து நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். பின்னர் கீழ்காணும் மந்திரத்தைச் சொல்லவும். "நமோ ... இங் ... இங் ... சிங் ... சிங் ... சுவாஹா ..." என்று கூறி அந்த மாத்திரையில் விந்துவிட்டுக் குழைத்து அறுசுவை உணவு அல்லது தாம்பூலம் ஆகியவற்றில் கலந்து நீயும் பெண்ணும் சாப்பிட்டால் அவர்கள் காம மிகுதியால் உன்னிடம் சேர்த்து இன்பத்தை அனுபவிப்பார்கள்.
பிரிவுக்குக் குளிகை
140. பாரமா பிரிவு செய்யுங் குளிகை யொன்று
பாடுகிற னன்றாக சொல்லக் கேளு
வாரடா செத்தாடு உண்ணி யப்பா
வளமான விடத்தலமாம் பட்டை கூட்டி
நீரடா தண்ணீர் விட்டரைத்து மைபோல்
நினைவாகத் துவரைபோற் குளிகை செய்து
கூடரா நினைத்தவுடன் முறிந்து போகும்
கொற்றவனே யறுசுவையில் தாக்கிப் போடே .
விளக்கவுரை :
இப்போது பிரிவு செய்யும் குளிகை ஒன்றினைக் கூறுகிறேன் கவனத்துடன் கேட்பாயாக . செத்த ஆட்டின் உண்ணியையும் , விடத்தேர் பட்டையையும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து மை பதத்திற்கு வந்ததும் எடுத்து துவரைப் பருப்பு அளவிற்கு குளிகைகளாகச் செய்து நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும் . எவரைப் பிரிக்க வேண்டுமோ அவர்களுக்கு இந்தக் குளிகையை அறுசுவை உணவில் கலந்து கொடுத்தால் உடனே உறவு முறிந்து பிரிந்து போய் விடுவார்கள்.