புலிப்பாணி ஜாலத்திரட்டு 156 - 160 of 211 பாடல்கள்


156. வாங்கியே  சக்கரத்தை  லட்ட  மோதி
    வளமாகத்தான்  புதைப்பாய்  தேவர்  முன்பில்
பாங்கியே  வஸ்துவுட  னஸ்தி  தானும்
    பாங்காத்  தேவர்முன்பு  வைத்துப்  போடு
தாங்கியே  பலிபூசை  செய்தாலப்பா
    தயவாகத்  திருநடன  மாடும்  பாரு
ஒங்கியே  கேட்டவரங்  கொடுக்கச்  செய்யும்
    உத்தமனே  ஜனக்கூட்ட  மாகும்  பாரே.

விளக்கவுரை :

பின்னர்  சக்கரத்திற்க்கு  இலட்சம்  தடவைகள்  ஜெபித்து  விட்டு  அதனைப்  புதைத்து  விடவும்.  தேவர்  முன்பு  வஸ்துவுடன்  கூடிய  எலும்பை  வைத்து  பலி  பூசை  செய்தால்  திருநடனமாடும்.  கேட்ட  வரத்தினைக்  கொடுக்கும்.  இதனால்  ஜனங்கள்  கூடி  உன்னைப்  பாராட்டி  புகழ்வார்கள்.

தேள்கடி  விஷம்  இறங்க

157. பாரடா  வின்னமொரு  வித்தை  கேளு
    பாங்கான  செம்போத்து  நாக்கு  மைந்தா
சேரடா  உடும்புடைய  நாக்குங்  கூட்டிச்
    செயலான  கீழ்காயின்  மூலம்  வாங்கிக்
கூறடா  காமப்பால்  வராக  னொன்று
    கொற்றவனே  யாண்கழற்சிக்  காயினுள்ளே
தீரடா  கிராணமது  தீண்டும்  போது
    திறமாக  வெடுத்து  கொசு  மெழுகால்  மூடே.

விளக்கவுரை :

மற்றொரு  ஜாலவித்தையைச்  சொல்லுகிறேன்  கேட்பாயாக.  செம்போத்து  என்னும்  கள்ளிக்காக  கையினுடைய  நாக்கும்  உடும்பின்  நாக்கும்  எடுத்துச்  சேர்த்து  அத்துடன்  கீழாநெல்லி  வேர் , முலைப்பால்  ஆகிய  இவைகளில்  வகைக்கு  ஒரு  விராகன்  எடையும் , ஆண்கெச்சக்  காயினுள்  உள்ள  பருப்பை  நீக்கிவிட்டு  இவைகளை  யெல்லாம்  அந்த  காயில்  அடைத்து  எடுத்து  கிராணம்  பிடிக்கும்போது  கொசு  மெழுகால்  மூடிவிடவும்.

158. மூடியே  தேள்கடித்து  வந்த  பேர்க்கு
    முன்னாகக்  கழற்சியதை  கையில்  யீந்து
ஆடியே  யின்னொருவர்  கையி  விய்ந்தால் 
    அப்பனே  யவனைவிட்  டிவன்மேற்  போகும்
நாடியே  தேளின்  விஷமென்ன  சொல்வேன்
    நடுநடுங்கி  யழுதிடுவா  னெறியுங்  கட்டுங்
கூடியே  காயைநீ  போடென்  றாக்காற்
    குணமாகப்  போட்டவுட  னிறங்கிப்  போமே.

விளக்கவுரை :

தேள்  கடித்து  வருவோரிடம்  முன்னர்  தயாரித்துள்ள  கெச்சக்  காயைக்  கையில்  கொடுத்து  இன்னொரு  காயை  மற்றொருவர்  கையில்  கொடுத்தால்  தேள்  கடித்து  விஷம்  ஏறியவரின்  விஷம்  ஏறியவரின்  விஷம்  அவரை  விட்டு  மற்றொருவர்  கையில்  காயை  கொடுத்திருந்தவருக்கு  அந்த  விஷம்  ஏறும்.  அவர்  நடுங்கி  அழுவர்.  அவருக்கு  நெறியும்  கட்டும்.  பயந்துபோன  அவரை  காயை  கீழே  போடவும்  என்று  கூறியதும்  அவர்  காயைப்  போட்டதும்  தேளின்  விஷம்  உடனே  இறங்கி  விடவும்.

கழுப்பின்  வீரம்

159. போமென்ற  கருநாயின்  விலாவின்  வில்லும்
    பொங்கமுடன்  காகத்தி  நரம்பு  தானும்
ஆமென்ற  சுடலையின்  கருவுங்  கூட்டி
    அப்பனே  யைங்கோலத்  தயிலஞ்  சேர்த்து
நாமென்ற  நாணத்திற்  பூசியப்பா
    நாயகனே  கழுப்பினுட  தியானங்  கேளு
தாமென்ற  ஒம்  ...றீம் ... கங் ... சங் ... ஐயுங்
    தயவாக  றீம் ... றங் ... லா ... லீ ... லூ ... வென்ன.

விளக்கவுரை :

கழுப்பினுடைய  வித்தையைச்  செய்வதற்கான  முறையைக்  கூறுகிறேன்.  கருநாயின்  விலாவின்  வில்லெழும்பு , காகத்தினுடைய  நரம்பு , சுடலையின்  கரு , ஆகியவைகளை  ஒன்றாகச்  சேர்த்து  ஐங்கோலத்  தயிலம்  சேர்த்து  நாணத்திற்  பூசிக்  கொள்ளவும்.  இப்போது  கழுப்பினுட  தியானம்  செய்கின்ற  முறையைக்  கூறுகிறேன்  கேள்.  "ஒம் ... றீம் ... கங் ... சங் ... ஐயுங் ... றீம் ... றங் ... லா ... லீ ... லூ ..."  என்றும் , மேலும் -

160. என்னவே  மங் .. சிங் ... சிவய ...நம ... வென்று
    என்ன  சொல்வேன்  மந்திரத்தை  லட்சமோது
          பன்னவே  பூசைபலி  பலக்கச்  செய்து
    பாங்கான  வெதிரியின்பேர்  தன்னை  சொல்லி
          நன்னவே  நாணற்ற  வியாதி  கொண்டு
    நடுநடுங்கி  மரணமாய்ப்  போவான்  பாரு
         அன்னவே  கழுப்பினுட  வீர  மெத்த
    ஆரறியப்  போகிறா  ரருமை  தானே.

விளக்கவுரை :

"மங் ... சிங் ... சிவய ... நம ..."  என்னும்  இந்த  மந்திரத்தை  இலட்சம்  தடவைகள்  ஒதிவிட்டு  பூசைசெய்து  பலி  கொடுத்து  விட்டு  உன்  எதிரியின்  பெயரைச்  சொல்லினால் , அவனுக்கு  கடுமையான  வியாதி  உண்டாகி  நடுநடுங்கி  மரணமடைவான்.  கழுப்பின்  வீரம்  அதிகமாகும்.இதன்  பெருமையை  யார்  அறியப்போகிறார்கள்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 151 - 155 of 211 பாடல்கள் 
 


விளைச்சல்  பெருகிட

151. ஆமடா  நாயுருவி  காப்புக்  கட்டி
    அப்பனே  ஸ்ரீமென்று  லட்ச  மோதி
தாமடா  காடுசெந்நெல்  கரும்பு  வாழை
    தயவான  கொடிக்காலுந்  தென்னந்  தோப்பும்
நாமடா  ஐங்கோலக்  கருவும்  பூசி
    வளமாகக்  கலசத்திற்  புதைத்தா  யானால்
நாமடா  யிதுகளெல்லா  மதிகமாகும்
    நலமாக  போகருட  கடாட்சந்  தானே.

விளக்கவுரை :

விளைச்சல்  கெடுவதற்கு  கூறியது  போன்று  விளைச்சல்  பெருக  வழிமுறைகளைக்  கூறுகிறேன்.  நாயுருவிச்  செடிக்கு  காப்பு  கட்டி  "ஸ்ரீம்"  என்று  இலட்சம்  தடவைகள்  ஒதிவிட்டு,  அதற்கு  ஐங்கோலக்  கருவும்  பூசி  கலசத்தில்  வைத்து  மூடி,  காடு,  செந்நெல்  விளையும்  வயல்,  கரும்பு  தோட்டம்,  வாழைத்  தோட்டம்,  போன்ற  இடங்களில்  இக்கலசத்தை  புதைத்து  வைத்தால்  நன்கு  விளைந்து  பலனைக்  கொடுக்கும்.  இவையாவும்  போகருடைய  கடாட்சமாகும்.

பூதப்  பைசாச  விநோதம்

152. தானான  சொரித்தவளை  பிடித்து  வந்து
    தயவான  சாம்பிராணி  வேணமட்டும்
மானான  அதின்வாயிற்  செலுத்தி  வைத்து
    மைந்தனே  புகையூரத்  தலைகீழ்  கட்டி
வானான  மண்டலந்தான்  கடந்து  வாங்கி
    வளமாக  சாம்பிராணி  எடுத்துக்  கொண்டு
ஆனான  தலைமஞ்சங்  கொடியுங்  கூட்டி
    அடைவான  சாம்பிராணி  புகையும்  போடே.

விளக்கவுரை :

ஒரு  சொரித்  தவளையைப்  பிடித்து  வந்து  அதன்  வாயில்  எவ்வளவு  சாம்பிராணி  பிடிக்கிறதோ  அதனளவுக்கு  சாம்பிராணி  பிடிக்கிறதோ  அதனளவுக்கு  சாம்பிராணியைத்  திணித்து  அந்தக்  தவளையை  தலைகீழாகத்  கட்டித்  தொங்கவிட்டு  அதன்  கீழே,  புகை  மூட்டம்  போடவும்.  இதுபோன்று  நாற்பத்தெட்டு  நாட்கள்  புகையூரல்  போட்டு  பின்னர்  அதன்  வாயிலுள்ள  சாம்பிராணியை  எடுத்துக்  கொண்டு  அதில்  தலைமஞ்சங்  கொடியை  அரைத்து  அதில்  சேர்த்து  சாம்பிராணிப்  புகைப்  போடவும்.

153. போடப்பா  புகைபிடிக்க  பிசாசு  பூதம்
    பொங்கமுள்ள  தேவரொடு  முனிகருப்பன் 
நாடப்பா  பிர்ம  ராட்சதனும்  சாத்தான்
    நலமான  லாடன்  சப்பாணி  பின்னுங்
கூடப்பா  ஒமென்று  போட்டா  யானால்
    கொற்றவனே  தலைவிரித்  தாடும்  பாரு
ஆடப்பா  பெருகுஞ்  சொல்லு  மையா
    அப்பனே  புகையினுட  பெருமை  தானே.

விளக்கவுரை :

"ஒம்"  என்று  சொல்லி  சாம்பிராணிப்  புகைப்போட்டு  பிடிக்க  பிசாசு , பூதம் , தேவர் ,முனி ,கருப்பன் , பிரம  ராட்சதன் , சாத்தான் , லாடன் , சப்பாணி , இவைகளெல்லாம்  இந்தப்  புகையினால்  தலைவிரித்தாடும்.  இதனால்  உன்னைப்  புகழ்வார்கள்.  இது  அந்தப்  புகையின்  பெருமையாகும்.

புகைபோடல்  வித்தை

154. பெருமையான  யின்னமொரு  மார்க்கங்  கேளு
    பேணியே  மனிதாஸ்தி  கழுதை  யஸ்தி
அருமையாய்  மனிதருட  தண்டுச்  சீலை
    அப்பனே  மனிதர்மலம்  பன்றி  அஸ்தி
உரிமையாம்  காக்கணம்வேர்  சீந்தில்மேனி
    உத்தமனே  முட்டை  கொஞ்சஞ்  சேர்த்திடித்துத்
தெரிமையாய்ப்  புகைபோடத்  தேவர்  யாருந்
    திறமாக  வாடுவார்கண்  சீ ... யென்  றோதே.

விளக்கவுரை :

பெருமைபடும்படியான  இன்னொரு  ஜாலவித்தைப்  பற்றிக்  கூறுகிறேன்  கேட்பாயாக  மனிதனுடைய  அஸ்தி  அதாவது  எலும்பு , கழுதையின்  எலும்பு , மனிதனுடைய  கோவணம் , மனிதனின் , மலம் , பன்றியின்  எலும்பு , காக்கணாம்  வேர் , சீந்தில்  தண்டு , குப்பை  மேனி , எரிமுட்டை  சிறிதளவு  இவைகளெல்லாம்  ஒன்றாகச்  சேர்த்து  உரலிலிட்டு  இடித்தெடுத்துக்  கொண்டு  அத்தூளில்  கொஞ்சம்  எடுத்து  " சீ ... "   என்று  சொல்லிப்  புகைப்போட்டால்  மனிதர்  முதல்  தேவர்கள்  வரை  ஆடுவார்கள்.

விநோத  ஜாலவித்தை

155. ஒதவே  யின்னமொரு  வித்தை  கேளு
    ஒளிவான  சிதம்பரத்தின்  பூசை  சொன்னோம்
கோதி  லுச்சாடனச்  சக்கரத்தைச்  கீறிக்
    கொற்றவனே  பிராமணரிற்  பிரம்மச்சாரி
ஆதரவா  யவன்  மறித்துத்  தகனமா
    மப்பனே  காடாற்று  முன்னே  தானும்
வாதாக  அஸ்தியொன்  றெடுத்து  வந்து
    வளமான  வஸ்து  வொரு  சேருவாங்கே.

விளக்கவுரை :

மற்றொரு  ஜாலவித்தையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  பின்பகுதியில்  சிதம்பரப்  பூசையில்  உரைத்துள்ளபடி  உச்சாடன  சக்கரத்தைத்  தகட்டில்  கீறி  அந்தணரில்  பிரம்மச்சாரி  ஒருவர்  இறந்து  அவனை  சுடுகாட்டில்  எரித்து  தகனம்  செய்வதற்கு  முன்  சென்று  சுடுகாட்டில்  அவனது  எலும்பு  ஒன்றை  எடுத்து  வந்து  அத்துடன்  வஸ்து  ஒரு  சேர்  சேர்த்துக்  கொள்ளவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 146 - 150 of 211 பாடல்கள் 


146. கேளடா  ஒம் ... ஸ்ரீறீம் ... பிரிய  நசி ... நசி ... யென்று
    கெணிதமுட  னிருவட  பேருமாறிப்
சூளடா  வைங்காய  மரைத்துப்  பூசி
    கறுக்கா  மந்திரமா  யிரந்தா  னோதி
வாளடா  சீலையிலே  வைத்துக்  கட்டி
    வளமாக  பூசைசெய்  திருப்பின்  முன்பில்
கேளடா  வைத்துவிடு  இருவர்  தாமுங்
    கொற்றவனே  பிரிபட்டுப்  போவார்  பாரே.

விளக்கவுரை :

"ஒம் ... ஸ்ரீறீம் ... பிரிய  நசி ... நசி ..."  என்று  இரண்டு  பேருடைய  (ஆண் - பெண்)  அதாவது  கணவன்  - மனைவி  பேரை  மாறி  மாறி  எழுதிய  தகட்டில்  ஐங்காயம்  அரைத்துப்  பூசி  மேற்படி  மந்திரத்தை  ஆயிரம்  தடவைகள்  ஜெபித்து  சீலையில்  வைத்துக்  கட்டி  பூசை  செய்து  கதவின்  முன்னே  இரப்பரில்  வைத்துவிட்டு  வந்துவிட்டால்  கணவன் - மனைவி  இருவரும்  ஒருவரைவிட்டு  ஒருவர்  பிரிந்து  விடுவார்கள்.

தாதுபுஷ்டி  விருத்தி

147. பாரப்பா  சந்தனமுந்  தேற்றான  வித்தும்
    பண்பான  பூமிசர்க்  கரையின்  மூலஞ்
சேரப்பா  பூனையென்ற  காலி  வித்துஞ்
    செயலான  முருங்கை  வேர்ப்பட்டை  கூட்டி
கூறப்பா  வகைவகைக்கு  விராகன்  ரெண்டு
    கொற்றவனே  தானரைத்து  தேங்காய்  பாலின்
தீரப்பா  சீனி  சர்க்கரையும்  போட்டுத்
    திறமாகக்  குடிப்பாயீ  ராறு  நாளாமே.

விளக்கவுரை :

தாதுபுஷ்டிக்கான  வழிமுறையைச்  சொல்லுகிறேன்  கேள்.  சந்தனம் , தேற்றான்  கொட்டை , பூமிசர்க்கரைக்  கிழங்கு , பூனைகாலி  வித்து , முருங்கை  வேர்ப்பட்டை  இவைகளிளெல்லாம்  வகைக்கு  இரண்டு  விராகன்  எடை  வீதம்  எடுத்துக்  கல்வத்திலிட்டு  தேங்காய்ப்  பால்  விட்டு  நன்றாகக்  அரைத்தெடுத்து  சீனிசர்க்கரைச்  சேர்த்து  பன்னிரெண்டு  நாட்கள்  குடிக்கவும்.

148. ஆமடா  குடித்துவரத்  தாது  புஷ்டி
    அப்பனே  வீரியந்தான்  விளையும்  போது
தாமடா  சூடுகள்தான்  தணியும்  பாரு
    தளதளப்பாய்  தேகமது  காந்தி  யுண்டாம்
வாமடா  மங்கையரைப்  புணர்ந்தா  யானால்
    வளமான  மாகமதனோ  விவனென்  பார்கள்
நாமடா  போகருட  கடாட்சத்  தாலே
    நலமாகப்  புலிப்பாணி  பாடினானே.

விளக்கவுரை :

பன்னிரெண்டு  நாட்கள்  குடித்தால்  தாதுபுஷ்டி  ஏற்பட்டு  வீரியம்  உண்டாகும்.  உடல்  சூடு  தணியும்.  தேகம்  பொலிவடையும்.  மங்கையரைப்  புணர்ந்தால்  இவன்  மன்மதனோ  என்று  எண்ணுவார்கள்.  இதனை  எனது  குரு  போகருடைய  அருளினால்  புலிப்பாணியாகிய  நான்  புகலுகின்றேன்.

மண்  பாண்டமுடைய

149. பாடியே  யின்னமொரு  வித்தை  கேளு
    பிரிவான  சாராய  மூன்று  பட்டை
நாடியே  கொணர்ந்து  கருச்சீலை  சுற்றி
    நாயகனே  காளிகோயில்  முன்பு  வைக்க
ஆடியே  பானையெல்லா  முடையும்  பாரு
    அடைவாக  விற்காது  கெட்டுப்  போகும்
கூடியே  எடுத்தெறிந்து  போட்டா  யானால்
    குணமாகப்  பானையது  விளையும்  பாரே.

விளக்கவுரை :

இப்போது  மற்றோரு  ஜால  வித்தையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.   சாராயம்  ஊறுகின்ற  வெள்வேலன்  பட்டை  மூன்று  கொண்டு  வந்து  கருப்புச்  சீலையை  அதன்மீது  சுற்றி,  காளிதேவியின்  கோயிலின்  முன்பாக  வைத்தால்  பானைகள்  எல்லாம்  உடைந்துவிடும்.  அதனால்  விற்பனையாகாது.  பின்னர்  வைத்ததை  எடுத்து  போட்டுவிட்டால்  உடைந்த  பானைகளெல்லாம்  உடையாத  பானைகளாக  மாறிவிடும்.

விளைச்சல்  கெட்டுப்  போக

150. விளைவுகெடக்  கொடிவேலிக்  காப்புக்  கட்டி
    விதமாகத்  தா ...  வென்று  லட்சமோது
களவாகக்  கலசத்தில்  வைத்து  மூடிக்
    கனிவாகக்  கருக்கூட்டி  காடுசெந்நெல்
விளைபெருகுங்  கோடிக்காலுங்  சோலை  தோப்பும்
    விதமான  தென்னமரச்  சோலை  தோப்பும்
அளவுபெற  வைக்கவெல்லா  பலனுங்  குன்றும்
    அப்பனே  யெடுத்தெறிந்தால்  பலனுண்டாமே. 

விளக்கவுரை :

விளைச்சல்  கெட்டுப்போக  ஒருமுறையை  உரைக்கிறேன்  கேள்.  கொடிவேலி  அதாவது  சித்திரமூலச்  செடிக்குக்  காப்பு  கட்டி  "தாவென்று"  இலட்சம்  தடவைகள்  உச்சரித்துவிட்டு  அதனைக்  கொண்டு  வந்து  கலசத்தில்  வைத்துமூடி  கருக்  கூட்டி  மூடி  நெல்  விளையும்  நிலம்,  கொடிக்கால்  தோட்டம்,  வாழைமரம்  தோட்டம்,  தென்னந்  தோப்பு  போன்ற  இடங்களில்  இதனைப்  புதைத்து  வைத்தால்  விளைச்சல்  பலன்  அளிக்காது.  கெட்டுவிடும்.  உடனே  புதைத்தை  எடுத்துப்  போட்டுவிட்டால்  பலனுண்டாகும்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 141 - 145 of 211 பாடல்கள் 


வசியம்  செய்தல்

141. போடவே  யின்னமொன்று  சொல்லக்  கேளு
    புகன்றபொன்  னாவாரை  மூலம்  வாங்கி
ஆடவே  கருக்கியதை  நிழலிலுலர்த்தி 
    அப்பனே  குழித்தயிலமாக  வாங்கி
கூடவே  குழியம்மி  தன்னில்  விட்டுக் 
    குக்குடத்தின்  வெண்கருவுங்  கூடவிட்டுச்
சாடவே  மாக்கொடியும்  புனுகும்  பூரம்
    தக்க  கோரோசனையும்  வகைக்கு  வொன்றே.

விளக்கவுரை :

இன்னொன்று  வித்தையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.பொன்னாவாரை  வேரைக்  கொண்டு  வந்து  நன்றாகக்  கருகும்படி  நிழலில்  உலர்த்தியெடுத்து  முறையாக  குழித்தயிலம்  செய்து  அதனை  கல்வத்திலிட்டு , கோழி  முட்டையின்  வெண்கருவை  அதில்  சேர்த்து  மேலும்  மாக்கொடி , புனுகு , பச்சைக்  கற்பூரம் , கோரோசனை  ஆகிய  இவைகளில்  வகைக்கு  ஒரு  விராகனெடை  எடுத்துச்  சேர்த்துக்  கொள்ளவும்.

142. ஒன்றான  வகைவகைக்கு  விராக  னொன்று
    ஒழுங்காகத்  தானரைத்துச்  சிமிழில்  வைத்து
நன்றாகத்  திலர்தமிடப்  புருஷ  ரெல்லாம்
    நாயகியாள்  கேட்டதெல்லா  மீவார்  பாரு
ஒன்றாக  வவர்வந்து  வாசல்  காப்பார்
    உனக்கடிமை  யாகவல்லோ  வேலை  செய்வார்
பன்றாக  வவளையே  காணா  விட்டால்
    பதறுவார்  சிணுங்குவார்  கோபிப்பாரே.

விளக்கவுரை :

வகைக்கு  ஒரு  விராகனெடை  வீதம்  எடுத்ததை  அந்தக்  கல்வத்திலிட்டு  நன்றாக  மைபோல  அரைத்தெடுத்து  சிமிழில்  வைத்துக்கொள்ளவும். சிமிழிலிருந்து  கொஞ்சம்  எடுத்து  திலகமிட்டுக்  கொண்டால்  புருஷர்களெல்லாம்  மனைவி  கேட்பதெல்லாம்  கொடுப்பார்கள். அவள்  சொல்லும்  வேலைகளையெல்லாம்  வாயில்  காப்பார்போல்  வேலை  செய்வார். அருள்  ஒரு  நிமிடம்  இல்லை  யென்றாலும்  பதறுவார் , சிணுங்கி  கோபிப்பார். இது  வசியமையாகும்.

வசியம்  செய்ய  மற்றொரு  வழி

143. கோவிதமா  யின்னமொரு  மார்க்கங்  கேளு
    குணமாம்  புல்லாமணக்குச்  சமூலம்  வாங்கி
ஆவிதமாய்  மாதவிடாய்  மூன்று  நாளும்
    அப்பனே  கட்டிவைத்து  நாலா  நாளில்
தவிதமாய்  மாக்கொடியும்  விராக  னொன்று
    தனியாக  முன்சீலை  விராக  னொன்று
பூவிதமா  யவணீரா  லரைத்து  மைபோல்
    பொங்கமுடன்  துவரைபோற்  குளிகை  செய்யே.

விளக்கவுரை :

வசியம்  செய்யும்  மற்றொரு  முறையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  புல்லாமணக்கு  சமூலம்  கொண்டு  வந்து  மாதவிடாகும்  மூன்று  நாட்களும்  அங்கு  வைத்துக்  கொள்ளும்  துணியில்  இந்த  சமூலத்தை  வைத்துக்  கட்டி  கொண்டு  நான்காவது  நாள்  அதனை  எடுத்து  அதனுடன்  மாக்கொடி  ஒரு  விராகன்  எடை , சமூலம்  கட்டியத்  துணி  ஒரு  விராகன்  எடை  ஆகிய  இவைகளை  சிறுநீர்விட்டு  மைபோல  அரைத்தெடுத்து  துவரைப்  பருப்பு  அளவுக்கு  குளிகைகளாகச்  செய்து  நிழலிலுர்த்தி  எடுத்துக்  கொள்ளவும்.

144. செய்யப்பா  குளிகையது  தாம்பூலத்திற்
    செயலான  வறுசுவையி  லன்னப்  பாலில்
வையப்பா  கொடுத்தவுடன்  மயங்குவார்கள்
     வாணுதலார்  தான்பிரியார்  மறுமுகமும்  பாரார்
கையப்பா  மகிழ்வாக  மருவி  வாவழ்வார் 
    கடன்வாங்கித்தான்  கொடுப்பார்  ஏவலாளாய்
ஐயப்பா  யவர்பிரியாச்  சிந்தை  செய்வார்
    அப்பனே  இனிபிரியுங்  குளிகை  யாட்டே.

விளக்கவுரை :

இந்த  குளியயை  வெற்றிலைப்  பாக்குடன்  சேர்த்தோ  அல்லது  அறுசுவை  உணவுடன்  சேர்த்தோ  அல்லது  பசும்  பாலில்  கலந்தோ  கொடுத்தால்  மயங்கி  போய்  பிரிய  மாட்டார்கள்.  வேறொரு  பெண்ணை  ஏறெடுத்தும்  பார்க்க  மாட்டார்கள்,  இணைபிரியாதிருப்பார்கள்.  கேட்பதை  வாங்கிக்  கொடுப்பார்கள்.  நீங்கள்  சொல்லும்  எந்த  வேலையையும்  மனம்  கோணாமல்  மகிழ்வுடன்  செய்வார்கள்.  இது  ஆற்றலுள்ள  குளிகையாகும்.

பெண் பிரிவுக்குக்  குளிகை

145. மாட்டடா  பெண்பிரியும்  பிரிவுக்  கெல்லாம்
    மைந்தனே  கடுகோடு  மயானச்  சாம்பல்
கூட்டடா  குடிபோன  வீட்டு  மண்ணும்
    குணமான  வருக்கனா  ளிரவு  வேளை
நாட்டடா  கத்தபந்தான்  புரண்ட  மண்ணும்
    நலமான  தச்சனுளிச்  சிறாவுஞ்  சேர்த்து
ஆட்டடா  முப்பாதை  பிரிந்த  மண்ணும்
    அப்பனே  மந்திரத்தைச்  சொல்லக்  கேளே.

விளக்கவுரை :

பெண்களைப்  பிரிப்பதற்க்கான  முறையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக . ஆற்றோரமாக  உள்ள  மயானத்திற்க்குச்  சென்று  பிணம்  எரித்த  சாம்பல் , குடிபோன  வீட்டில்  மண் , ஆதிவாரம்  இரவில்  கழுதை  புரண்ட  மண் , தச்சன்  உளிச்சிறாவும் , முச்சந்தி  கூடி  பிரிகின்ற  இடத்தின்  மண்ணும்  ஒன்றாகக்  கலந்து  கொள்ளவும் . இப்போது  அதற்கான  மந்திரத்தைச்  சொல்லுகிறேன்  கேள்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 136 - 140 of 211 பாடல்கள்


ஈடு  முறை  குளிகை

136. பாடியே  யீடொன்று  சொல்லக்  கேளு
    பண்பான  அடைக்கலான்  குருவி  ஆண்தான்
ஆடியே  பிடித்துவந்  தபானத்  தைத்து
    அதின்வாயில்  வூசியென்ற  காந்தம்  வெள்ளை
கூடியே  வாயைநீ  தைத்துப்  போடு
    குணமான  சிறுபாண்ட  மதிலே  விட்டு
நாடியே  வஸ்துவொரு  படிதான்  வார்த்து
    நலமாக  வாய்மூடி  சீலை  செய்யே.

விளக்கவுரை :

பல  ஐதிவித்தைகளைப்  பாடியுள்ள  நான்  இப்போது  ஈடுமுறை  ஒன்று  சொல்லப்  போகிறேன்  கேட்பாபாக.  அடைக்கலான்  குருவியில்  ஆண்  குருவியைப்  பிடித்துவந்து  அதன்  அபான  வாயைத்  தைத்துவிட்டு  அந்தக்  குருவியின்  வாயில்  ஊசி  காந்தம் , சங்கு  பாடாணம் , ஆகியவற்றைப்  போட்டு  அதன்  வாயை  தைத்துவிடவும்.  பின்னர்  சிறு  பாண்டத்தில்  அதனை  வைத்து  கள்ளு  ஒரு  படி  வார்த்து  மேலே  ஒரு  பண்டத்தை  மூடி  மண்சீலை  செய்யவும். 

137. செய்தபின்  யடுப்பேற்றித்  தீயை  மூட்டி
    சிறப்பாக  ஒரு  சாதி  விறகினாலே
வைய்துமே  மற்றியபின்  யெடுத்துக்  கொண்டு
    வளமான  குழியம்மி  தன்னிற்  போட்டு
கொய்தபின்பு  ரோமமுட  னஸ்தி  தள்ளிக்
    குலமாகக்  கொடியும்  ஊமத்தை  வித்தும்
பைதபின்பு  சுழல்வண்டு  மின்னிற்  பூச்சிப்
    புகுத்த  குழியானை  யிந்திர  கோபந்தானே.

விளக்கவுரை :

அதன்பின்னர்  அப்பாண்டத்தை  அடுப்பி  லேற்றி  ஒரே  ஜாதி  மரத்தின்  விறகினால்  எரித்து  எரித்து  வற்றியதும்  பாண்டத்தை  இறக்கி  அதனை  எடுத்து  அதன்  சிறகு , எலும்பு  இவைகளை  நீக்கிவிட்டு  அதன்  சதையைக்  கல்வத்திலிட்டு  கொடி  ஊமத்தை  விதை , சுழல்  வண்டு , மின்  மினி  பூச்சி ,பண்ணிப்  பூசி , இந்திர  கோவப்  பூச்சி  ஆகிய  இவைகளுடன்  மேலும் -

138. தானென்ற  தொட்டக்கால்  வாடிவேறுந்
    தயவான  நாயுருவி  கையான்  வேறுந்
தேனென்ற  திகைபூடு  பூச்சி  யப்பா
    திறமாக  வகைவகைக்கு  விராக  னொன்று
கோனென்ற  ஈப்புரிய  மீயுங்கூடங்
    கொற்றவனே  ஆடையொட்டி  ஐவிரவி  கஞ்சா
வானென்ற  பேய்க்கருப்பஞ்  சாற்றினாலே
    வகைவகைக்கு  சரியிடையாய்  விட்டு  ஆட்டே .

விளக்கவுரை :

தொட்டாற்  சுருங்கி  வேர் , நாயுருவி  வேர் , கரிசாலஞ்  கண்ணி  வேர் , திகைப்பூடுப்  பூச்சி  ஆகிய  இவைகளில்  வகைக்கு  ஒரு  விராகன்  எடை  வீதம்  எடுத்துக்  கொண்டு  மேலும் - ஈப்புலியும் , ஈயும்  ஆடையொட்டியும் , ஜவிரலிற்  கொஞ்சவும்  வகைக்கு  ஒரு  விராகன்  எடைவீதம்  சேர்த்து  பேய்க்கருப்பஞ்  சாறு  சரி  எடையாக  விட்டு  அரைக்கவும்.

139. ஆட்டப்பா  குளிகையது  துவரை  போல
    அப்பனே  செய்துநீ  நிழலிலுலர்த்தி
நாடப்பா  மந்திரந்தான்  சொல்லக்  கேளு
    நமோ  இங் ... இங் ... சிங் ... சிங் ...  சுவாஹா  வென்று
மாட்டப்பா  விந்துவிட்டுக்  குழைத்து  நீயும்
    மங்கையருக்  கருசுவையில்  தாம்பூலத்திற்
கூட்டப்பா  மங்கையர்கள்  விராக  மீறிக்
    கொப்பனையார்  தாமணைய  வருவார்  பாரே.

விளக்கவுரை :

மைய  அரைத்தெடுத்துத்  துவரை  அளவுக்கு  குளிகைகளாகச்  செய்து  நிழலில்  உலர்த்தி  எடுத்துக்  கொள்ளவும்.  பின்னர்  கீழ்காணும்  மந்திரத்தைச்  சொல்லவும்.  "நமோ ... இங் ... இங் ...  சிங்  ... சிங் ...  சுவாஹா ..."  என்று  கூறி  அந்த  மாத்திரையில்  விந்துவிட்டுக்  குழைத்து  அறுசுவை  உணவு  அல்லது  தாம்பூலம்  ஆகியவற்றில்  கலந்து  நீயும்  பெண்ணும்  சாப்பிட்டால்  அவர்கள்  காம  மிகுதியால்  உன்னிடம்  சேர்த்து  இன்பத்தை  அனுபவிப்பார்கள்.

பிரிவுக்குக்  குளிகை

140. பாரமா  பிரிவு  செய்யுங்  குளிகை  யொன்று
    பாடுகிற  னன்றாக  சொல்லக்  கேளு
வாரடா  செத்தாடு  உண்ணி  யப்பா
    வளமான  விடத்தலமாம்  பட்டை  கூட்டி
நீரடா  தண்ணீர்  விட்டரைத்து  மைபோல்
    நினைவாகத்  துவரைபோற்  குளிகை  செய்து
கூடரா  நினைத்தவுடன்  முறிந்து  போகும்
    கொற்றவனே  யறுசுவையில்  தாக்கிப்  போடே .

விளக்கவுரை :

இப்போது  பிரிவு  செய்யும்  குளிகை  ஒன்றினைக்  கூறுகிறேன்  கவனத்துடன்  கேட்பாயாக . செத்த  ஆட்டின்  உண்ணியையும் , விடத்தேர்  பட்டையையும்  சேர்த்து  தண்ணீர்  விட்டு  அரைத்து  மை  பதத்திற்கு  வந்ததும்  எடுத்து  துவரைப்  பருப்பு  அளவிற்கு  குளிகைகளாகச்  செய்து  நிழலில்  உலர்த்தி  எடுத்துக்  கொள்ளவும் . எவரைப்  பிரிக்க  வேண்டுமோ  அவர்களுக்கு  இந்தக்  குளிகையை  அறுசுவை  உணவில்  கலந்து  கொடுத்தால்  உடனே  உறவு  முறிந்து  பிரிந்து  போய்  விடுவார்கள்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 131 - 135 of 211 பாடல்கள்

 

131. சேரப்பா  வகைவகைக்கு  விராக  னொன்று
    சீரான  மத்தித்து  மந்திரந்தான்
பாரப்பா  சர்வலோக  வசிகரி  ஒமென்று
    பண்பாக  யாயிரத்  தெட்டுஞ்  செபித்து
நேரப்பா  திலர்தமிடு  புருஷர்  பெண்கள்
    நிச்சயமாய்  கேட்டதெல்லா  மீவாரப்பா
கூடப்பா  பகையெல்லாம்  நசித்து  போகும்
    குற்ற  மொன்று  யில்லையடா  ஜெகத்தில்  தானே.

விளக்கவுரை :

கூறியதில்  வகைக்கு  ஒரு  விராகன்  எடை  சேர்த்து  நன்கு  மத்தித்து  கீழ்காணும்  மந்திரத்தை  ஒதவும்.  "சர்வலோக  வசிகரி ... ஒம் ..."  என்று  ஆயிரத்தெட்டு  தடவைகள்  ஜெபிக்கவும்.  பின்னர்  தயாரித்த  அஞ்சனத்  மையில்  சிறிது  எடுத்து  திலகமிட்டுக்  கொண்டால்  ஆண்களும்,  பெண்களும்  நீங்கள்  கேட்டவற்றைக்  கொடுப்பார்கள்.  பகைவர்கள்  இருப்பின்  ஒழிந்து  விடுவார்கள்.  உனக்கு  இந்த  உலகத்தில்  எந்த  தீமையும்  ஏற்படாது.

பாதாள  அஞ்சனம்

132. தானப்பா  வேர்வெடித்த  பலாவின்  கொட்டை
    தான்கருக்கி  விராகநிடை  பத்த  தாகும்
தேனப்பா  அஞ்சனம்  பாஷன  மொன்று
    தெளிவாகப்  குழியம்மி  தன்னற்  போட்டு
வானப்பா  விளக்கெண்ணெய்  தன்னிலாட்டு
    வளமாக  ஒருசாம  மரைத்த  பின்பு
கோனப்பா  சிமிழில்வைத்  தஞ்சனிக்குங்
    குணமான  வனுமார்க்கும்  பூசை  செய்யே.

விளக்கவுரை :

வேர்ப்  பாலக்கொட்டையைக்  கருக்கிக்  கொண்டு  அதில்  பத்து  விராகன்  எடை,  அஞ்சனப்  பாடாணம்  ஒன்று  இவைகளை  கல்வத்திலிட்டு விளக்கெண்ணெய்  விட்டு  ஒரு  சாம  நேரம்  அரைத்தெடுத்து  அதனை  ஒரு  சிமிழில்  வைத்துக்  கொண்டு  அஞ்சன  தேவிக்கும்,  அனுமார்க்கு  பூசை  செய்யவும்.

133. செய்தபின்பு  கையிலிட்டு  யெவரும்  பார்க்கச்
    செகத்திலுள்ள  நிதிகளெல்லாங்  கண்ணிற்  காணும்
எய்தபின்பு  வேண்டியதை  யெடுத்துக்  கொள்ளு
    இதமாக  இகபரத்துக்  சூதவியாகும்
உய்தபின்பு  நாழிகைதான்  பாதாளத்தில்
    உத்தமனே  நிகழ  முன்னூருமாகும்
பெய்தபின்பு  யிம்மைதா  னுறுதிமெத்த
    பார்த்தவர்க்குப்  பலணுண்டு  பலிக்கும்  பாரே.

விளக்கவுரை :

பூசை  செய்து  விட்டு  சிமிழிலுள்ள  மையை  கையிலிட்டுக்  கொண்டு  யார்  பார்த்தாலும்  சர்வ  நிதிகளும்  கன்ணில்  தெரியும்.  அச்சமயம்  வேண்டியதை  எடுத்துக்  கொள்ளவும்.  இது  இகபரத்துக்கு  உதவியாகயிருக்கும்.  இந்த  மையை  செய்து  முடித்து  முன்னூறு  நாழிகை  பூமியின்  அடியில்  புதைத்தெடுத்து  உபயோகித்தால்  உடனே  காரியம்  சித்தியாகும்.  இதற்க்கு  பாதாள  அஞ்சனம்  எனப்படும்.

குறிசொல்லிட

134. பாரடா  ஆடையொட்ட  சமூமைப்பா
    பண்பான  நின்றிடந்  தீஞ்சமூலி
சேரடா  கருச்சீலை  யிந்த  மூன்றும்
    செம்மையாய்  கருக்கியல்லோ  மைபோலாட்டி
சீரடா  சுடலையென்ற  தயிலஞ்  சேர்த்துச்
    ஈசஷ  வீரடா  அனுமாரை  தியானஞ்  செய்து
    விதமாகத்  திலகமிட்டுக்  குறிதான்  சொல்லே.

விளக்கவுரை :

ஆடையொட்டி  சமூலம்,  தீஞ்சமூலி,  கருப்புத்  துணி  ஆகிய  மூன்றையும்  ஒன்றாகச்  சேர்த்து  எரித்து  கருக்கி  அதனை  கல்வத்திலிட்டு  மைபோல  அரைக்கவும்.  மைபதமானதும்  அதில்  சுடலைத்  தைலம்  சேர்த்து  நன்கு  அரைத்து  சிமிழில்  எடுத்து  வைத்து  அனுமாரை  தியானம்  செய்து  சிமிழிலுள்ள  மையை  எடுத்து  திலகமிட்டு  கொண்டு  குறி  செல்லவும்.

135. சொல்லடா  அஞ்சனாதேவி  புத்ரா
    சொகுசான  வாய்வுமைந்தா  புருஷருபா
வல்லவா  அனுமந்தா  ராம  தூதா
    வந்துகுறி  சொல்லலென்று  வணங்கி  கொள்ளு
இல்லப்பா  நினைத்ததெல்லாஞ்  சொல்வான்  பாரு
    என்னசொல்வே  னவனுடைய  குறிதான்  மைந்தா
நல்லப்பா  போகருட  கடாட்சத்தாலே
    நலமாகப்  புலிப்பாணி  பாடினேனே.

விளக்கவுரை :

குறிசொல்வதற்க்கு  முன்னர்  ,  "அஞ்சனா  தேவி  புத்திரா , வாயு  மைந்தா , புரூஷரூபா , வல்லவா , அனுமந்தா , இராம  தூதா , வந்து  குறி  சொல்லு"  என்று  கூறி  வணங்கிவிட்டு  குறி  சொல்லவும்.  குறி  கேட்க  வந்தவர்கள்  நினைத்ததையெல்லாம்  நீ  சொல்லுவாய்.  இது  போகருடைய  அருளினால்  புலிப்பானி  பாடியுள்ளேன்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 126 - 130 of 211 பாடல்கள்

 

126. செய்யப்பா மையெடுத்துப் பார்க்கும்போது
    செயலான களவுமுத லேவலப்பா
வையப்பா தொழில் முறையும் தெய்வபூதம்
    வளமான பிசாசு ராட்சத கணங்கள்
பையப்பா மோடிதர னொருவன் செய்தால்
    பாங்காக யவன் செய்கை  தோற்றாகும்
கையப்பா  யிதுபார்வை மைதானப்பா
    கனிவாகச் சொல்லுமடா கருத்தாய்த் தானே.

விளக்கவுரை :

அதன்பின்னா் சிமிழிலிருந்து மையை எடுத்து தடவி பார்க்கும் போது, தம்மிடம் திருடியவா்வன், ஏவல் செய்தவன், தொழில் முறையில் எதிரி, ஆகியவைகளுடன் பிசாசு, ராட்சதன், கணங்கள், மோடி செய்தவன் போன்றவா்களின் உருவம் தெளிவாக அந்த மையில் தெரியும். இதனை பார்வை மை என்றும் சொல்லுவார்கள்.

கவச  மந்திரம்

127. தானேதான்  கவசமொன்று  சொல்லக்  கேளு
    தயவான  ரீங்காரம்  வெள்ளி  தகட்டில்
மானேதான்  இம் ... உம் ... கம் ... ராங் ... சிங் ... கென்று
    மைந்தனே  யாயி ... டாகினி ... மாங்காளி ...
ஊனேதான்  விஷ்ணு  சகோதரி  சர்வாணி
    உமைதேவி  பராசக்தி  ந-வ-சி  யென்று
கோனேதான்  லட்சமுரு  செபித்துப்  போடு
    கொற்றவனே  சத்திசிவ  பூசையாச்சே.

விளக்கவுரை :

கெட்ட  காரியங்களைத்  தடுத்து  நன்மை  யளிக்கும்  கவச  மந்திரம்  ஒன்றைக்  கூறுகிறேன்  கேட்பாயாக  சுத்தவெள்ளி  தகட்டில்,  "இம் ... உம் ... கம் ... ராங் ... சிங்"  என்றும்,  "ஆயி ... டாகினி  மாங்காளி  விஷ்ணு  சகோதரி  சர்வாணி ... உமாதேவி ... பராசக்தி ... ந-வ-சி"  என்றும்  எழுதவும்.  இதனை  வைத்து  இலட்சம்  தடவைகள்  ஜெபித்துவிட்டு  சக்தி  - சிவ  பூஜை  செய்யவும்.

128. செய்யடா  தியானமிட்டு  விபூதி  பூசக்
    செகதலத்தில்  ஏவல்  முதல்  பிசாசுபூதம்
பையவே  புதையிலே  வேர்  பிடுங்கிப் 
    பகர்ந்த  கருத்தடவிச்  சக்கரங்களாட்டில்
கையவே  பார்வையுடன்  குரளிகூட்டி 
    நலமாக  மற்றுமுள்ள  சூனியங்கள்
கையவே  கல்லெறிக்கு  நீக்குமப்பா
    கனிவான  மந்திரத்தை  எழுதிக்  கட்டே.  

விளக்கவுரை :

பூசை  செய்துவிட்டு  விபூதி  பூசி  உலகத்தில்  ஏவல்  முதல்  பிசாசு  பூதம்  இவைகளின்  பாதிப்பை  தடுத்திட,  வேர்  பிடுங்கி,   கருவைத்  தடவி  எழுதி  வைத்த  சக்கரத்தில்  வைத்து  அதனை  உற்று  நோக்கியபடி  பார்த்தாயானால்  மற்றுமுள்ள  சூனியங்கள்,  கல்லெறி  இவைகள்  ஏற்படாது.  இந்த  மந்திரத்தை  தகட்டில்  எழுதி  கட்டிக்  கொள்ளவும்.  இதனால்  எந்த  கெட்ட  காரியமும்  உங்களைப்  பாதிக்காது.

காரியம்  சித்தியாக  அஞ்சனம்

129. பாடினே  றூசியென்ற  காந்தம்  நீலம்
    பண்பான  லூமைகையில்  மஞ்சளப்பா
ஆடியே  வேகை  வெத்திலையுங்  கூட
    அடைவான  செங்களழுநீர்  வேரு  மையா
நாடியே  தலைமஞ்சள்  மாவுங்  கூட்டு
    நலமான  கோரோசனை  குங்குமப்பூ
கூடியே  வகைவகைக்கு  விராக  னொன்று
    குழியம்மி  தனிலரைக்க  வகையைக்  கேளே.  

விளக்கவுரை :

இன்னொரு  ஜாலவித்தைப்  பற்றிச்  சொல்லுகிறேன்.  ஊசி  காந்தம்,  நீலம்,  ஊமைகை  மஞ்சள்,  முற்றிய  வெற்றிலை,  செங்களுநீர்  வேர்,  தலைமஞ்சள்  மாவு  இவைகளுடன்  கோரோசனை,  குங்குமப் பூ  ஆகிய  இவைகளி லெல்லாம்  வகைக்கு  ஒரு  விராகன்  எடைவீதம்  எடுத்துச்  சேர்த்து  கல்லத்திலிட்டு  அரைக்கவும்.  அரைப்பதற்க்கு  முன்னர்  மேலும்  சேர்க்க  வேண்டியவற்றையும்  கூறுகிறேன்  கேள்.

130. கேளடா  மாடனென்ற  புறாவின்  ரத்தம்
    கெணிதமாய்  யொன்றறுத்துக்  கடவாரு
சூளடா  சிவந்தபசு  வெண்ணெ  யப்பா
    சுகமாக  விராகனது  பணிரென்  டாகும்
நாளடா  மூன்றுநா  ளரைத்  தெடுத்து
    நாயகனே  சிமிழில்  வைத்து  காளிமுன்னில்
வாளடா  புதைத்தெடுப்பாய்  நாளெட்டாகும்
    வளமான  புனுகுடன்  சவ்வாது  சேரே.    

விளக்கவுரை :

மாடப்  புறாவினை  அறுத்து  அதன்  இரத்தத்தை  அதில்  வார்த்து  சிவப்பு  நிறமுடைய  பசுவின்  வெண்ணெய்  பனிரெண்டு  விராகன்  எடை  சேர்த்து  மூன்று  நாட்கள்  அரைத்து  அதனை  எடுத்து  சிமிழில்  வைத்து  காளி  முன்னால்  புதைத்து  எட்டு  நாட்கள்  கழித்து  எடுத்து  அதில்  புனுகு,  சவ்வாது  சேர்க்கவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 121 - 125 of 211 பாடல்கள்
 


வனமடக்கம்

121. தானேதா  னின்னமொன்று  சொல்லக்  கேளு
    தயவாக  அவையடக்கம்  அங்க  மடக்க
மானேதா  னங்கமேற்  பங்கமடக்க
    மைந்தனே  வழியடக்கச்  சுவாஹா  வென்று
கோனேதான்  தண்ணிமிட்டான்  கிழக்குப்  கப்பா
    கொற்றவனே  யருக்கநாள்  காப்புக்  கட்டி
வானேதான்  பொங்கல்  பலிபூசை  யிட்டு
     வளமான  மந்திர  மாயிரந்தா  னோதே.

விளக்கவுரை :

மற்றொரு  ஜாலவித்தையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  " அவையடக்கம் ... அங்க  அடக்கம் ... வழி  அடக்கம் ... சுவாஹா"  என்று  சொல்லி,  தண்ணீர்  விட்டான்  கிழங்குக்கு  ஆதிவாரத்தில்  காப்பு  கட்டி  பலி  புசை  செய்துவிட்டு  பின்னர்  மந்திரத்தை  ஆயிரம்  தடவைகள்  செபிக்கவும்.

122. ஒதியே  பிடுங்கிமுன்  கருவைப்  பூசி
    ஒகோகோ  காலடியில்  மிதுத்துக்  கொள்ளு
சோதியே  யவனமது  வயதி  றாது
    கறுக்கான  மந்திரத்தை  யோதி  நில்லு
ஆதியே  யவனமது  வெட்டும்  பாரு
    அந்நிறத்திற்  சொல்லாது  அதீத  வித்தை
வாதியே  போகருட  கடாட்சத்தாலே
    வளமாக  புலிப்பாணி  பாடினேனே.

விளக்கவுரை :

செபித்தபின்னர்  அந்த  வேரைப்  பிடுங்கி  வந்து  கருவைப்  பூசி  அந்த  வேரை  காலடியில்  மிதித்துக்  கொண்டு,  வனத்தைப்  பார்த்தபடி  மந்திரத்தை  ஒதவும்.  அச்சமயம்  வன  மடக்கமாகி  வெட்டும்.  இந்த  வித்தை  ஒருபோதும்  பொய்காது.  இது  அருமையான  வித்தையாகும்.  இந்த  வித்தையை  போகருடைய  கடாட்சத்தினால்  புலிப்பாணியாகிய  நான்  உரைத்துள்ளேன்.

ஒண்டி  மூலிகை

123. கட்டப்பா  மூலிகை  யொன்று  சொல்லக்  கேளு
    கணிவாக  ஒண்டியுட  மூலிக்கே  தான்
கிட்டப்பா  அமாவாசைக்  கிராண  காலங்
    கிருபையுள்ள  அருக்க  னாளே  தோன்றில்
நெட்டப்பா  பொங்கல்பலி  பூசைசெய்து
    நேராக  வேரெடுத்துக்  கட்டிக்  கொண்டால்
பட்டப்பா  பார்வை  முதலெது  வானாலும்
    பரத்திலனு  காமலது  அகன்று  போமே.

விளக்கவுரை :
   
ஓரு  மூலிகையின்  சிறப்பைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  ஒண்டி  மூலிகை  என்று  ஒன்று  இருக்கிறது.  அதனைக்  கண்டு  பிடித்து  அமாவாசை  அல்லது  கிராணம்  பிடித்திருக்கும்  சமயம்  அதற்க்கு  காப்பு  கட்டி  பொங்கலிட்டு  பலி  பூசை  செய்து  அதணன்  வேரைக்  கொண்டு  வந்து  கட்டிக்  கொண்டால்  பார்வை  முதல்  எல்லா  குறைகளும்  அகன்றுவிடும்.

மைதடவிப்  பார்த்தல்

124. போமப்பா  ஆமையொன்று  மண்தவளை  யொன்று
    பொங்கமுடன்  கன்னிகோழி  முட்டை  யொன்று
தாமப்பா  புதைத்தெலும்பு  பலந்தான்  ரெண்டு
    தயவான  ஈசலது  பலந்தான்  ரெண்டு
நாமப்பா  நிலவாகை  விதைதா  னப்பா
    நாயகனே  பலமிரண்டு  நிறுத்துப்  போடு
ஆமப்பா  மாக்கொடிதான்  விராகன்  மூண்று
    அடைவாகப்  பூத்தயிலமாக  வாங்கே.

விளக்கவுரை :

மைபோட்டுப்  பார்க்கும்  வித்தையைச்  செய்வதற்கு  - ஆமை  ஒன்று,  தவளை  ஒன்று,  கன்னி  கோழி  அதாவது  இளம்  பெட்டைக்  கோழியின்  முட்டை  ஒன்று  பூதைத்த  பிணத்தின்  எலும்பு  இரன்டு  பலம்,  ஈசல்  இரண்டு  பலம்,  நிலவாகை  விதை  இரண்டு  பலம்,  மாக்கொடி  மூன்று  விராகன்  எடை  இவைகளையெல்லாம்  சேர்த்து  பூத்தயிலமாக  இறக்கிக்  கொள்ளவும்.

125. வாங்கியே  தயிலத்தை  யெடுத்துக்  கொண்டு
    வளமான  குழியம்பி  தன்னிற்  போடு
தாங்கியே  யஞ்சனக்கல்  விராக  னொன்று
    தான்போடு  ஆள்காட்டி  முட்டை  நெய்யிற்
பாங்கியே  கொஞ்சமது  கூட  விட்டுப்
    பரிவாக  ஒருசாமந்  தானரைத்துக்
காங்கியே  சிமிழில்  வைத்து  அனுமாருக்கும்
    கனிவோடு  அஞ்சனிக்கும்  பூசை  செய்யே.

விளக்கவுரை :
   
அந்தத்  தைலத்தை  எடுத்து  கல்லத்திலிட்டு  அதில்  அஞ்சனக்கல்  ஒரு  விராகன்  எடை,  ஆள்காட்டி  முட்டையின்  வெள்ளைக்  கரு  கொஞ்சம்  விட்டு  நன்றாக  ஒரு  சாமம்  நேரம்  அரைத்து  மை  பக்குவத்தில்  எடுத்து  சிமிழில்  வைத்துக்  கொள்ளவும்.  அதனை  வைத்து  அனுமாருக்கும்,  அஞ்சனாதேவிக்கும்  பூசை  செய்யவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 116 - 120 of 211 பாடல்கள்



கொள்ளி ஜாலம்

116. செய்யவே  யின்னமொரு  வித்தை  கேளு
    சொன்ன  கொள்ளி  வாயினுட  ஜாலமப்பா
பையவே  சிவ  ...  வசி ... என்று  லட்சம்
    பாங்காகத்தான்  செபித்து  பூஜை  செய்து
உய்யவே  அக்கினியைத்  துணியிற்  சுற்றி
    உத்தமனே  தகட்டி  லட்சத்தைக்  கீறிக்
கையவே  யைங்காய  மைங்கோலந்  தான்
    கனிவாகச்  சுடலையுட  கருவும்  பூசே.

விளக்கவுரை :

இன்னொரு  ஜால  வித்தையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  இது  கொள்ளிவாய்  ஜாலமாகும்.  " சிவ ... வசி ... "  என்று  இலட்சம்  தடவை  உச்சரித்து  பூஜை  செய்து  நெருப்பை  துணியில்,  தகட்டில்  அட்சரத்தை  எழுதி  ஐங்கோல  மையைத்  தடவி,  சுடுகாட்டு  கருவையும்  அதன்மீது  பூசவும்.

117. பூசியே  யெதிரியுட  பேரை  நாட்டிப்
    பொங்கமுடன்  பூசித்து  கொள்ளி  வாய்க்கு
ஆசியே  பந்தெடுத்து  தகட்டில்  வைத்தே
    யப்பனே  இருதலைக்  கொள்ளிதானும்
வாசியே  சத்துருவின்  மனைகள்  தோறும்
    வைத்துநீ  கொளுத்தென்று  தியானமோது
காசியே  கொளுத்துமடா  திரியும்  பந்தும்
    கடிதாகத்  கொளுத்திவிடுங்  கண்டு  பாரே.

விளக்கவுரை :

அதன்மீது  பூசிவிட்டு  எதிரியின்  பெயரை  அதன்மேல்  எழுதி  பூசித்துவிட்டு  கொள்ளிவாய்க்குப்  பந்தெடுத்து  தகட்டின்  மேல்  வைக்கவும்.  " இருதலைக்  கொள்ளியே,  பகைவரின்  வீட்டை  கொளுத்து"  என்று  தியானம்  செய்து  தகட்டின்  மேல்  உள்ள  பந்தைக்  கொளுத்தினால்  உடனே  எதிரியின்  வீடும்  எரிவதைக்  காணலாம்.

மலக்குட்டி  சாத்தான்  தியானம்

118. பாரடா  மலக்குட்டி  தியானங்  கேளு
    பாங்கான  ஒம் ...  இரீம்  ...  வா  ...  வா ...  வென்று
கூறடா  மலக்குட்டிச்  சாத்தா  னென்று
    குணமாகத்  தான்வைத்து  பூசை  கொண்டு
வீரடா  நான்  சொல்லும்  வேலை  கேட்டு
    வீணாக  மலமதனை  வாரி  நீயும்
சேரடா  நானினைத்த  விடத்திற்  போடு
    செப்பியது  ராசபலி  பெலக்கச்  செய்யே.

விளக்கவுரை :

மலக்குட்டி  ஜாலம்  செய்ய  அதற்கான  தியான  முறையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  மலக்குட்டி  என்னும்  குட்டி  சாத்தானை  நினைத்து,  " ஒம் ... இரீம் ... வா ... வா ... மலக்குட்டி  சாத்தானே ... "  என்று  சொல்லி  பூசை  செய்து  நான்  சொல்லும்  வேலையைக்  கேட்டு,  மலங்களையெல்லாம்  வாரி  நான்  நினைத்த  இடங்களிளெல்லாம் போடு"  என்று  சொல்லி  ராஜ  பலி  பூசை  செய்யலாம்.

மலக்குட்டி  ஜாலம்

119. செய்யவே  மந்திரத்தைத்  தகட்டிற்  கீறிச்
    செம்மையா  யைங்காய  மைங்கோலஞ்  சேர்த்து
வையகத்திற்  சுடலையுட  கருவுங்  கூட்டி
    வளமாக  மத்தித்துத்  தகட்டிற்  பூசிப்
பையவே  யெதிரியின்பேர்  தகட்டில்  நாட்டி
    பாங்காக  மந்திரத்தை  லட்சமோது
ஐயமின்றி  பூசை  பலி  பெலக்கச்  செய்து
    அப்பனே  மலமெடுத்துத்  தகட்டில்  வையே.

விளக்கவுரை :

முன்னர்  கூறியுள்ள  மந்திரத்தை  தகட்டில்  கீறி  எழுதி  ஐங்கோலல  மையைச்  சேர்த்து  சுடுகாட்டு  கருவுஞ்  சேர்த்துக்  குழைத்து  அந்த  தகட்டில்  பூசி  எதிரியின்  பெயரை  அந்த  தகட்டில்  எழுதி  மந்திரத்தை  இலட்சம்  தடவைகள்  உச்சரித்து  பூசை  பலி  ஆகியவற்றைச்  சிறப்பாகச்  செய்து  மலத்தை  எடுத்து  அந்தத்  தகட்டின்  மீது  வைத்திடவும்.

120. வைக்கயிலே  மலமிந்தா  மலக்குட்டி  யென்று
    வைத்தல்லோ  மந்திரத்தைத்  தியானஞ்  செய்நீ
வலக்கையிலே  மலமதனை  வாரிக்  கொண்டு
    வகையாக  நீநினைத்த  விடங்கள்  தோறுஞ்
சொக்கயிலே  தகடெடுத்துக்  கழுவிப்  போடு
    சொகுசாகப்  போகுமடா  தீர்க்கமாக
உலக்கையிலே  யிதுவல்லவோ  வுலகபேதம்
    உத்தமனே  மலக்குட்டிச்  செய்கைதானே.

விளக்கவுரை :

பின்னர் , " ஒ ... மலக்குட்டி  மலம்  இந்தா"  என்று  சொல்லி  முன்னர்  கூறிய  மந்திரத்தைச்  சொல்லி  தியானம்  செய்து  விட்டு  வலது  கையினால்  மலத்தை  வாரிக்  கொண்டு  நீ  நினைத்த  இடங்களிளெல்லாம்  போடு"   என்று  கூறினால்  எதிரியின்  இடத்திற்கெல்லாம்  மலத்தைப்  போடும்.  அதன்  பின்னர்  அந்த  தகடை  யெடுத்துக்  கழுவிப்  போட்டு  விடு.  இது  மலக்  குட்டியின்  செயலாகும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 111 - 115 of 211 பாடல்கள்

111.  போடப்பர  வெதிரியின்பே  ரதன்கீழ்  நாட்டிப்
பொங்கமுட  னாகாச  மாடனோது
    கூடப்பா  லட்சமுரு  செபித்துப்  போடு 
குணமான  மந்திரந்தான்   சொல்லக்  கேளு
    நடப்பா  ஓம் ...  நமோ ...  பகவதே
நலமாக  ஓம் ...  பாடு ...  சுவாஹா  வென்று
    ஆமப்பா  பூசைபலி  பலக்கச்  செய்து
அடைவாக  மந்திரந்தான்  ஓதக்  கேனே.

விளக்கவுரை :

தீயில்  எழுதிப்  போடும்போது  அந்த  எதிரியின்  பெயரை  அதன்  கீழே  எழுதிப்  போடவும்.  பின்னர்  ஆகாச  மாடனை  நினைத்து  இலட்சம்  தடவைகள்  செபிக்க  வேண்டும்.  செபிக்கவேண்டிய  மந்திரத்தை  கூறுகிறேன்  கேட்பாயாக.  "ஓம்... .  நமோ  ...  பகவதே  ...  ஓம்  ...  பாடு  ...  சுவாஹா ... "  என்று  ஓத  வேண்டும்.  அதற்க்கு  முன்னர்  காரியம்  பலிக்க  பூசை  செய்து,  பலி  கொடுத்து  மந்திரத்தை  ஓதவேண்டும்.
 
112. கேளடா  காரியத்  தகட்டி  லப்பா
கெணிதமாய்  மந்திரத்தை  எழுதிப்  போடு
         சூளடா  வெதிரியுட  பேரை  நாட்டுஞ்
    சுகமான  வைங்காயங்  கோலஞ்  சேர்த்து
          ஆளடா  சுடலையுட  கருவுங்  கூட்டி
    அப்பனே  மத்தித்துத்  தகட்டிற்  பூசி
         வாளடா  பூசைபலி  பலக்கச்  செய்து
    வளமாக  மாடனைத்தான்  தியான  மோதே.

விளக்கவுரை :

 பின்னர்  காரியத்  தகட்டில்  இந்த  மந்திரத்தை  எழுதி  அதன்  கீழே  எதிரியின்  பெயரையும்  எழுதி  ஐங்கோலஞ்  சேர்த்து  அத்துடன்  சுடலைக்  கருவையும்  கூட்டி  இவற்றையெல்லாம்  குழைத்து  காரீயத்  தகட்டில்  பூசி,  பூசை  செய்து  பலியிட்டு  மாடனை  தியானம்  செய்யவும்.

113.  ஓதியே  மாடனைத்தான்  கட்டிக்  கொண்டு
    ஒளிவான  வாகாச  மாடா  நீயும்
          வாதியாக்  கல்லிந்தா  விந்தா  வென்று
    வகையாகச்  சொல்லுயபின்  கல்லுதானும்
          ஆதியாற்  றகட்டின்மேல்  வைத்தா  யானால்
    அப்பனே  கல்லதுவு  மளவிராது
           பாதியே  யொருகோடி  பூதமெல்லாம்
    பார்த்திருக்கத்  தானெறியுங்  கல்லு  தானே.

விளக்கவுரை :

மந்திரத்தை  ஓதி  மாடனை  தன்  வசமாக்கிக்  கொண்டு,  "ஓ ... ஆகாச  மாடா ... நான் கொடுக்கும் கல்லை  வாங்கிக்  கொள்"  என்று  சொல்லி  அந்தக்  கல்லை  அந்த  தகட்டின்மீது  வைத்தாயானால்  கோடி  பூதஙகள்  பார்த்திருக்க  நீ  எறிகின்ற  கல்  மாடனின்  ஆற்றலால்  எதிரியின்  வீட்டில்  போய்  விழும்.

114.  தானேதான்  மண்ணெடுத்துச்  சாலை  கற்கள்
    தயவாக  மாட்டெலும்பு  செங்கல்  மூட்டை
           மானேதான்  நவபாண்ட  மரிசு  யுப்பு
    மணமான  மிளகு  பொடி  தீட்டுச்சீலை
           வானேதான்  குப்பையொடு  கண்டதெல்லாம்
    வாரியே  தானெரிவு  மில்லந்  தன்னில்
            கோனதா  னெதிரிபோ  மிடங்களெல்லாம்
    கொற்றவனே  யவனுடனே  போகும்  பாரே.

விளக்கவுரை :

 அதுமட்டுமல்லாது  மண்,  சாலைக்  கற்கள்,  மாட்டெலும்பு,  செங்கல்,  முட்டை,  நவபாண்டம்,  அரிசி,  உப்பு,  மிளகுப்  பொடி,  தீட்டுச்சீலை,  குப்பை  போன்ற  கண்ட  பொருள்களெல்லாம்  வாரிவாரி  எதிரியின்  வீட்டில்  எறியும்.  எதிரி  போகும்  இடங்களுக்கெல்லாம்  அவைகள்  போகும்.

115.  பாரடா  சத்துருவும்  வணங்கி  வந்தால்
    பண்பான  மாடனைநீ  யழித்துப்  போடு
         வீரடா  மாடாநீ  கல்லைத்  தானும்
    விதமாகத்  தாவென்று  யெடுத்துப்  போடு
          தீரடா  சாணமிட்டு  மெழுகிப்  போடு
    திறமாகச்  சக்கரத்தைக்  கழுவு  வாய்நீ
          கூறடா  ஜலந்தனிலே  விட்டுப்  போடு
    குணமாக  மாடனைத்தான்  பூசை  செய்யே.
 
விளக்கவுரை :
 
 எதிரியானவன்  தங்களிடம்  மன்னிப்புக்  கேட்டு  வணங்கி  வந்தால்  மாடனை  அழித்து  விடு.  எப்படி  யெனில்  நான்  கொடுத்த  கல்லை  திரும்பக்  கொடுத்து  விடு  என்று  கூறி  தகட்டின்  மீது  வைத்தக்  கல்லை  எடுத்துப்  போட்டுவிடு.  அந்த  இடத்தை  பசு  சாணமிட்டு  மெழுகி  விடு.  சக்கரத்தைக்  கழுவி  தண்ணீரில்  போட்டுவிடு.  பின்னர்  மாடனுக்குப்  பூசை செய்.
Powered by Blogger.