போகர் சப்தகாண்டம் 346 - 350 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

346. சித்தியாய் அறுபத்திமூன்று பேரும் தேசமெங்கும் திரிந்திட்டு விண்ணிலேறி
அத்தியே அடுக்காறும் அதனில்புக்கி அதிசயங்களெல்லாம் தானறிந்து பார்த்து
நத்தியாய் நடனத்தின் புதுமைகண்டு நாதாந்தத் திசைநாதம் நாட்டம்பார்த்து
புத்தியாய் இப்பூமிக்குள் மேருவலம்வந்து புகழ்ந்தாரே பிள்ளைகள்தான் புகழ்ந்தேன்காணே

விளக்கவுரை :


347. காணவே பிள்ளைகள்தான் வணக்கம்செய்தார் கையமர்த்தி சமாதிக்குள் செல்லுமென்றேன்
ஊணவே காலாங்கிநாயகர் மூலக்குருவுமே நெஞ்சில்வைத்து மூலநாயர்
தோணவே பாதமெந்தன் சிரசில்வைத்து சிவயோக மார்க்கத்தில் தெளியவென்று
வேணவே அசோகமாமரத்தின்கீழே வேட்டிதனை விரித்துமே விரைந்தேன்பாரே

விளக்கவுரை :

[ads-post]

348. விரைந்துமே நூறாண்டு சிவயோகத்தில் வெளியொளிபாழ்தன்னில் மனம்விரவிப்போச்சு
திறைந்துமே ஆண்பெண்ணாஞ் சிங்கம்ரண்டும் சிலையென்று நம்மையெண்ணிச் சிறக்குநாலில்
புரைந்துமே வெகுநாள்தான் பிள்ளைகளைப் பெற்றுப் பெருக்கங்களாகியே சிங்கக்கூட்டம்
நரைந்துமே நம்மைசுத்தி இருந்துகொண்டு நாட்டமாய் இரைகொண்டு கொடுக்கும்பாரே

விளக்கவுரை :


349. பார்க்கவே வெகுநாள்தான் இருக்கும்போது பதிவாக அதிலொருநாள் நமக்குத்தானும்
ஆர்க்கவே ஆனந்தங்கழிந்துதானும் மருவிபோல் தில்லை சிங்கமடியின்மேலே
தீர்க்கவே சிங்கமது படுத்திருக்கத் தில்லைதான் சிங்கத்தின் வாயில்வீழ
ஆர்க்கவே எழுந்திருந்து விழித்துப்பார்த்து ஆனந்தவாரியினால் ஞானமாச்சே

விளக்கவுரை :


350. ஞானமாய் பந்துகனந் தனையழைத்து நாதாந்த சிவயோகி தன்னைத்தாமும்
கானமாய்க் கல்லென்று பருகிருந்தோம் கடுஞ்சாபம் நமக்குவரப்போகுதென்று
தூனமாய் இடமெல்லாம் சுத்திபண்ணி சுற்றிலுந்தான் பிள்ளைகளைக் காவல்வைத்து
நமனமாய்த் தங்களுக்கு இடந்தான்வேறே அவதரித்துச் சதாநித்தம் போற்றுவாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 341 - 345 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

341. பாயவே உமிநீரும் பானமாகும் பார்க்கவொட்டால் திரிபது கண்ணில்மீரும்
தோயவே தேவரெல்லாம் வணங்கிநிற்பார் செடம்போச்சு கைலாசதேகமாச்சு
ஆயவே அஷ்டமா சித்தியாகும் அதுகடந்த நிற்குணமும் அடுக்கக்காட்டும்
வாயவே கோபத்தால் வார்த்தை சொன்னால் மண்ணோடு கல்முதலாய் நீராய்ப்போமே

விளக்கவுரை :


342. நீரான அக்கினி மண்டலந்தான் சேர்ந்த சுவாதிஷ்டானத்தின் கீழாகவாறான மூலமுக்கோணத்தின்
மருவியதோர் நாலிதழ்மே அமர்ந்து நிற்கும் தேறானவானமது சிவப்புமாகும்
தெரிந்துகொண்டு வாசியினால் உன்னிபாடும் காறான களிம்பற்று சடமுந்தானும்
கனமில்லா வண்டதுபோல் தேகமாகும் மூறானமும்மலமும் களிம்புநீங்கும் மீளாத்திய அக்கினி மண்டலமுமாமே

விளக்கவுரை :

[ads-post]

343. ஆமென்ற மாலிடை விஷ்ணுமேலே அதிதமாம் ருத்திரனின் பதிக்குக்கீழே
பாமென்ற பன்னிருவர் காவலாக பரிவான பிராணனைதான் காத்துநிற்கும்
பாமென்ற பளிங்கு நிறம்போலிருக்கும் பரிவாக வாசிவைத்து ஊதிப்பாரு
தேமென்ற சீவகளை தேசுபோல சிறந்த வாதித்தன் மண்டலமுந்தானே

விளக்கவுரை :


344. மண்டலமாய் விசுத்தியின் மேலேகாணும் மனோன்மணித்தாய் கொலுவுக்கு கீழேபாரு
குண்டலமாய்ச் சந்திர மண்டலமுந்தானும் குறிப்பாக அமர்ந்திருக்கும் கூடிப்பாரு
மண்டலமாய் அமுர்தகலை பருவிபாரு அதில்சொக்கில் அமுர்தத்தை உண்ணலாகும்
பண்டலாய்ப் பதினாறுகலையும் தானாய் பரிசுத்தி தழைசுத்தி பரவுந்தானே

விளக்கவுரை :


345. பரவியே காலாங்கிநாதர் சொன்னார் பக்குவத்தில் அடியேனும் பார்த்துத்தேறி
புரவியே பொதிகைக்கும் வாய்வுமூலை பெருத்ததோர் அசோகமாமரத்தின்கீழே
அருவியே அறுபத்திமூன்று போக்கும் அஷ்டாங்க யோகத்தை போதித்தேதான்
பரவியே அறுபத்திமூன்று பேர்க்கும் பலித்துதே அஷ்டாங்க சித்திதானே
விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 336 - 340 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

336. தானான நேத்திரமும் நாசிவாய்தான் தனித்தபடி நாக்குதான் கண்டம்நெஞ்சு
ஊனான உதிரமொடு இடுப்புநாபி உற்றதுடை முழங்காலும் பாதங்கேளு
ஆனான யங்குஷ்டம் வயவங்களோடு மன்பான பிராணனைத்தான் தானம்விட்டு
வேனான காலத்தில் விரைந்தனைத்து விடுகிறது துராணமென்ற பிரத்தியாமே

விளக்கவுரை :


337. ஆமென்ற பிரத்தியாந்தரமாங்கானந் தன்னையலைத்து பிரபஞ்சத்தை அணுகொட்டாமல்
வாமென்ற வஸ்துவொடு மார்க்கத்தாடி மகத்தான காமீயத்தை காகம்போலெண்ணி
தாமென்ற சங்கற்ப விகற்பமெல்லாம் தனியான மனதினுள்ளே சங்கியாமல்
வேமென்ற வேதாந்த விசாரத்தாலே விளங்கியதோர் ஞானத்தில் இருத்தல்நன்றே

விளக்கவுரை :

[ads-post]

338. இருத்தினால் கரணமென்ற பிரத்தியாகாரம் எளிதான தனதாண்ய பொன்னுமண்ணும்
தருத்தினால் ஆபரணம் சகலவஸ்தும் தந்ததினால் மனதிலே அபேட்சிக்காமல்
வருத்தினால் வைராக்கிய மனதிலெண்ணி மனம்வெருத்துவிடுதல் மெத்தவுயர்ததிகேளு
பருத்தினால் கருவசங்க பிரத்தியாகார பரிவாக வேதாந்தம் பார்த்துத்தேறே

விளக்கவுரை :


339. தேறவே சாட்சி எங்கும் நாமாய்நின்றோம் திகைத்துநின்ற மாயயெல்லாம் நமக்கும்கீழே
ஊறவே நிரந்தரமும் உரைத்துநின்று உவிந்துநின்ற மார்க்கமெல்லாம் நமக்குள்நின்று
மாறவே மாயமென்ற தெல்லாம்தள்ளி மகத்தான லோகத்தோர் வணங்கிநின்று 
சாரவே சர்வசித்தி யாகும்பாரு சருகாதிபட்சனையும் உதவுவாரே

விளக்கவுரை :


340. உதவுவார் நிர்வாணி ஏவல்கேட்பார் உண்மையாம் யோகசித்தி வாதசித்தி
விதவுவார் வினைகளெல்லாம் கழன்றுபோகும் விரைந்ததோர் சுழிமுனையும் வெளியாய்காணும்
பதவுவார் சடமதுவும்கண்டு போலாம் பொற்பதுமை போலதுதான் இருக்கலாகும்
சிதவுவார் சடந்தானும் சொன்னபடிகேட்கும் சித்தியாய் கூடுவிட்டுப் பாயலாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 331 - 335 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

331. உண்மையெட்டு பருவமுண்டு பிராணாயத்தில் ஒளியாமல் சொல்லுகிறேன் வந்துகேளு
வெண்மை பத்தினின்று முத்திவேர்வையாகும் மிக்கநின்ற தம்பிக்கு ரண்டாம்பட்சம்
திண்மை அற்புததீபமாம் முன்றாம்பட்சம் செடந்தானும் லெகுவாகும் நாலாம்பட்சம்
பெண்மையொத்து பிரகாசிக்கும் அஞ்சாம்பட்சம் பேரானகுண்டலிமேலாறிலாமே   

விளக்கவுரை :


332. ஆறவே ஆகாய கெவுனமார்க்கம் அதிகமாம் தூரதிஷ்டி அறியப்பண்ணும்
ஏறவே எட்டினுட பெருமைகேளு ஏற்றமாம் கேசத்தில் திசைநாதங்கள்  
நாறவே நல்வினையும் தீவினையும் நீங்கும் நயந்தபின்பு நாடியுத்தி தானுமாகும்
ஊறவே காமப்பாலுடம்போடே கலக்கும் உவந்துமே பிராணயாமம் உரைத்துப்பாரே

விளக்கவுரை :

[ads-post]

333. உரைத்துமே சொல்லுகிறேன் பிரிதியாகாரம் உண்மையாய் வாசினையின் வழியிற்சென்று
மிரைத்துமே கடந்துவிக்கும் துரியந்தானும் மிகையாத மவுனத்தை மெல்ல முயற்சியாக்கி
விரைத்துமே திரிபுரத்தை திரியவொட்டாமல் வெட்டியத்தை மறிக்கிறதே பிரத்தியாகாரம்
கிரைத்துமே இதற்குள்ளே ஆறுவிதமுண்டு எடுத்துமே சொல்லுகிறேன் இயல்பாய்க்கேளே

விளக்கவுரை :


334. இயல்பான சரீரமென்ற பிரத்தியாகாரம் எய்துவது ரண்டுவிதம் நன்றாய்க்கேளு
நயல்பான பிரபஞ்சத்தில் மனம்போகாமல் நலமாகச் சமாதியிலே இருத்தவொன்று
கயலாக காடியத்தில் கலந்தபின்பு கலந்துபோம் இளமையெல்லாம் அழைப்பதொன்று
ஒயிலான ஒரயபொருளைநாடி நின்றால் உத்தமனே பிரத்தியாகாரமாச்சே
விளக்கவுரை :


335. ஆச்சென்ற இந்திரிய பிரத்தியாகாரம் ஆண்மையுற்ற தாதுவெனும் தனத்தரோகம்
போச்சென்று போகாமல் சமாதியில் வைத்து புத்தியொத்து பூட்டுகிறது ஒன்றுகாணும்
நீச்சென்ற பிராணனால் பிரத்தியாகாரம் நேர்மையொத்து நாடிசுத்தியானபின்பு
ஊச்சென்ற விச்சிமி கலாடத்தோடு உறுதியுற்ற வாக்கினையும் சோத்திரந்தானாமே

விளக்கவுரை :


Powered by Blogger.