341. பாயவே உமிநீரும் பானமாகும்
பார்க்கவொட்டால் திரிபது கண்ணில்மீரும்
தோயவே தேவரெல்லாம்
வணங்கிநிற்பார் செடம்போச்சு கைலாசதேகமாச்சு
ஆயவே அஷ்டமா சித்தியாகும்
அதுகடந்த நிற்குணமும் அடுக்கக்காட்டும்
வாயவே கோபத்தால் வார்த்தை
சொன்னால் மண்ணோடு கல்முதலாய் நீராய்ப்போமே
விளக்கவுரை :
342. நீரான அக்கினி மண்டலந்தான்
சேர்ந்த சுவாதிஷ்டானத்தின் கீழாகவாறான மூலமுக்கோணத்தின்
மருவியதோர் நாலிதழ்மே
அமர்ந்து நிற்கும் தேறானவானமது சிவப்புமாகும்
தெரிந்துகொண்டு வாசியினால்
உன்னிபாடும் காறான களிம்பற்று சடமுந்தானும்
கனமில்லா வண்டதுபோல் தேகமாகும்
மூறானமும்மலமும் களிம்புநீங்கும் மீளாத்திய அக்கினி மண்டலமுமாமே
விளக்கவுரை :
[ads-post]
343. ஆமென்ற மாலிடை விஷ்ணுமேலே
அதிதமாம் ருத்திரனின் பதிக்குக்கீழே
பாமென்ற பன்னிருவர் காவலாக
பரிவான பிராணனைதான் காத்துநிற்கும்
பாமென்ற பளிங்கு
நிறம்போலிருக்கும் பரிவாக வாசிவைத்து ஊதிப்பாரு
தேமென்ற சீவகளை தேசுபோல
சிறந்த வாதித்தன் மண்டலமுந்தானே
விளக்கவுரை :
344. மண்டலமாய் விசுத்தியின்
மேலேகாணும் மனோன்மணித்தாய் கொலுவுக்கு கீழேபாரு
குண்டலமாய்ச் சந்திர
மண்டலமுந்தானும் குறிப்பாக அமர்ந்திருக்கும் கூடிப்பாரு
மண்டலமாய் அமுர்தகலை
பருவிபாரு அதில்சொக்கில் அமுர்தத்தை உண்ணலாகும்
பண்டலாய்ப் பதினாறுகலையும்
தானாய் பரிசுத்தி தழைசுத்தி பரவுந்தானே
விளக்கவுரை :
345. பரவியே காலாங்கிநாதர்
சொன்னார் பக்குவத்தில் அடியேனும் பார்த்துத்தேறி
புரவியே பொதிகைக்கும்
வாய்வுமூலை பெருத்ததோர் அசோகமாமரத்தின்கீழே
அருவியே அறுபத்திமூன்று
போக்கும் அஷ்டாங்க யோகத்தை போதித்தேதான்
பரவியே அறுபத்திமூன்று
பேர்க்கும் பலித்துதே அஷ்டாங்க சித்திதானே
விளக்கவுரை :