போகர் சப்தகாண்டம் 531 - 535 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

531. ஆமிந்தப் பாஷாணம் பலம்தான்வாங்கி அயச்சட்டிக்குள்வைத்து அப்பால்கேளு
சாமிந்தச் சதுரக்கள்ளி பால்தான்சேரை சமர்த்துடனே யெலிபாலம் பலந்தான்சேரை
வேமிந்த ரண்டும் ஒன்றாய்க் கலக்கிவைத்து விரவியதோர் கருநாபிபலம் பொடித்துப்போட்டு
ஊமிந்த மூன்றுநாள் கலக்கிவைத்து உற்பனமாம் தண்ணீரால் சுருக்குபோடே

விளக்கவுரை :


532. சுருக்கிடவே ரசிதமென்ற பாஷாணந்தான் துடியான மெழுகாகும் சுரண்டிவாங்கி
சுருக்கிட்ட வெள்ளியைத் தீர்ந்தாயானால் நலமான நீர்வற்றி ரசிதமாகும்
முழுக்கிட்ட மெழுகாலே சூதங்கட்டும் முயற்சியாம் துரிசியது குருவுமாகும்
குருக்கிட்ட வாதமொன்று பார்ப்போமென்று குலாமான வாதியல்ல குருடனாமே

விளக்கவுரை :

[ads-post]

533. குருடனென்றால் புத்தியண்டு பயபக்தியண்டு குரங்கான வாதியென்றால் இலைதழையைத்தேடி
குருடனைப்போல் ஒன்றோடே ஒன்றைச்சேர்த்து முயற்சியாய் உரைத்தங்கே புடத்தைப்போடு
திருடனைப்போல் விழித்தங்கே யெடுத்துப்பார்த்து சீயென்று எறிந்துவிட்டு பின்னொன்றைப் பார்ப்பான்
கெருடனைப்போல் ஞானமுற்ற வாதியென்றால் கேள்வியாய்ச் சுடுகாமல் குருதேடுவானே

விளக்கவுரை :


534. குருத்தேடியவர்கள் சொன்னமொழிகேட்டு குறையாதே சாஸ்திரத்தைத் தேடிச்சேர்த்து
கருத்தேறிக் கைம்முறைகள் கண்டுதேறிக் கலங்காதே யோகத்தை நின்றுதேறி
உருத்தேடி உட்கருவில் கருவையறிந்து உடலறிந்த உயிர்நிற்கும் தானந்தேடி
அருள்தேடி ஆத்தாளை அறிந்துதேடி அவள்சொல்லக் கேட்டறிந்து வாதம்பாரே

விளக்கவுரை :


535. பாரப்பா துரிசியென்ற சுன்னம்தானும் பதறாமல் விராகணிடை எடுத்துக்கொண்டு
சேரப்பா எருக்கனுட பால்ரண்டுசேரில் நினைவாக அதிலிட்டுச் சாமம்வைக்க
சேரப்பா கசடற்றி ஜலமாய்நிற்கும் சிறப்பான கெவுரியென்ற பாஷானந்தான்
வாரப்பா அயச்சட்டிக்குள்ளே வைத்து மறவாமல் நாற்சாமம் சுருக்குபோடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 526 - 530 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

526. கண்டுபார் விராகனிடை துரிசுசுன்னம் கனமான சதுரக்கள்ளி பாலில்போட்டு
விண்டுபார் சாமம்தான் மூடிவைக்க விடுபட்ட சுத்தஜலம் போலேயாகும்
கொண்டுபார் வெள்ளையென்ற பாஷானந்தான் கொடிதான அயச்சட்டிக்குள்ளே வைத்து
மண்டுபார் நாற்சாமம் சுருக்குபோட மகத்தான வெள்ளையது மெழுகுமாமே

விளக்கவுரை :


527. மெழுகெடுத்து வங்கத்தினிடைதானீய மெதுவான வங்கமது நொறுங்கும்பாரு
அழுகெடுத்து வங்கத்தை வெள்ளியிலே தாக்க அப்பனே ரசிதமது பொடியேயாகும்
தழுகெடுத்து சூதத்தை சமனாய்ச் சேர்த்து தாக்கியரைபாறென்ற தண்ணீர்விட்டு
அழுகெடுத்து நாற்சாமம் அரைத்தபின்பு நலமாக வழித்தெடுத்து அயவகலில்வையே

விளக்கவுரை :

[ads-post]

528. வைத்துமே அயவகலால் சீலைமண்செய்து வாகாகப் பத்தெருவில் புடத்தைப்போடு
தைத்துமே வெந்ததும் குருவாய்நிற்கும் சம்சயங்களெண்ணாமல் வங்கநூற்றில்
நைந்துமே அரிசெடைதான் குருமுடித்தாயானால் நலமான மாற்றென்ன பதினைந்தாகும்
வெய்த்துமே செய்யு அயந்தன்னிலீய விடுபட்ட வெள்ளீயம் ஆகும்பாரே

விளக்கவுரை :


529. பாரப்பா ரசிதமென்ற பாஷாணம்வைக்க பண்பாகசொல்லுகிறேன் மாணாக்காளே
நேரப்பா சங்கினுட சுன்னந்தானும் நிறுத்தல்லோ பலம்பத்து கல்வத்திலிட்டு
சேரப்பா சீனமென்ற பொடிதான் பத்து சிறப்பான கல்லுப்பு பொடிதான்பத்து
வேரப்பா வெள்ளையென்ற பாஷானம்பத்து மேவியதோர் சாரமது பலமும்ரண்டே

விளக்கவுரை :


530. ரெண்டோடே சூதமது பலமும்பத்து நேர்ப்பான திராவகத்தில் எட்டுநாள் ஆட்டி
தண்டோடெ ரவிதனிலே உலரப்போட்டுச் சாங்கமாய் பொடிபண்ணி மேருக்கேற்றி
வெண்டோடே வானுகையின் பாலேவைத்து விரவியே கமலம்போல் தீயைப்போடு
பண்டோடே பனிரண்டு சாமமானால் பக்குவமாய் பலகைபோல் பதங்கமாமே   

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 521 - 525 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

521. சாய்த்திடவே யொருதந்தான பாசத்தையீய்ந்து சாதகமாம் சகடென்ற குளிகையாச்சு
வாய்திடவே ரண்டுதரம் தீர்ந்தாயானால் மாசற்ற போகியென்ற குளிகையாச்சு
மாய்த்திடவே மூன்றுநாள் தீர்ந்தாயானால் மகத்தான யோகியென்ற குளிகையாச்சு
ஆய்ந்திடவே ஐந்துதரம் தீர்ந்தாயானால் அதிசயமாம் குளிகையென்று அறிந்திடாயே

விளக்கவுரை :


522. அறிந்திடவே ஒருதரம் தீர்ந்தாயானால் அப்பனே மோகினியென்ற குளிகையாச்சு
செறிந்திடவே இருநாலும் தீர்ந்தாயானால் ஜெகமறிய அஷ்டமா சித்தியாச்சு  
பிறிந்திடவே பதினொன்றே தரம் தீர்ந்தாயானால் பேரான காமதேவர் குளிகையாச்சு
கறிந்திடவே பதின்மூன்றுதரம் தீர்ந்தாயானால் கமலினியாம் குளிகையென்ற நாமமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

523. ஆச்சப்பா பதினைந்து தரமுந்தீர்ந்தாயானால் அப்பனே சத்தான குளிகையாச்சு
போச்சப்பா பதினேழுதரமும் தீர்ந்தால் பேரான சுரூபமென்ற குளிகையாச்சு
வாச்சப்பா குளிகைதனை வாயில்வைத்து வடகடலும் தென்கடலும் மருவலாகும்
தோச்சப்பா அண்டத்தில் மரிற்புக்கிச் சுரூபமென சிலம்பொலியில் மேவலாமே

விளக்கவுரை :


524. மேவவே துரிசியென்ற குருவைத்தொட்டு விளம்புகிறேன் தாசான பூவைவாங்கிப்
பாவவே துரிசியிட்டுப் பிழிந்துகொண்டு பருவான அயச்சட்டிக்குள்ளேவார்த்து
தாவவே நெடுங்கம்பி லிங்கமொன்று தனைப்பொடித்து அயச்சட்டிக்கள்ளேவைத்து
காவவே வெடியுப்பைக் காசெடையைவைத்துக் கனமான அடுப்பேற்றி தீயைமூட்டே

விளக்கவுரை :


525. மூட்டவே வெந்துநன்றாய் மெழுகுமாகும் முனியவே வழித்தெடுத்து பீங்கானில்வைத்து
நாட்டவே நவலோகம் நூற்றுக்கொன்று நலமான மாற்றென்ன பத்தரையே காணும்
ஆட்டவே தினங்குன்றியுள்ளேகொள்ள அருணனைப்போல் தேகமுமாகும் கண்டுகொள்ளு
பூட்டவே நரையெல்லாம் மாறிப்போகும் பொற்சடையோன் தேகமுமாம் கண்டுபாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 516 - 520 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

516. பார்ப்பதுபோல் துரிசியொரு பலத்தைவாங்கி பரிவான சேரையென்ற வீரந்தன்னை
சேர்ப்பதுதான் முக்காயெடையே தூக்கிச் ஜெயமான வாலநீரால் மத்தித்தப்பா
கார்ப்பதுதான் துரிசிமேல் பூசபூச கனமான ரவிதனிலே போடுபோடு
தோர்ப்பதுதான் பத்துநாள் போட்டாயானால் சகமான துரிசியது நீறுமாமே

விளக்கவுரை :


517. ஆமேதான் சாறுவாரத் தழைகளெல்லாம் அதட்டிமெல்லக் குருபோட்டுப் பிழியதண்ணீர்
போமேதான் பாலெல்லாமுறித்து நீராய்போம் ஈடில்லை சுத்தஜலம் போலேநிற்கும்
வேமேதான் சரக்குகளில் சுருக்குபோட விடுபட்ட மெழுகாகும் வேதையாகும்
ஓமேதான் நவலோகம் ஈர்ந்தாயானால் ஒருகோடிக்கு ஓடுமிது உயர்த்திதானே

விளக்கவுரை :

[ads-post]

518. உயர்த்தியென்ற விராலி இலைக்குள்ளேகேளு உரலிலிட்டு இடித்தபின்பு துரிசுச்சுன்னம்
புயர்த்தியென்ற விராகனிடை அதிலேபோட்டு பிசைந்துவைத்து கிட்டிசுட்டிப் பிழியதண்ணீர்
குயர்த்தியென்ற சூதமது அயச்சட்டியிட்டுக் கொடுஞ்சுறுக்காய்ப்போட்டுவர ஒருசாமம்தான்
கயர்த்தியென்ற இட்டிலிபோலாகும்பாரு நாமறியோம் இதுபோல போகம்தானே

விளக்கவுரை :


519. போக்கான சூதத்தில் தங்கமிட்டுப் பேரானகெந்தமோ சரியாய்கூட்டித்
தாக்கான தாளகமும் சிலையும்வீரம் தயங்காத மல்லிகையின் சாற்றால் ஆட்டி
நோக்கான குப்பியிலே பொடிபண்ணிப்போட்டு உகந்துநின்ற வானுகையில் செந்தூரித்து
வாக்கான ஆயிரத்துக்கொன்றேயீய மாற்றென்ன பனிரண்டு காணுங்காணே

விளக்கவுரை :


520. காணாத உபசரங்கள் நூற்றிரண்டுபத்தும் கனமான பாஷாணம் அறுபத்துநாலும்
தோணந்த லவணமுதல் இருபத்தஞ்சும் சொல்முறையாம் நவலோகம் நவரத்தினங்கள்
ஆணந்த இதுவெல்லாம் சத்தாய்வாங்கி அம்மம்மா சூதத்தில் ஒவ்வொன்றாய் யீய்ந்து
பூணந்த குடோரிவிட்டுச் சுக்கப்பண்ணி புகழான சாரணையில் சாய்த்திடாயே

விளக்கவுரை :


Powered by Blogger.