521. சாய்த்திடவே யொருதந்தான
பாசத்தையீய்ந்து சாதகமாம் சகடென்ற குளிகையாச்சு
வாய்திடவே ரண்டுதரம்
தீர்ந்தாயானால் மாசற்ற போகியென்ற குளிகையாச்சு
மாய்த்திடவே மூன்றுநாள்
தீர்ந்தாயானால் மகத்தான யோகியென்ற குளிகையாச்சு
ஆய்ந்திடவே ஐந்துதரம்
தீர்ந்தாயானால் அதிசயமாம் குளிகையென்று அறிந்திடாயே
விளக்கவுரை :
522. அறிந்திடவே ஒருதரம் தீர்ந்தாயானால்
அப்பனே மோகினியென்ற குளிகையாச்சு
செறிந்திடவே இருநாலும்
தீர்ந்தாயானால் ஜெகமறிய அஷ்டமா சித்தியாச்சு
பிறிந்திடவே பதினொன்றே தரம்
தீர்ந்தாயானால் பேரான காமதேவர் குளிகையாச்சு
கறிந்திடவே பதின்மூன்றுதரம்
தீர்ந்தாயானால் கமலினியாம் குளிகையென்ற நாமமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
523. ஆச்சப்பா பதினைந்து
தரமுந்தீர்ந்தாயானால் அப்பனே சத்தான குளிகையாச்சு
போச்சப்பா பதினேழுதரமும்
தீர்ந்தால் பேரான சுரூபமென்ற குளிகையாச்சு
வாச்சப்பா குளிகைதனை
வாயில்வைத்து வடகடலும் தென்கடலும் மருவலாகும்
தோச்சப்பா அண்டத்தில்
மரிற்புக்கிச் சுரூபமென சிலம்பொலியில் மேவலாமே
விளக்கவுரை :
524. மேவவே துரிசியென்ற குருவைத்தொட்டு விளம்புகிறேன் தாசான பூவைவாங்கிப்
பாவவே துரிசியிட்டுப்
பிழிந்துகொண்டு பருவான அயச்சட்டிக்குள்ளேவார்த்து
தாவவே நெடுங்கம்பி
லிங்கமொன்று தனைப்பொடித்து அயச்சட்டிக்கள்ளேவைத்து
காவவே வெடியுப்பைக்
காசெடையைவைத்துக் கனமான அடுப்பேற்றி தீயைமூட்டே
விளக்கவுரை :
525. மூட்டவே வெந்துநன்றாய்
மெழுகுமாகும் முனியவே வழித்தெடுத்து பீங்கானில்வைத்து
நாட்டவே நவலோகம்
நூற்றுக்கொன்று நலமான மாற்றென்ன பத்தரையே காணும்
ஆட்டவே
தினங்குன்றியுள்ளேகொள்ள அருணனைப்போல் தேகமுமாகும் கண்டுகொள்ளு
பூட்டவே நரையெல்லாம்
மாறிப்போகும் பொற்சடையோன் தேகமுமாம் கண்டுபாரே
விளக்கவுரை :