526. கண்டுபார் விராகனிடை
துரிசுசுன்னம் கனமான சதுரக்கள்ளி பாலில்போட்டு
விண்டுபார் சாமம்தான்
மூடிவைக்க விடுபட்ட சுத்தஜலம் போலேயாகும்
கொண்டுபார் வெள்ளையென்ற
பாஷானந்தான் கொடிதான அயச்சட்டிக்குள்ளே வைத்து
மண்டுபார் நாற்சாமம்
சுருக்குபோட மகத்தான வெள்ளையது மெழுகுமாமே
விளக்கவுரை :
527. மெழுகெடுத்து
வங்கத்தினிடைதானீய மெதுவான வங்கமது நொறுங்கும்பாரு
அழுகெடுத்து வங்கத்தை
வெள்ளியிலே தாக்க அப்பனே ரசிதமது பொடியேயாகும்
தழுகெடுத்து சூதத்தை
சமனாய்ச் சேர்த்து தாக்கியரைபாறென்ற தண்ணீர்விட்டு
அழுகெடுத்து நாற்சாமம்
அரைத்தபின்பு நலமாக வழித்தெடுத்து அயவகலில்வையே
விளக்கவுரை :
[ads-post]
528. வைத்துமே அயவகலால்
சீலைமண்செய்து வாகாகப் பத்தெருவில் புடத்தைப்போடு
தைத்துமே வெந்ததும்
குருவாய்நிற்கும் சம்சயங்களெண்ணாமல் வங்கநூற்றில்
நைந்துமே அரிசெடைதான்
குருமுடித்தாயானால் நலமான மாற்றென்ன பதினைந்தாகும்
வெய்த்துமே செய்யு
அயந்தன்னிலீய விடுபட்ட வெள்ளீயம் ஆகும்பாரே
விளக்கவுரை :
529. பாரப்பா ரசிதமென்ற
பாஷாணம்வைக்க பண்பாகசொல்லுகிறேன் மாணாக்காளே
நேரப்பா சங்கினுட
சுன்னந்தானும் நிறுத்தல்லோ பலம்பத்து கல்வத்திலிட்டு
சேரப்பா சீனமென்ற பொடிதான்
பத்து சிறப்பான கல்லுப்பு பொடிதான்பத்து
வேரப்பா வெள்ளையென்ற
பாஷானம்பத்து மேவியதோர் சாரமது பலமும்ரண்டே
விளக்கவுரை :
530. ரெண்டோடே சூதமது பலமும்பத்து
நேர்ப்பான திராவகத்தில் எட்டுநாள் ஆட்டி
தண்டோடெ ரவிதனிலே
உலரப்போட்டுச் சாங்கமாய் பொடிபண்ணி மேருக்கேற்றி
வெண்டோடே வானுகையின்
பாலேவைத்து விரவியே கமலம்போல் தீயைப்போடு
பண்டோடே பனிரண்டு சாமமானால்
பக்குவமாய் பலகைபோல் பதங்கமாமே
விளக்கவுரை :