போகர் சப்தகாண்டம் 846 - 850 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

846. பண்ணியபின் சதமுகமாம் குருவுமாச்சு பணவிடைதான் பத்துமெடுத்தொன்றாய்க்கூட்டி
ஒண்ணிப்பின் கல்வத்தில் முன்னீராலாட்டி உத்தமனே செப்புக்குளெடுத்து
நண்ணியபின் மேல்மூடிசீலைசெய்து நலமாக வஞ்செருவிற் புடத்தைப்போடு
எண்ணியபின் ஆறவிட்டு எடுத்துக்கொண்டு இதமான பொற்சிமிளிற் பதனம்பண்ணே

விளக்கவுரை :


847. பண்ணயதோர் குருவெடுத்து விராலிக்கிட்டுப் பரிவாகச் சாறெடுத்து அயச்சட்டிவார்த்து
ஒண்ணியதோர் நல்லகொழுக்கரியிலூதி உத்தமனே காந்தமதிற் காட்டித்தோய்ப்பாய்
விண்ணியதோர் கொழுக்காய்ச்சி தோய்க்கவிண்டுவிண்ணு அகரதரால்ப்பொருமிவிழும்
நண்ணியதோர் சாதெல்லாம் அளற்றத்தோய்ந்து நலமான அகரெல்லாம் வாரிக்கொள்ளே

விளக்கவுரை :

[ads-post]

848. வாரியேயெருங்காட்டாமணக்கி னெண்ணெய் வார்த்தல்லோ வெண்காரஞ் சரியாய்க்கூட்டி
நாரியே குகையிலிட்டு மூன்றுதரமுருக்க நலமான ஈயம்போற் சவளையாகும்
ஏரியே உடைந்ததுபோல் வாதவெள்ளம் இரைக்கவேதுலையாது அயத்தூள்வித்தை
வாரியே பொங்கையிலே சதமுட்கொள்ளு மகத்தான அயமுருக்கில் கொல்லுந்தானே

விளக்கவுரை :


849. னென்ற நாகத்தைப் பதையாமற்கொல்லும் சமுசயங்களெண்ணாதே சகலமுமுட்கொள்ளும்
வானென்ற சூதமது கட்டிப்போகும் மாசற்ற அயனாகமாட்டி ஆட்டு
தேனென்ற சிவகாமி சொன்னமார்க்கம் செப்பரிய நாதர்கள் சொல்லும்வித்தை
பானென்ற செந்தூரங்களங்கு செய்யில் பரிவாகவாயிரத்துக்கோடும்பாரே 

விளக்கவுரை :


850. ஓடுமே அண்டத்தை பணம்போல்போற்று உத்தமனே காசெடைதான் குருவைப்போடு
வாடுமே செந்துருக்க மேலேவைத்து மாசற்ற ரவிதனிலே சாமம்வைக்கத்
தேடுமே மெழுகெல்லாம் மெழுகாய்போகும் சேர்ந்த மூவாயிரத்துக்கொன்றேபோடும்
பாடுமே வீணையைப்போல் மெழுகுகொள்ள பரிவான அண்டரதினாண்மைதானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 841 - 845 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

841. வாங்கும்போ தடுப்பேற்றி யெரிக்கும்போது வளமான நன்டோடு சுன்னம்பண்ணி
தாங்கும்பேரண்டு பலங்கூடப்போட்டு தயங்காதே யடுப்பேற்றி யெரிப்பாயானால்
ஓங்குமப்போ குழம்பான பதத்தைப்பார்த்து உற்றுநின்ற சரக்கையினி சொல்லக்கேளு
தூங்குமப்போ சூதமிரண்டு பலத்தைப்போடு துடியாக கெந்தியுப்பு ரெண்டுபலம்போடே

விளக்கவுரை :


842. போட்டெல்லாம் அடுப்பேற்றி உப்பாய்க்காச்சி பொலிவான பின்பெடுத்து கல்வத்திட்டு
மூட்டெல்லாம் முந்நீரால் அரைத்துக்கட்டி மூன்றுபுடம்போட்டெடுத்து வைத்துக்கொள்வாய்
ஆட்டெல்லாஞ் சூதத்திலாட்டு ஆட்டு அண்டபகிரண்டமுதல் வெந்துநீரும்
காட்டெல்லாம் வாழையுட சருகுசுட்டு காரியமாய்பதக்களந்து பாண்டத்திற்போடே

விளக்கவுரை :

[ads-post]

843. போட்டுமே வாழையுடகிழங்குசாற்றில் புகழாகத்தெளிவிறுத்து அடுப்பில்வைத்து
ஊட்டுமேசுண்ணாம்பு சொல்லக்கேளு உயர்ந்தவாங்கூமச்சி சுண்ணம்பண்ணி
நாட்டுமே பலம்ரண்டு நிறுத்துப்போட்டு நயமான குழம்பாகும் பதத்திற்கேளும்
ஆட்டியே அன்னமென்றபேதியோடு அசையாதலிங்கமது ரண்டுந்தூக்கி
பூட்டியே பொடிபண்ணி குழம்பிற்போட்டு புரட்டியெல்லாம் வாங்கியல்லோ கல்வத்தாட்டே

விளக்கவுரை :


844. ஆட்டியே முன்போல மூன்றுபுடம்போட்டு அயச்சிமிழி லெடுத்துவைத்துப்பதனமாகப்
பூட்டியே தெர்ப்பைசுட்டு சாம்பலாக்கி புகழாக மூன்றுபடி பாண்டத்திற்போட்டு
மூட்டியே கள்ளென்ற காடிதானும் முசியாமல் இருதூணிவிட்டுப்பின்பு
வாட்டியே மூன்றுநாள் கலக்கிவைத்து மறவாதே தெளிவிறுத்தி அடுப்பிற்காய்ச்சே

விளக்கவுரை :


845. காய்ச்சியே குழம்பானபக்குவத்தில் கலந்திடயநீ கெருடபட்சி கன்னம்ரண்டு
பாய்ச்சியே குக்குடவெண்மலமும்ரண்டு பகரறிய கெந்தகமும் பலமும்ரண்டு
தாய்ச்சியே பொடிபண்ணி குழம்பிற்போட்டு சார்பாக அடுப்பெரித்து வுப்புவாங்கு
முயற்சியே முன்போலே வரைத்துக்கட்டி முன்றுபுடம்போட்டெடுத்து பதனம்பண்ணே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 836 - 840 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

836. சாம்பலைத்தான் பதக்கெடுத்து பாண்டத்திட்டு சார்பான பசுவின் சகாசல்த்திலிட்டு
சாம்பலைத்தான்கரைத்துவைத்து மூன்றுநாள்தான்வகையாகதெளிவிறுத்தி நத்தைச்சுன்னம்
சாம்பலைத்தான் ரண்டுபங்கு கூடப்போட்டு கலர்குழம்பும் பக்குவத்தில் வெடியுப்புப்போடு
வேம்பிலைதான் வீரமதுபலமும்ரண்டு விரவிநன்றாய்ப்பொடிபண்ணி லுழம்பில்போடே

விளக்கவுரை :


837. போட்டபின்பு அடுப்பேற்றி எரிக்கவுப்பாம் புகழாகமுன்னீரால் அரைத்துதட்டி
நாட்டபின்பு முன்போல மூன்றுபுடம்போட்டு நலமாக எடுத்துவைத்து செம்புக்குள்ளே
ஆட்டபின்பு வீரனென்ற குருதானாச்சு அப்பப்பா இதன்வேகம் அண்டரண்டமீறும்
நாட்டபின்பு கொடிக்கள்ளி சாம்பலாக நலமாக மனிதனுட வமுரியிலேபோடே

விளக்கவுரை :

[ads-post]

838. போட்டுமே யகட்டிநன்றாய் கலக்கிவைத்த்துப் புகழாக தெளிவிறுத்தி அடுப்பிலேற்றி
வாட்டுமே நாகமாம் வண்டுசுட்டு மருவியதே சுண்ணாம்பாய் ரண்டுபலம்போடு
கேட்டுமே குழம்பான பதத்தில்வாங்கி சிறப்பான வெள்ளையொடு சீனம்ரண்டு
ஆட்டுமே பொடிபண்ணி குழம்பில்போட்டு அடுப்பேற்றி எரித்தந்த வுப்பைவாங்கே

விளக்கவுரை :


839. வாங்கியே ஊமையென்ற சிப்பிதன்னை வகையாகச்சுத்திபண்ணி சுண்ணாம்பாக்கி
தேங்கியே ரண்டுபலம் நிறுத்துப்போட்டு சிறப்பாக வடுப்பேற்றி குழம்பாய்க்காய்ச்சி
ஓங்கியே தாளகமும் வளகிலுப்பு ஒக்கவேபொடிபண்ணி ரண்டுபலம்போட்டு
ஏங்கியே வுப்பாகக்காய்ச்சிக்கொண்டு எடுத்தரைத்துமுன்போலே புடத்தைப்போடே

விளக்கவுரை :


840. போடென்ற வமுரிசுட்டுச் சாம்பலாக்கி புகழாகப்பதங்கலந்து பாண்டத்திற்போடு
நாடென்ற கஙலில்நிற்கும் சிவந்திருந்த சொரியை நலமாக எடுத்துவந்து பாண்டத்துள்ளே
ஊனென்ன வுப்பிடவும் தண்ணீராகும் உத்தமனே இருதூணி நீரைவிட்டு
ஆடென்ற மூன்றுநாள் கழிந்தபின்பு அப்படியே தெளிவிருத்திப் பாண்டத்தில்வாங்கே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 831 - 835 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

831. வாங்கியே அண்டோடு சுண்ணம்பண்ணி வலமாகப் பலம்ரண்டு கூடப்போட்டு
தேங்கியே இந்துவுப்பு பச்சைபூரம் சிறக்கவே ரண்டுபலம் கல்வத்திட்டு
தாங்கியே அரைத்துமைபோல் தெளிவிலிட்டு சார்பாக அடுப்பேற்றி யெரித்துவுப்பாய்ப்
பாங்கியே கல்வத்தில் விட்டுமாட்டிப் பதமாக மூன்றுநாள் ஆட்டிடாயே

விளக்கவுரை :


832. ஆட்டியே மூன்றுபுடந்தீர்ந்தபின்பு அசங்காமல் வெவ்வேறே எடுத்துவைத்து
தேட்டியே பூரமென்றது இதுதானாச்சு ஜெகமெல்லாம் மெச்சுமிந்த குருதானாட்டு
தட்டியே யெருக்குமிதைச் சமூலஞ்சுட்டு தயங்காமல் பதத்தெடுத்துக் குதிரைநீரில்
மட்டியே இருதூணி நீரிற்போட்டு மறவாமல் மூன்றுநாள் கலக்கிவையே

விளக்கவுரை :

[ads-post]

833. கலந்தபின்பு தெளிவிறுத்து பாண்டத்திலிட்டு மறவாமல் சங்குநீர்யிரண்டுபலம்போட்டு
நைந்தபின்பு கடல்நுரையும் சாரம்ரண்டு நலமாக பலம்ரண்டும் கல்வத்திட்டு
கைத்தபின்பு பொடிபண்ணி குழம்பில்போட்டு கலங்காதே வுப்பானபதத்தில்வாங்கி
மொய்த்தபின்பு முன்னீரால் அரைத்துக்கட்டி மூன்றுபுடம்போட்டெடுத்து பதனம்பண்ணே

விளக்கவுரை :


834. பண்ணியபின் சாரமென்ற குருதானாச்சு பகர்சதுரக்கள்ளிதனைச் சுட்டசாம்பல்
கண்ணியதோர் பதக்கெடுத்துப் பாண்டத்திலிட்டு நலமான வெள்ளாட்டு முரிதானும்
கண்ணமதாலி தூணியமுரிவிட்டு கலக்கிவைத்து தெளிவிறுத்தி கிளிஞ்சிற்சுண்ணம்
எண்ணியதாம் ரண்டுபலம் கூடவிட்டு இதமாக அடுப்பேற்றி எரித்திடாயே

விளக்கவுரை :


835. எரித்திடவே குறுகியது குழம்புபோலாம் எளிதான வெண்காரம் துரிசிரண்டு
மரித்திடவே பொடியாக்கி குழப்பிவிட்டு வளமாகக் காய்ச்சியதை வுப்பாய்ப்பண்ணி
தரித்திடவே முன்போல புடத்தைப்போடு தயங்காதே எரித்துவைத்து மாட்டக்கேளு
குரித்திடவே துரிசியென்ற குருதானாச்சு கொடுவேலி சமூலமே சாம்பலாச்சு   

விளக்கவுரை :


Powered by Blogger.