836. சாம்பலைத்தான் பதக்கெடுத்து
பாண்டத்திட்டு சார்பான பசுவின் சகாசல்த்திலிட்டு
சாம்பலைத்தான்கரைத்துவைத்து
மூன்றுநாள்தான்வகையாகதெளிவிறுத்தி நத்தைச்சுன்னம்
சாம்பலைத்தான் ரண்டுபங்கு
கூடப்போட்டு கலர்குழம்பும் பக்குவத்தில் வெடியுப்புப்போடு
வேம்பிலைதான்
வீரமதுபலமும்ரண்டு விரவிநன்றாய்ப்பொடிபண்ணி லுழம்பில்போடே
விளக்கவுரை :
837. போட்டபின்பு அடுப்பேற்றி
எரிக்கவுப்பாம் புகழாகமுன்னீரால் அரைத்துதட்டி
நாட்டபின்பு முன்போல
மூன்றுபுடம்போட்டு நலமாக எடுத்துவைத்து செம்புக்குள்ளே
ஆட்டபின்பு வீரனென்ற
குருதானாச்சு அப்பப்பா இதன்வேகம் அண்டரண்டமீறும்
நாட்டபின்பு கொடிக்கள்ளி
சாம்பலாக நலமாக மனிதனுட வமுரியிலேபோடே
விளக்கவுரை :
[ads-post]
838. போட்டுமே யகட்டிநன்றாய்
கலக்கிவைத்த்துப் புகழாக தெளிவிறுத்தி அடுப்பிலேற்றி
வாட்டுமே நாகமாம்
வண்டுசுட்டு மருவியதே சுண்ணாம்பாய் ரண்டுபலம்போடு
கேட்டுமே குழம்பான
பதத்தில்வாங்கி சிறப்பான வெள்ளையொடு சீனம்ரண்டு
ஆட்டுமே பொடிபண்ணி
குழம்பில்போட்டு அடுப்பேற்றி எரித்தந்த வுப்பைவாங்கே
விளக்கவுரை :
839. வாங்கியே ஊமையென்ற
சிப்பிதன்னை வகையாகச்சுத்திபண்ணி சுண்ணாம்பாக்கி
தேங்கியே ரண்டுபலம்
நிறுத்துப்போட்டு சிறப்பாக வடுப்பேற்றி குழம்பாய்க்காய்ச்சி
ஓங்கியே தாளகமும் வளகிலுப்பு
ஒக்கவேபொடிபண்ணி ரண்டுபலம்போட்டு
ஏங்கியே
வுப்பாகக்காய்ச்சிக்கொண்டு எடுத்தரைத்துமுன்போலே புடத்தைப்போடே
விளக்கவுரை :
840. போடென்ற வமுரிசுட்டுச்
சாம்பலாக்கி புகழாகப்பதங்கலந்து பாண்டத்திற்போடு
நாடென்ற கஙலில்நிற்கும்
சிவந்திருந்த சொரியை நலமாக எடுத்துவந்து பாண்டத்துள்ளே
ஊனென்ன வுப்பிடவும் தண்ணீராகும்
உத்தமனே இருதூணி நீரைவிட்டு
ஆடென்ற மூன்றுநாள்
கழிந்தபின்பு அப்படியே தெளிவிருத்திப் பாண்டத்தில்வாங்கே
விளக்கவுரை :