போகர் சப்தகாண்டம் 931 - 935 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

931. அஞ்சான பூநீறுகாசுஐந்து ஆதியென்ற கெவுரியது காசுஐந்து
பிஞ்சான கெந்தகமும் காசுஐந்து பேசாத சிலையதுவும் காசுஐந்து
மஞ்சான வீரமது காசுமைந்து மாசற்ற லிங்கமுந்தான் காசுமைந்து
துஞ்சான தாளகமுங் காசுமைந்து துடியான வெடியுப்பு காசுமைந்தே

விளக்கவுரை :


932. காசுதானைந்தாகும் சீனமப்பா கலந்திந்த இடையெல்லா மறுபதாச்சு
மாசுதான் சூதமதும் அறுபதாகும் வாகான கல்வத்திலிட்டுக்கொண்டு
ஆசிதானேர்வானத் தயிலத்தாலே ஐந்துநாளரைத்து நன்றாய்வில்லைகட்டி
தூசுதான் நிழலுலர்த்தி அயத்தகடுக்குளழுத்தி துப்புரவாய்க் கிண்ணியைத்தான் பதித்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

933. பதித்திடவே யரைத்துநன்றாய் சீலைசெய்து பாங்கான முன்னிசைத்த மெழுகினாலே
நிதித்திட்டு இலுப்பைநெய்யால் விளக்குவைத்து நேராகவிளக்கெரிப்பாய் மூன்றுநாள்தான்
கொதித்திட்ட ரசமெல்லாம் பதங்கமேறுங் கொள்கியந்த பதங்கத்தைக் கத்திகொண்டுவாங்கி
விதித்தி ட்ட நவலோகம் நூற்றுக்கொன்றி விரைந்ததுவும் பனிரண்டு மாற்றுமாமே

விளக்கவுரை :


934. மாற்றான ரத்தசிங்கி வைப்புகேளு மருவியதில் காயசித்தி லோகசித்தியாகும்
கூற்றானயெமன்போலே சுருக்குமெத்த கொடியவிஷசூதத்தை நிமைக்குமுன்னே கொல்லும்
காற்றான காரீயம்பொடிபலந்தான்பத்து கனகத்தின்பொடிதானும் ரண்டரையேபலந்தான்
னீற்றான நாகத்தின் பொடிபலந்தானைந்து நெல்லிக்காய்க் கெந்தகந்தான் பலம்பத்துபோடே

விளக்கவுரை :


935. பத்துடனே வெடியுப்புப் பலமுமைந்து பாங்கான தாளகமும் பலமும்நாலு
கொத்துடனே குதிரைப்பல் பாஷாணமூன்று கொடிதான சாராயம் விட்டுஆட்டி 
சித்துடனே லோகமெல்லாம் கரையுமட்டுஆட்டி சிறப்பாக ரவியிலிட்டுப் பொடியாய்பண்ணி
மூத்துடனே காசிபென்ற மேருக்கேற்றி மூதண்டவாலுகையில் வைத்திடாயே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 926 - 930 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

926. கிண்டையிலே அடியில் மருந்தில்லாவிட்டால் கெட்டியான பதமென்று தீயையாற்றி
சண்டையிலே ஆறவிட்டு ஒருசாமந்தான் சாதகமாயிருப்பான குறட்டினாலே
மண்டையிலே குப்பியைதான் வெளியேவாங்கி மகத்தான கண்ணீரைத் தெளித்துஆற்றி
பண்டையிலே இரும்பான கத்திகொண்டு பக்குவமாய் மேலோடு பிரம்பாய்வாங்கே

விளக்கவுரை :


927. வாங்கியதோர் தொட்டின்மேற் பொற்றொட்டியாச்சு மருவியே மேலோடிப் பதங்கித்துநின்றால்
ஓங்கியதோர் ரத்தமென்ற பாஷாணநாமம் உற்றஅடி நின்றதுவும் அஞ்சனமுமாச்சு
ஏங்கியதோர் நடுவில்நின்றால் கற்பரியுமாச்சு ஏககுனிமுன் நிற்கில் சரக்கண்டமாச்சு
தாங்கியதோர் இத்தனையும் ஆயிசொல்லச் சாதகமாய்ச் சித்தரெல்லாம் சமைத்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

928. சமைத்திட்ட சரக்குகளில் வேதைகோடி சாதகமா யொவ்வொன்றாய்ப் பார்த்துக்கொண்டு
அமைத்திட்ட நூல்களிலே மறைப்பில்லாமல் அறியாத பசகட்குந் தெரியவென்று
குமைத்திட்ட முத்துபோல் ஒருகயிற்றில் கோர்த்தேன் கொடிகொம்பு கயிற்கொடி மரமொன்றேபோல்
இமைத்திட்ட பிள்ளைகளுக்குகந்து சொன்னேன் ஏழாயிரம் பார்த்தவர்கள் என்போலாமே

விளக்கவுரை :


929. ஆமின்னம் நாகத்தைச்சொல்லக்கேளு ஆச்சரியம்நாகமது பலந்தான்பத்து
ஓமின்னம் நாகத்தைத்தான் கடுகவாங்கி உயர்ந்தமயிர்கொன்றையிலை யரைத்துக்கொண்டு
தாமின்னந்தகடுமேல் பொதிந்து மூடிச்சார்பாகப் புடம்போட்டு எடுத்துக்கொண்டு
காமின்ன மிப்படியே பத்துவிசைபோட்டுக் கார்த்திகையின் கிழங்காலே பத்துவிசைபோடே

விளக்கவுரை :


930. போடப்பா வெருகினுட கிழங்கில்பத்து புளியரனைக் கிழங்குதனில் பத்துவீசைபோடு
நாடப்பா பின்பெடுத்து எண்ணெய்குத்தியுருக்கி நலமாகக் கிண்ணியைபோல் வார்த்துக்கொண்டு
ஊடப்பா நேர்வாளந் தயிலம்வாங்கி யுத்தமனே சாரமது காசுஐந்து
நீடப்பா துரிசியது காசுஐந்து நிலையான கல்லுப்புக் காசுஅஞ்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 921 - 925 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

921. வாங்கியே மேல்கவசந் தள்ளிப்போட்டு வாசியர்முன்குழம்பில் பிசறிக்கொண்டு
தேங்கியே மூன்குகையில் வைத்துப்பூசிச் சிறப்பாக முன்போலப்புடத்தைப்போடு
தாங்கியே இப்படிதான் மூன்றுதரம்போடு தவளம்போல் குருவாகும் செம்புதானும்
ஓங்கியே இக்குருவுக்கென்னவொப்பு உத்தமித்தாயொப்பென்று வுரைசெய்தேனே

விளக்கவுரை :


922. உரைசெய்த குருவுக்கு எடைகெடைதான்சாரம் உத்தமனே பொடிசெய்து கல்வத்திட்டு
நிரைசெய்த முன்னீரால் அரைத்துக்கட்டி நேர்பாகப் புடம்போட்டு பனியில்வைக்க
கரைசெய்த ஜெயநீராம் பூரம்வீரம் கனமாகப் பொடிசெய்து நீரிற்போட்டு
பரைசெய்த ஜெயநீரை வார்த்துக்கொண்டு பாங்கான சூதத்தை அரைத்துருட்டே

விளக்கவுரை :

[ads-post]

923. உருட்டியதைத்தான் வடமாய்க்கோர்த்துக்கொண்டு உத்தமனே ஐந்தெழுத்துமெட்டெழுத்துமோது
மருட்டியதையவர்கையில் காண்பிக்கவேண்டாம் மாஞானமன்மவித்தை யுற்றுப்பாரு
சிருட்டியிதை யொளித்துவிட்டு மூலம்பாரு சிவயோகபிரம்மநிஷ்டை தெளிந்துகண்டு
திருட்டியமாய் மூலமென்ற மௌனம்பாரு தீர்க்கமுடன் சின்மயத்தை அறிந்துபோற்றே

விளக்கவுரை :


924. போற்றவே பொற்றொட்டி வைப்புகேளு புகழாகத் தாளமது மேருபண்ணி
மாற்றவே மண்சீலை பிலக்கச்செய்து மகத்தான சூதமது பலந்தானெட்டு
ஏற்றவே ரெண்டுபலஞ்சுத்திகெந்தி இயல்பான ஓட்டிலே கெந்தகத்தையுருக்கி
தோற்றவே சூதத்தையதில்வைத்துக்கிண்டு துடிக்கின்ற சூதமது கரிபோலாமே

விளக்கவுரை :


925. சரியான சூதத்தில் வெடியுப்பு பலந்தான் கனமான தாளகமும் பலந்தான்போட்டு
உரியான பொடிபண்ணி மேருவிலேபோட்டு உத்தமனே குப்பிவாய்ச் சில்லிட்டுமூடி
மரியான வாலுகையின் மேலேவைத்து வாம்பாகத் தீமூட்டி பனிரண்டுசாமம்
தெரியான கெந்தகத்திலெரிச்சல் கண்டால் சில்லதனைத்தள்ளிவிட்டு சீலாகைவுட்டுக்கிண்டே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 916 - 920 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

916. ஒன்றான சத்தியது காசுமைந்து உற்பனமாந் தாளகமும் காசுமைந்து
மன்றான சிலையதுவுங் காசுமைந்து மாசற்றசீனமது காசுமைந்து
குன்றான அண்டநீர் காசுமைந்து கோழியுட வெண்மலமும் காசுமைந்து
வென்றான சூதமது காசுமைந்து மெய்யான பூரமது காசுமைந்தே

விளக்கவுரை :


917. காசெடைதானைந்தாகும் வெள்வீரம்பூரம் கனத்ததொரு குருவண்டு ஐம்பத்தொன்று
தூசெடைதான் கல்வத்திற் பொடியாய்ப்பண்ணி துவளவரை ஏழுநாள்சாரநீரால்
மாசெடைதான் நெல்லுப்போல் வில்லைபண்ணி வளமான கல்வத்திற் சுன்னம்பூசி
ஆசெடைதான் மருந்தையிட்டு சீலைசெய்து வைம்பதெருவணைத்துமெள்ள புடம்பலவாமே

விளக்கவுரை :

[ads-post]

918. பலமதுதான் கெந்தகத்தை நிறுத்துப்போடு பாஷாணவெள்ளையது காசுமைந்து
நிலமதுதானீலமது காசுமைந்து நீச்சான வீரமதுகாசுமைந்து
குலமதுதான் கல்லுப்புக் காசுமைந்து கொடிதான காரமது காசுமைந்து
நலமதுதான் சீனமதுகாசுமைந்து நற்கெவுரி மனோசிலையுங் காசுமைந்தே

விளக்கவுரை :


919. அஞ்சோடு வெங்காரமன்னபேதி அழகான துத்தமொடு காசுமைந்து
கஞ்சோடுயிதுவெல்லாங் கல்வத்திட்டு கடிதான வெண்கருவும் எருக்கம்பாலும்
நஞ்சோடு வார்த்தரைத்து குழம்பிக்கொண்டு நலமான தாம்பரத்தின் தகட்டிலப்பி
மிஞ்சோடு கொடிவேலி வேரின்பட்டை மெலிவான அண்டோடுஞ் சமனாய்ச்சேரே

விளக்கவுரை :


920. சேர்த்தல்லோ பொடியாக்கி யெருக்கன்பாலுஞ் சினத்த அடைவெண்கருவு மத்தித்துக்கொண்டு
வார்த்தல்லோ யரைத்திடுவாய் நாலுசாமம் வளமான குகைபண்ணித் தாம்பரத்தைவைத்து
ஏர்த்தல்லோ மேல்மூடிசீலைசெய்து இயல்பாக குழிவெட்டி முழங்கால்மட்டும்
போர்த்தல்லோ புலிப்பாணி எருவடுக்கி புகழாக கெஜபுடமாய் போட்டுவாங்கே

விளக்கவுரை :


Powered by Blogger.