போகர் சப்தகாண்டம் 926 - 930 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 926 - 930 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

926. கிண்டையிலே அடியில் மருந்தில்லாவிட்டால் கெட்டியான பதமென்று தீயையாற்றி
சண்டையிலே ஆறவிட்டு ஒருசாமந்தான் சாதகமாயிருப்பான குறட்டினாலே
மண்டையிலே குப்பியைதான் வெளியேவாங்கி மகத்தான கண்ணீரைத் தெளித்துஆற்றி
பண்டையிலே இரும்பான கத்திகொண்டு பக்குவமாய் மேலோடு பிரம்பாய்வாங்கே

விளக்கவுரை :


927. வாங்கியதோர் தொட்டின்மேற் பொற்றொட்டியாச்சு மருவியே மேலோடிப் பதங்கித்துநின்றால்
ஓங்கியதோர் ரத்தமென்ற பாஷாணநாமம் உற்றஅடி நின்றதுவும் அஞ்சனமுமாச்சு
ஏங்கியதோர் நடுவில்நின்றால் கற்பரியுமாச்சு ஏககுனிமுன் நிற்கில் சரக்கண்டமாச்சு
தாங்கியதோர் இத்தனையும் ஆயிசொல்லச் சாதகமாய்ச் சித்தரெல்லாம் சமைத்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

928. சமைத்திட்ட சரக்குகளில் வேதைகோடி சாதகமா யொவ்வொன்றாய்ப் பார்த்துக்கொண்டு
அமைத்திட்ட நூல்களிலே மறைப்பில்லாமல் அறியாத பசகட்குந் தெரியவென்று
குமைத்திட்ட முத்துபோல் ஒருகயிற்றில் கோர்த்தேன் கொடிகொம்பு கயிற்கொடி மரமொன்றேபோல்
இமைத்திட்ட பிள்ளைகளுக்குகந்து சொன்னேன் ஏழாயிரம் பார்த்தவர்கள் என்போலாமே

விளக்கவுரை :


929. ஆமின்னம் நாகத்தைச்சொல்லக்கேளு ஆச்சரியம்நாகமது பலந்தான்பத்து
ஓமின்னம் நாகத்தைத்தான் கடுகவாங்கி உயர்ந்தமயிர்கொன்றையிலை யரைத்துக்கொண்டு
தாமின்னந்தகடுமேல் பொதிந்து மூடிச்சார்பாகப் புடம்போட்டு எடுத்துக்கொண்டு
காமின்ன மிப்படியே பத்துவிசைபோட்டுக் கார்த்திகையின் கிழங்காலே பத்துவிசைபோடே

விளக்கவுரை :


930. போடப்பா வெருகினுட கிழங்கில்பத்து புளியரனைக் கிழங்குதனில் பத்துவீசைபோடு
நாடப்பா பின்பெடுத்து எண்ணெய்குத்தியுருக்கி நலமாகக் கிண்ணியைபோல் வார்த்துக்கொண்டு
ஊடப்பா நேர்வாளந் தயிலம்வாங்கி யுத்தமனே சாரமது காசுஐந்து
நீடப்பா துரிசியது காசுஐந்து நிலையான கல்லுப்புக் காசுஅஞ்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar