921. வாங்கியே மேல்கவசந்
தள்ளிப்போட்டு வாசியர்முன்குழம்பில் பிசறிக்கொண்டு
தேங்கியே மூன்குகையில்
வைத்துப்பூசிச் சிறப்பாக முன்போலப்புடத்தைப்போடு
தாங்கியே இப்படிதான்
மூன்றுதரம்போடு தவளம்போல் குருவாகும் செம்புதானும்
ஓங்கியே
இக்குருவுக்கென்னவொப்பு உத்தமித்தாயொப்பென்று வுரைசெய்தேனே
விளக்கவுரை :
922. உரைசெய்த குருவுக்கு
எடைகெடைதான்சாரம் உத்தமனே பொடிசெய்து கல்வத்திட்டு
நிரைசெய்த முன்னீரால்
அரைத்துக்கட்டி நேர்பாகப் புடம்போட்டு பனியில்வைக்க
கரைசெய்த ஜெயநீராம்
பூரம்வீரம் கனமாகப் பொடிசெய்து நீரிற்போட்டு
பரைசெய்த ஜெயநீரை
வார்த்துக்கொண்டு பாங்கான சூதத்தை அரைத்துருட்டே
விளக்கவுரை :
[ads-post]
923. உருட்டியதைத்தான்
வடமாய்க்கோர்த்துக்கொண்டு உத்தமனே ஐந்தெழுத்துமெட்டெழுத்துமோது
மருட்டியதையவர்கையில்
காண்பிக்கவேண்டாம் மாஞானமன்மவித்தை யுற்றுப்பாரு
சிருட்டியிதை யொளித்துவிட்டு
மூலம்பாரு சிவயோகபிரம்மநிஷ்டை தெளிந்துகண்டு
திருட்டியமாய் மூலமென்ற
மௌனம்பாரு தீர்க்கமுடன் சின்மயத்தை அறிந்துபோற்றே
விளக்கவுரை :
924. போற்றவே பொற்றொட்டி
வைப்புகேளு புகழாகத் தாளமது மேருபண்ணி
மாற்றவே மண்சீலை
பிலக்கச்செய்து மகத்தான சூதமது பலந்தானெட்டு
ஏற்றவே
ரெண்டுபலஞ்சுத்திகெந்தி இயல்பான ஓட்டிலே கெந்தகத்தையுருக்கி
தோற்றவே
சூதத்தையதில்வைத்துக்கிண்டு துடிக்கின்ற சூதமது கரிபோலாமே
விளக்கவுரை :
925. சரியான சூதத்தில் வெடியுப்பு
பலந்தான் கனமான தாளகமும் பலந்தான்போட்டு
உரியான பொடிபண்ணி
மேருவிலேபோட்டு உத்தமனே குப்பிவாய்ச் சில்லிட்டுமூடி
மரியான வாலுகையின்
மேலேவைத்து வாம்பாகத் தீமூட்டி பனிரண்டுசாமம்
தெரியான கெந்தகத்திலெரிச்சல்
கண்டால் சில்லதனைத்தள்ளிவிட்டு சீலாகைவுட்டுக்கிண்டே
விளக்கவுரை :