போகர் சப்தகாண்டம் 846 - 850 of 7000 பாடல்கள்
846. பண்ணியபின் சதமுகமாம்
குருவுமாச்சு பணவிடைதான் பத்துமெடுத்தொன்றாய்க்கூட்டி
ஒண்ணிப்பின் கல்வத்தில்
முன்னீராலாட்டி உத்தமனே செப்புக்குளெடுத்து
நண்ணியபின்
மேல்மூடிசீலைசெய்து நலமாக வஞ்செருவிற் புடத்தைப்போடு
எண்ணியபின் ஆறவிட்டு
எடுத்துக்கொண்டு இதமான பொற்சிமிளிற் பதனம்பண்ணே
விளக்கவுரை :
847. பண்ணயதோர் குருவெடுத்து
விராலிக்கிட்டுப் பரிவாகச் சாறெடுத்து அயச்சட்டிவார்த்து
ஒண்ணியதோர்
நல்லகொழுக்கரியிலூதி உத்தமனே காந்தமதிற் காட்டித்தோய்ப்பாய்
விண்ணியதோர் கொழுக்காய்ச்சி
தோய்க்கவிண்டுவிண்ணு அகரதரால்ப்பொருமிவிழும்
நண்ணியதோர் சாதெல்லாம்
அளற்றத்தோய்ந்து நலமான அகரெல்லாம் வாரிக்கொள்ளே
விளக்கவுரை :
[ads-post]
848. வாரியேயெருங்காட்டாமணக்கி
னெண்ணெய் வார்த்தல்லோ வெண்காரஞ் சரியாய்க்கூட்டி
நாரியே குகையிலிட்டு மூன்றுதரமுருக்க
நலமான ஈயம்போற் சவளையாகும்
ஏரியே உடைந்ததுபோல்
வாதவெள்ளம் இரைக்கவேதுலையாது அயத்தூள்வித்தை
வாரியே பொங்கையிலே
சதமுட்கொள்ளு மகத்தான அயமுருக்கில் கொல்லுந்தானே
விளக்கவுரை :
849. னென்ற நாகத்தைப் பதையாமற்கொல்லும் சமுசயங்களெண்ணாதே சகலமுமுட்கொள்ளும்
வானென்ற சூதமது
கட்டிப்போகும் மாசற்ற அயனாகமாட்டி ஆட்டு
தேனென்ற சிவகாமி
சொன்னமார்க்கம் செப்பரிய நாதர்கள் சொல்லும்வித்தை
பானென்ற செந்தூரங்களங்கு
செய்யில் பரிவாகவாயிரத்துக்கோடும்பாரே
விளக்கவுரை :
850. ஓடுமே அண்டத்தை
பணம்போல்போற்று உத்தமனே காசெடைதான் குருவைப்போடு
வாடுமே செந்துருக்க
மேலேவைத்து மாசற்ற ரவிதனிலே சாமம்வைக்கத்
தேடுமே மெழுகெல்லாம்
மெழுகாய்போகும் சேர்ந்த மூவாயிரத்துக்கொன்றேபோடும்
பாடுமே வீணையைப்போல்
மெழுகுகொள்ள பரிவான அண்டரதினாண்மைதானே
விளக்கவுரை :