போகர் சப்தகாண்டம் 931 - 935 of 7000 பாடல்கள்
931. அஞ்சான பூநீறுகாசுஐந்து
ஆதியென்ற கெவுரியது காசுஐந்து
பிஞ்சான கெந்தகமும்
காசுஐந்து பேசாத சிலையதுவும் காசுஐந்து
மஞ்சான வீரமது காசுமைந்து
மாசற்ற லிங்கமுந்தான் காசுமைந்து
துஞ்சான தாளகமுங் காசுமைந்து
துடியான வெடியுப்பு காசுமைந்தே
விளக்கவுரை :
932. காசுதானைந்தாகும் சீனமப்பா
கலந்திந்த இடையெல்லா மறுபதாச்சு
மாசுதான் சூதமதும்
அறுபதாகும் வாகான கல்வத்திலிட்டுக்கொண்டு
ஆசிதானேர்வானத் தயிலத்தாலே
ஐந்துநாளரைத்து நன்றாய்வில்லைகட்டி
தூசுதான் நிழலுலர்த்தி
அயத்தகடுக்குளழுத்தி துப்புரவாய்க் கிண்ணியைத்தான் பதித்திடாயே
விளக்கவுரை :
[ads-post]
933. பதித்திடவே யரைத்துநன்றாய் சீலைசெய்து
பாங்கான முன்னிசைத்த மெழுகினாலே
நிதித்திட்டு
இலுப்பைநெய்யால் விளக்குவைத்து நேராகவிளக்கெரிப்பாய் மூன்றுநாள்தான்
கொதித்திட்ட ரசமெல்லாம்
பதங்கமேறுங் கொள்கியந்த பதங்கத்தைக் கத்திகொண்டுவாங்கி
விதித்தி ட்ட நவலோகம்
நூற்றுக்கொன்றி விரைந்ததுவும் பனிரண்டு மாற்றுமாமே
விளக்கவுரை :
934. மாற்றான ரத்தசிங்கி வைப்புகேளு மருவியதில் காயசித்தி லோகசித்தியாகும்
கூற்றானயெமன்போலே
சுருக்குமெத்த கொடியவிஷசூதத்தை நிமைக்குமுன்னே கொல்லும்
காற்றான
காரீயம்பொடிபலந்தான்பத்து கனகத்தின்பொடிதானும் ரண்டரையேபலந்தான்
னீற்றான நாகத்தின்
பொடிபலந்தானைந்து நெல்லிக்காய்க் கெந்தகந்தான் பலம்பத்துபோடே
விளக்கவுரை :
935. பத்துடனே வெடியுப்புப்
பலமுமைந்து பாங்கான தாளகமும் பலமும்நாலு
கொத்துடனே குதிரைப்பல்
பாஷாணமூன்று கொடிதான சாராயம் விட்டுஆட்டி
சித்துடனே லோகமெல்லாம்
கரையுமட்டுஆட்டி சிறப்பாக ரவியிலிட்டுப் பொடியாய்பண்ணி
மூத்துடனே காசிபென்ற
மேருக்கேற்றி மூதண்டவாலுகையில் வைத்திடாயே
விளக்கவுரை :