போகர் சப்தகாண்டம் 1026 - 1030 of 7000 பாடல்கள்
1026. வலுவான லிங்கமது
குருவுமாச்சு வரிசைபெற வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
சுலுவாக கொடுத்துருக்கி
யூதிப்போடு சூட்சமாமாற்றதுவும் ஆறதாகும்
மலுவாகத் தங்கமதுக்
கிடையேசேர்த்து மதிப்புடனே தானுருக்கிப் புடத்தைப்போடு
மெலுவான மாற்றதுவும்
அதிகங்காண மேன்மைபெற கும்பகத்தில் நின்றுகொள்ளே
விளக்கவுரை :
1027. கொள்ளவே யோகசாதனத்தைப்பாரு கறிப்புனே
யெப்போதும் வாசிபாரு
மெள்ளவே முப்பூவையறிந்துபாரு
மேன்மையாம் ஞானத்தைமேவிப்பாரு
உள்ளவே மனவாக்குகஃ காயம்பாரு
உற்பனமா மவஸ்தைமுத லுளவுபாரு
தள்ளவே மோகத்தை யகற்றிப்போடு
சதானந்தம் நிஷ்டையிலே தனித்துநில்லே
விளக்கவுரை :
[ads-post]
1028. நின்றதுமே துஷ்டர்களை யகலத்தள்ளி
நிட்சயமாய்க் கருவிகாண் ஆதியெல்லாம்
வென்றுமே
யாராய்ந்துமேலுக்கேறி வேதாந்த விளக்கொளியை மேவிப்பாரு
குன்றுமேலிருந்தாலும்
குறைவுமுண்டோ கூறவே கும்பகத்திலிருந்துகொண்டு
கன்றுதான் தாய்தனையே
தேடினாற்போல் கடுகவே சின்மயத்தை யறிந்துகொள்ளே
விளக்கவுரை :
1029. அறியவே யிருளதனைப்
போக்கடிக்க அப்பனேசூரியன் வந்துதித்தார்போல
முறியவே லிங்கமது
பலந்தானாகும் முசியாத சூடனது பலந்தானாகும்
தெரியவே
விரண்டுருவமொன்றாய்ச்சேர்த்து தேய்த்திடவே மெழுகதுபோலாட்டிமைந்தா
கரியவே லிங்கத்திற்
கங்கிபூட்டிக் கசகாமல் தீயதனில் வாட்டிடாயே
விளக்கவுரை :
1030. வாட்டவே யிந்தமுறை
பத்துமார்க்கம் வரிசைபெற நெருப்பதனிற் றீயாலாட்டு
நீட்டமுடன் லிங்கமதை
யெடுத்துப்பாரு நிறையான கட்டியது வுறுகிநிற்கும்
தேட்டமாஞ் ஜெயநீரில்
சுருக்குதாக்கு தெளிவாகலிங்கமது வுருக்குபோலாம்
மூட்டனமாம் லிங்கமது
சுருக்குருவுமாச்சு முசியாது வர்ணமது கண்கொள்ளாதே
விளக்கவுரை :