1011. பொன்னான தேகமது கற்றூணாகும்
போகுமே நரைதிரையும் பூதலத்தில்
மன்னான கண்ணிரண்டு மொளியேவீச
மயக்கமில்லை யென்நாளும் கொதிப்புமில்லை
கன்னான மாய்கையது
யற்றுமேதான் காலனுக்கு நாளதுவுமிடங்கொடாமல்
எந்நாளு மூலமதில்
வாழ்வீரென்று இயம்பினார் போகரிஷி எழிலாய்த்தானே
விளக்கவுரை :
1012. தானான நாகமென்ற சிறுகண்ணாகம்
தனியான சாரமுட னிலுப்பைநெய்யில்
வேனான வேழுதரமுருக்கிச்
சாய்க்க வெழிலான சட்டைதள்ளி சுத்தியாச்சு
கோனானதாளகமும் வீரனொன்று
கொடிதான கெவுரியடன் துருசுவொன்று
பானாகவோர்
நிறையாயெடுத்துக்கொண்டு பாங்கான நாகத்திற் சரியாய்க்கூட்டே
விளக்கவுரை :
[ads-post]
1013. கூட்டியே தானுருக்கி
கிராசமீவாய் குருவானநாதமது கட்டிப்போகும்
தாட்டிகமாய் வெள்ளிக்கு
நேராநாகம் தாக்குவாய்த் தானுக்கி வூதிப்போட்டு
மாட்டுவாய் முன்சொன்ன
லிங்கசெம்பு மார்க்கமுடன் வெள்ளிதனில் பத்துக்கொன்று
வாட்டமாய் தானுருக்கி
யெடுத்துப்பாரு மகத்தான வர்ணமதுமேவும்பாரே
விளக்கவுரை :
1014. பாரான செம்புதனில்
வர்ணமுண்டாய்ப் பாங்கான நாகத்தைவேதிக்கும்பா
கூராகவிரண்டிலொன்று
தங்கஞ்சேர்த்து குறிப்பாகத் தகடடித்துப் புடத்தைப்போடு
வீரானமாற்றதுவும்
விஷம்போலேறி மிக்கான வெட்டரையுமாகும்பாரு
காராககாவிக்கு முப்புக்கேகா
கனமான செம்பிலிட வேகந்தானே
விளக்கவுரை :
1015. வேகமாம் லிங்கமொரு பலமுமொன்றாம்
மிக்கான முலைப்பாலால் சுருக்குதாக்கு
பாகமா மெலுமிச்சம்
பழச்சார்சாமம் பசுவானமேனிச்சார் சாமந்தாக்கு
யூகமாந்தேனுமோர் சாமந்தாக்கு
உற்பனமா மெருமைப்பால் சாமந்தாக்கு
சாகாமல் மேதிப்பால்
சாமந்தாக்கு சாரவே சாட்டரணை சாமமாமே
விளக்கவுரை :