1006. மதியான பூநீறு காரந்தானு
மார்க்கமாமூவருப்பு நாகத்தோடு
ததியான வறுவகை ஜெயநீராலே
தண்பெறவெணசாமமரைத்துப்போடு
பசயான செம்பினுட
பாத்திரத்தில் பதிவாகத்தான்கொட்டி சட்டிமூடி
விதிபோலே முப்பொழுது
யெரித்தாயானால் விளையுமடா லிங்கமென்ற கம்பியாச்சே
விளக்கவுரை :
1007. கம்பியாமேற்
பதங்கலிங்கமாச்சு காட்டுமே தீமுறுவல் நடுவிலாச்சு
தும்பிபோல் நிறமுடைய
பாண்டந்தானும் தொட்டியென்பாஷாணந்தானுமாச்சு
தம்பாலென்ற லிங்கமது
வெள்ளிசெம்பில் தாக்காக பத்துக்கொன்றுபோடு
அம்பொன்னாமாற்றதுவும்
மொன்பதாகும் அப்பனே லிங்கமது குருவுமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
1008. குருவான லிங்கமதை
செம்புதன்னில் கொடுத்தமே சரியெடையாய் வூதிப்போடு
கருவான வெள்ளியிலே
பத்துக்கொன்று கருத்தாகத்தானுருக்கி யெடுத்துப்பாரு
உறவான மாற்றதுவும்
எட்டதாகும் உத்தமனே பத்திலொன்று தங்கஞ்சேர்த்து
பருவாகத் தகடடித்துப்
புடத்தைப்போடு பாங்கான தங்கமது பிறக்கும்பாரே
விளக்கவுரை :
1009. பாரப்பா தங்கமென்ன சொல்லப்போமோ பழுப்பான பசுந்தங்கம் யென்னசொல்வேன்
கூறப்பா சிவயோகநிலையில்
நின்றுகும்பித்து ரேசகத்தை மாறிக்கொண்டு
சேரப்பா நடுநிலையை
மையம்பற்றி சிறக்கவே சுழிமுனையைநிறுத்திக்கொண்டு
பாரப்பா தவநிலையைக்கைவிடாமல்
பக்குவமாய் வாசியோகம் பாருபாரே
விளக்கவுரை :
1010. பார்க்கையிலே
தேகமதுகற்பமுண்ணு பச்சையென்ற வில்வமது இதழேயாகும்
சேர்க்கையுட னிதமொன்று
மிளகுவொன்று சிறப்பாகக் காலையிலே வுண்ணவேண்டும்
தீர்க்கமுடன்
நாளொன்றுக்கதிகமாக திறமுடனே மிளகதனையேத்தவேண்டாம்
ஆர்க்கமுடன்
மண்டலந்தானுண்டுபாரு அப்பனே தேகமதுபொன்னாம்பாரே
விளக்கவுரை :