1001. ஆதிபாராபரத்தினிட கிருபைபோற்றி அன்பான வடிமுடியும் நந்திகாப்பு
ஜோதியா முச்சுடரின்
அருளேகாப்பு சுட்சமாஞ் சதாசிவத்தின் பொருளேகாப்பு
பாதிமதிசடையணிந்த
பரமன்காப்பு பத்தியடன் முத்திதரு முதல்வன்காப்பு
ஓதியதோர்
வாணிசரஸ்வதியேகாப்பு ஓங்காரத்துள் வட்டத்தொளிகாப்பாமே
விளக்கவுரை :
1002. காப்பான யேழுலட்சம்
கிரந்தந்தன்னில் கருவாக வொளித்துவைத்த சூட்சமார்க்கம்
காப்பான வைப்புடனே சீனவெப்பு
காரமாங்குடோரிமுதல் கண்டாராய்ந்து
காப்பான களங்குகளும்
சுன்னப்போக்கும் களிப்பான செந்தூரக்காடெல்லாந்தான்
காப்பான ஜெயநீர்கள்
பூநீர்யாவும் கடையான திராவகமும் மெழுகுமாமே
விளக்கவுரை :
[ads-post]
1003. ஆமேதான் மெழுகுடனே
தயிலமார்க்கம் அழகான வஞ்சனமாமையின்போக்கும்
தாமேதான தர்வனத்தின்
யெழுத்தின்போக்கும் தாக்கான மூலிகையின் சாபப்போக்கும்
வேமேதான் வெகுகோடி காலகற்பம்
விருப்பமுடனுண்டுபின் காட்சியெல்லாம்
நாமேதான
றிவதற்குயாவுஞ்சொன்னோம் நாதாக்களடிவணங்கி நவிறிட்டேனே
விளக்கவுரை :
1004. நவின்றிட்டே னேழுலட்சம்
கிரந்தப்போக்கை நயமுடனே நாட்டிலோர்க் கறியவென்று
புகன்றிட்டேனே
ழாயிரக்காண்டமாக பூட்டினேன் சத்தகாண்டம் பண்பதாக
நவின்றிட்டேனிக்
காண்டமிரண்டாக்காண்டம் தகுமானபோக்குகளு மனந்தஞ்சொன்னேன்
நவின்றிட்ட போகரிஷி
சொன்னநூலில் கருமான நூலிதுதான் மதநூல்தானே
விளக்கவுரை :
1005. தானான பெருநூலேழாயிரந்தான்
தாக்கான சீனமுடன் வைப்புமார்க்கம்
போனான குருசொன்ன
நீதிமார்க்கம் குறிப்பான கைபாகஞ்செய்பாகந்தான்
வேனானலிங்கமது
வைப்புமார்க்கம் எளிதாகக் கூறுகிறேன் மைந்தாகேளு
பானான படிகாரம் கெந்திதானும்
பளிங்கான ரசமுடனே மதியமாமே
விளக்கவுரை :