1021. ஆறான மாற்றதுவுமென்னசொல்வேன்
அரகரா சியோகம் காணலாச்சு
பாறான தங்கமது நேரேசேர்த்து
பரிவாகத் தகடடித்துப் புடத்தைப்போடு
கூறான மட்டதங்கஞ்
சேர்த்துருக்க குசலமாம் மாற்றதுவும் பத்ததாகும்
பேறான லிங்கமது குருவினாலே
பலத்துதடா வாதவித்தை நிசமதாச்சே
விளக்கவுரை :
1022. நிசமான வாதவித்தைக்
கைக்குள்ளானால் நிச்சயமாய் விட்டகுறை வாய்த்ததென்பார்
குசமான விதியாளி சாதியாவான்
கும்பகத்தைச் சேர்ந்துகொண்டு கூர்மைசொல்வான்
தசமான மூலத்தை
யிருத்திக்கொண்டு தாக்கியே சதாநித்தம் நிஷ்டைசெய்வார்
வசமான நிஷ்டையிலே
இருந்துகொண்டு வாதிப்பான் சண்டாளக் கிடங்கொடானே
விளக்கவுரை :
[ads-post]
1023. இடங்கொடான்
கோடிபேரணுகினாலும் இயலானது வாதத்திலிருந்துகொண்டு
மடமுடனே சிவாலயங்கள்
கட்டுவான்பார் மகத்தான சித்தர்கட்கு தொண்டுபண்ணி
திடமுடனே
யவர்களிடங்கோடிகாலந்தான் தெரிசித்து விருப்பமுடன் யாவுங்கேட்டு
சடமதற்கு காயசித்தி
யேத்தவென்று சதாகாலம் நிஷ்டையிலே நிற்பர்தானே
விளக்கவுரை :
1024. தானான லிங்கமது பலந்தானொன்று
சார்வான சீனமுடனண்டமொன்று
வேனான வெடியுப்பு
பலந்தானொன்று வெடியான வீரமதை சேர்த்துமேதான்
பானான முட்டையின் கருவினாலே
பதமாகதாதானரைத்துக் கங்கிபூட்டி
மானான ரவிதனிலே காயப்போடு
மகத்தான மண்மறைவில் புடத்தைப்போடே
விளக்கவுரை :
1025. போடவே பத்துமுறை முன்போல்தானே போக்கான சரக்கெல்லாம் ஒன்றாய்க்கூட்டி
தேடவே தானரைத்துக்
கவசஞ்செய்து தெளிவாக மண்மறைவிற் புடத்தைப்போடு
நாடவே சாண்குழியில்
வாட்டிநாலாம் நலமாகப் புடம்போடக் கட்டிப்போகும்
வாடவே கவசமதை நீக்கிநீக்கி
வண்மைபெறப் போடுவதுவலுமைபாரே
விளக்கவுரை :