போகர் சப்தகாண்டம் 1066 - 1070 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1066. மாறுமே சுழிமுனையும் விந்துதானே மாறாமல் மேல்மூலத்தொடுங்கும்பாரு
கோறுமே திரிகோணவட்டத்துள்ளே குறிப்பாகச் சவாத்துமாவைக் காணலாகும்
நீறுமேரவிமேநேர் மதிதாநிற்கும் நெடிதான வாகாசம் பிரமபீடம்
பாறுமே முத்திவழிகாணலாகும் பதிகடந்த ஞானியாம்யோகியாமே

விளக்கவுரை :


1067. யோகியாமுனைமூக்கு மத்தியத்தில் யொளிவீசுமோரி தழத்தாமரையின்மேலே
போகியாம்விலையத்திலூடுதாக்கி பகட்டவே வங்குலந்தா னின்றுசென்றால்
சாகியாம் ரவிமதியும் ஒன்றாய்கூடும் சாங்கமாய் கோட்டைவிட்டு வுடலுய்யாது
வேகியால் காதுபொரி மிகவேக்காடு விலங்கவே யோகத்துக்குறுதியாச்சு

விளக்கவுரை :

[ads-post]

1068. ஆச்சப்பா மத்திவழிகாணலாச்சு அடவான நினைவுதடுமாறல் கண்டாய்
பேச்சப்பா மிகப்பேச்சு பேசினாக்கால் பிராணாய யோகநிலை காணலாமே
மூச்சப்பா பிரளாது வயானத்தின்கீழ் முடிவான வயானத்தில் மனமேகுற்றம்
நீச்சப்பா வுதரத்தில் நாடிதானும் நெடிதான மூலவலை நீக்கும்பாரே

விளக்கவுரை :


1069. பாரேதான் யையந்தும் போக்கிவிட்டால் பசியேது ஞானத்தின் கதையேகாட்டும்
சீரேதான் கலபமறிந்துண்ணவேண்டும் சிறப்பான வியாதிதன்னைத் தீர்க்கவேண்டும்
நேரேதான் ரேசகத்தை நிறுத்தவேண்டும் நெடிதான கும்பத்தை மாற்றவேண்டும்
கூரேதான் பூரகத்தைச் சாரவேண்டும் கூசாமல் காலூறி செபத்திடீரே

விளக்கவுரை :


1070. செபிக்கவே நெற்றியிலே விபூதிபூசி சிறப்பான வஷ்டாங்க யோகஞ்செய்து
லபிக்கவே பலநூறுங்கற்றுக்கொண்டு லோசித்து யோகத்தைப்போற்றிக்கொண்டு
குபிக்கவே பம்பரத்தி னாட்டினாற்போல் குட்டங்கொண்ட யெண்ணையது தண்ணீராமோ
தபிக்கவே நாய்போலக் கெட்டலைந்து சதாகாலங் காசினியி லுழல்வார்தாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1061 - 1065 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1061. பூட்டயிலே விதுவெல்லாம் பாண்டத்திட்டுப் பொங்கமுடனிதுநேரே யெண்ணைசேர்த்து
மாட்டுவாய் கடைசரக்குசொல்லக்கேளு மகத்தான கிராம்புடனே ஏலந்தானும்
நீட்டுவாய்ச் சுக்குடனே மிளகுசேரு கெடிதான வலம்புரியின் மாசிக்காயும்
தேட்டமே மதுரமுடன் கோஷ்டந்தானும் தெளிவான திப்பிளியும் ரோசனையுமாமே

விளக்கவுரை :


1062. ஆமேதான் பரங்கியுட பட்டைதானும் அடவான மாசிக்காய் தான்றிக்காயும்
வேமேதான் குரோசானி ரோமந்தானும் விரைவான முட்டியுடன் கடுகுரோனி
தாமேதான் வாய்விலங்கம் லவங்கப்பட்டை தயவான வால்மிளகு சித்ரமூலம்
நாமேதான் வசம்புடனே சித்தரைத்தை நலமான சாதிக்காய் தானுங்கூட்டே

விளக்கவுரை :

[ads-post]

1063. கூட்டியே வகைவகைக்கும் பலந்தான்காலாம் குறிப்புடனே தானிடித்து சூரணித்து
பூட்டியே யெண்ணெயுட மூலிசேர்த்து புகழாக மூன்றுமொன்றாய் ஒக்கக்கூட்டி
மாட்டியே பசும்பாலுங்கூடச்சேர்த்து மதிப்பாக மெழுகுபதந் தன்னிற்காய்ச்சி
தாட்டியால் சீசாவில் தானடைத்து சாங்கமாய் னெல்லாவிக்குள்ளேவையே

விளக்கவுரை :


1064. வைக்கவே மண்டலந்தான் கொள்ளவேண்டும் வகையாகக் காசிடைதானருந்தவேண்டும்
மெய்க்கவே புளிபுகையுந்தள்ளவேண்டும் மேன்மைபெற பத்தியந்தானிருக்கவேண்டும்
சொக்கவே பெண்மாய்கை நீக்கவேண்டும் சூட்சாதி சூட்சத்தையறியவேண்டும்
புக்கவே வாசியைத்தானிறுத்தவேண்டும் புகழான தேகமது பொன்னாகும்பாரே

விளக்கவுரை :


1065. பொன்னாகும் நரைதிரையு மற்றுப்போகும் பாகாது சடலமது கல்தூணாகும்
மன்னாகேள் மூப்பதுவுமகலும்பாரு மைந்தனே வாலையது யாவாய்நீயும்
பன்னவே மூச்சதுவும் கீழேநோக்கும் பாங்கான முனைமூக்கு பிடரிதன்னில்
என்னவே மூச்சதுவு மேவும்பாரு எழிலான சுழிமுனையுமாகுந்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1056 - 1060 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1056. தேடவே சித்தர்களும் முனிவர்தாமும் தெளிவுடனே மறைப்பெல்லாம் தெரிவிப்பார்
கூடவே யோகத்திற்குறுதிசொல்வார் குறியான வாசிபீடத்தைச்சொல்வார் 
நாடவே நாலுயுக மகிமைசொல்வார் நாதாக்கள் மறைப்பினுட மார்க்கஞ்சொல்வார்
பாடவே போகரிஷி மர்மமெல்லாம் பாடிவைத்தேன் சத்தகாண்டந்தன்னில்தானே

விளக்கவுரை :


1057. தானேதான் வுப்பிட்ட பாண்டந்தானும் தப்பாது தானுளுக்குந்தன்மைபோல
வேனென்ற காயமது நில்லாதப்பா வெகுசுருக்கு மேதினியிலார்தா னின்றார்
நானென்ற காயாதிகற்பஞ் சஒல்வோம் நலமான கையானின் சார்தானாழி
போமென்ற பொன்முசுட்டை சார்தானாழி போற்றவே யாவாரைச் சார்தான்கூட்டே

விளக்கவுரை :

[ads-post]

1058. கூட்டவே தலைச்சுருளி சாற்தானாழி கொடிதான சிறியாளின் சாற்தானாழி
நீட்டவே கொடிவேலின் சார்தானாழி நெடிதான புனல்முருங்கை சார்தானாழி
பூட்டவே நறுதாளிச் சார்தானாழி புகலவே வெள்ளறுகுச் சார்தானாழி
மாட்டவே புளியாரைச் சார்தானாழி மதிப்புடனே செங்கடுக்காய் சாற்தான்கூட்டே

விளக்கவுரை :


1059. சாறான தழுதாழை சாற்தானாழி தாக்கான குமரிச்சாற்தானாழி
மாறான வழுதலையின் சாற்தானாழி மதிப்பான காசானின் சாற்தானாழி
வேரான விஷப்பாகல் சாற்தானாழி வெடிப்பான கொமட்டியின் சாற்தானாழி
கூறான பொடுதலையின் சாற்தானாழி கறிப்பான மாமதளையின் சார்தான்சேரே

விளக்கவுரை :


1060. சேர்க்கவே பசும்பாலைச் சாற்தானாழி சிவப்பான செம்பசலைச் சாற்தானாழி
தீர்க்கவே தைவேளைசார்தானாழி திறமான வாதண்டை சாற்தானாழி
பார்க்கவே முசல்மூலிச் சாற்தானாழி பாங்கான பழுபாகல் சாற்தானாழி
பூர்க்கவே நொச்சியிலை சாற்தானாழி போக்கான தக்காளிச் சாற்தான்பூட்டே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1051 - 1055 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1051. கற்றூணாய்க் காயத்தை நிறுத்திக்கொண்டு கடந்தவெளி முப்பாழாம் மதிகடந்து
பற்றூணாம் மாயசாகரத்தைவிட்டுப் பதிவாக மேலேறி கும்பகத்தில்நின்று
வெற்றிபெற சின்மயத்தை மிகவிரும்பி வெளியான ஜெகஜோதிதன்னைக்கண்டு
பற்றியே பராபரத்தினடியைக்காண பராபரிமணித்தாயைப் பணிந்துபோற்றே

விளக்கவுரை :


1052. போற்றவே தாலிப்பொன் னேளிதத்தைப் பொலிவான விசுவகரிமியறிவான்பாரு
ஏற்றவே உன்னெளிமை யறிவாராந்தான் யெழிலான சித்தர்முனி யறிவாரப்பா
மாற்றவே சீவனத்துக் கிடமதாக மகாகோடி ரிஷிதேவர் கைமறைப்பு
ஆற்றவே கூடாது யொருவராலும் அப்பனே நாமுனக்கு வரைவோம்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1053. பாரேதான் நாகமது பலமஞ்சாகும் பதிவான இலுப்பைநெய்யில் சுத்திசெய்து
நேரேதான் கிண்ணமது குடம்போல்செய்து நேரான தாசிளமும் சரியாய்க்கொண்டு
சீரேதான் பழச்சாற்றால் மைபோலாட்டி கற்பகக் கிண்ணிக்கு வங்கிபூட்டி
வாரேதான் கிண்ணத்தில் சூதராசன் வளமாக வாய்மட்டும் நிறையவாரே

விளக்கவுரை :


1054. நிறையவே சட்டியிலே மணல்தான்கொட்டி கெடிதான கிண்ணமதை மணல்மேல்வைத்து
அறையவே யெலுமிச்சம்பழச்சாற்றன்னை அப்பனே சுருக்கிடவே மண்டலந்தான்
கரையவே தாளகத்தின் வங்கவாசால் கடிதான நாகமது கட்டிப்போகும்
முறைபோல சூதமது விடையேசேர்த்து முயற்சியாய் குகையிலிட்டு வுருக்கிடாயே

விளக்கவுரை :


1055. உருக்கியே கெந்தியது பாதிசேர்த்து வுற்பனமாமேருவென்ற குப்பிக்கேற்றி
நெருக்கியே நாற்சாமமெரித்தபோது நிலையான செந்தூரமென்ன சொல்வேன்
பருக்கியே வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று பாங்காக கொடுத்திடவே மற்றுபத்தாம்
பெருக்கியே சிவயோகந்தன்னிற்சென்று பேரின்பலாபமென விதியைத்தேடே

விளக்கவுரை :


Powered by Blogger.