1061. பூட்டயிலே விதுவெல்லாம்
பாண்டத்திட்டுப் பொங்கமுடனிதுநேரே யெண்ணைசேர்த்து
மாட்டுவாய்
கடைசரக்குசொல்லக்கேளு மகத்தான கிராம்புடனே ஏலந்தானும்
நீட்டுவாய்ச் சுக்குடனே
மிளகுசேரு கெடிதான வலம்புரியின் மாசிக்காயும்
தேட்டமே மதுரமுடன்
கோஷ்டந்தானும் தெளிவான திப்பிளியும் ரோசனையுமாமே
விளக்கவுரை :
1062. ஆமேதான் பரங்கியுட
பட்டைதானும் அடவான மாசிக்காய் தான்றிக்காயும்
வேமேதான் குரோசானி
ரோமந்தானும் விரைவான முட்டியுடன் கடுகுரோனி
தாமேதான் வாய்விலங்கம்
லவங்கப்பட்டை தயவான வால்மிளகு சித்ரமூலம்
நாமேதான் வசம்புடனே
சித்தரைத்தை நலமான சாதிக்காய் தானுங்கூட்டே
விளக்கவுரை :
[ads-post]
1063. கூட்டியே வகைவகைக்கும்
பலந்தான்காலாம் குறிப்புடனே தானிடித்து சூரணித்து
பூட்டியே யெண்ணெயுட
மூலிசேர்த்து புகழாக மூன்றுமொன்றாய் ஒக்கக்கூட்டி
மாட்டியே
பசும்பாலுங்கூடச்சேர்த்து மதிப்பாக மெழுகுபதந் தன்னிற்காய்ச்சி
தாட்டியால் சீசாவில்
தானடைத்து சாங்கமாய் னெல்லாவிக்குள்ளேவையே
விளக்கவுரை :
1064. வைக்கவே மண்டலந்தான்
கொள்ளவேண்டும் வகையாகக் காசிடைதானருந்தவேண்டும்
மெய்க்கவே
புளிபுகையுந்தள்ளவேண்டும் மேன்மைபெற பத்தியந்தானிருக்கவேண்டும்
சொக்கவே பெண்மாய்கை
நீக்கவேண்டும் சூட்சாதி சூட்சத்தையறியவேண்டும்
புக்கவே
வாசியைத்தானிறுத்தவேண்டும் புகழான தேகமது பொன்னாகும்பாரே
விளக்கவுரை :
1065. பொன்னாகும் நரைதிரையு மற்றுப்போகும் பாகாது சடலமது கல்தூணாகும்
மன்னாகேள்
மூப்பதுவுமகலும்பாரு மைந்தனே வாலையது யாவாய்நீயும்
பன்னவே மூச்சதுவும்
கீழேநோக்கும் பாங்கான முனைமூக்கு பிடரிதன்னில்
என்னவே மூச்சதுவு மேவும்பாரு
எழிலான சுழிமுனையுமாகுந்தானே
விளக்கவுரை :