1056. தேடவே சித்தர்களும்
முனிவர்தாமும் தெளிவுடனே மறைப்பெல்லாம் தெரிவிப்பார்
கூடவே
யோகத்திற்குறுதிசொல்வார் குறியான வாசிபீடத்தைச்சொல்வார்
நாடவே நாலுயுக மகிமைசொல்வார்
நாதாக்கள் மறைப்பினுட மார்க்கஞ்சொல்வார்
பாடவே போகரிஷி மர்மமெல்லாம்
பாடிவைத்தேன் சத்தகாண்டந்தன்னில்தானே
விளக்கவுரை :
1057. தானேதான் வுப்பிட்ட பாண்டந்தானும் தப்பாது தானுளுக்குந்தன்மைபோல
வேனென்ற காயமது நில்லாதப்பா
வெகுசுருக்கு மேதினியிலார்தா னின்றார்
நானென்ற காயாதிகற்பஞ்
சஒல்வோம் நலமான கையானின் சார்தானாழி
போமென்ற பொன்முசுட்டை
சார்தானாழி போற்றவே யாவாரைச் சார்தான்கூட்டே
விளக்கவுரை :
[ads-post]
1058. கூட்டவே தலைச்சுருளி
சாற்தானாழி கொடிதான சிறியாளின் சாற்தானாழி
நீட்டவே கொடிவேலின்
சார்தானாழி நெடிதான புனல்முருங்கை சார்தானாழி
பூட்டவே நறுதாளிச்
சார்தானாழி புகலவே வெள்ளறுகுச் சார்தானாழி
மாட்டவே புளியாரைச்
சார்தானாழி மதிப்புடனே செங்கடுக்காய் சாற்தான்கூட்டே
விளக்கவுரை :
1059. சாறான தழுதாழை சாற்தானாழி
தாக்கான குமரிச்சாற்தானாழி
மாறான வழுதலையின் சாற்தானாழி
மதிப்பான காசானின் சாற்தானாழி
வேரான விஷப்பாகல் சாற்தானாழி
வெடிப்பான கொமட்டியின் சாற்தானாழி
கூறான பொடுதலையின்
சாற்தானாழி கறிப்பான மாமதளையின் சார்தான்சேரே
விளக்கவுரை :
1060. சேர்க்கவே பசும்பாலைச்
சாற்தானாழி சிவப்பான செம்பசலைச் சாற்தானாழி
தீர்க்கவே தைவேளைசார்தானாழி
திறமான வாதண்டை சாற்தானாழி
பார்க்கவே முசல்மூலிச்
சாற்தானாழி பாங்கான பழுபாகல் சாற்தானாழி
பூர்க்கவே நொச்சியிலை
சாற்தானாழி போக்கான தக்காளிச் சாற்தான்பூட்டே
விளக்கவுரை :