போகர் சப்தகாண்டம் 1196 - 1200 of 7000 பாடல்கள்
1196. போடேநீ தீமூட்டி
யுலையில்வைத்து பொங்கமுடன் தானுருக்கி யெடுத்துப்பாரு
நாடவே களங்கமது
யென்னசொல்வேன் நயமான களங்கமது சொல்லப்போமோ
நீடவே வெள்ளிசெம்பில்
பத்துக்கொன்று நினைவாகத் தானுருக்கி யெடுத்துப்பாரு
நூடவே கரியோட்டி லூதிப்போடு
நுணுக்கமா மாற்றதுவு மாறதாமே
விளக்கவுரை :
1197. ஆறான மட்டமது சொல்லப்போமோ அப்பனே நாலுக்கோர் தங்கஞ்சேர்த்து
வாறான வாறடித்துப்
புடத்தைப்போடு வரைகட்டித் தங்கமது இறங்கும்பாரு
கூறான தங்கமது பசுமைமெத்தக்
குவலயத்தில் யத்தங்கம் சொல்லப்போமோ
நாறான சவளையது வதிதங்காணீர்
நாதாக்கள் செய்திடுவார் நளினமாமே
விளக்கவுரை :
[ads-post]
1198. நளினமா மின்னமொரு
போக்குசொல்வோம் நாதாக்கள் வித்தையது கூறப்போமோ
மளினமாங் கெந்தியொரு
பலமேவாங்கு மகத்தான விரும்பிலியின் தயிலத்தாட்டி
களினமா மாத்திரைபோ
லுண்டைசெய்து கலசத்தில் தானடைத்து சீலைசெய்து
தளினமாய் குழித்தயிலம்
இறக்கிப்பாரு தாக்கான பொன்வர்ணத் தயிலமாமே
விளக்கவுரை :
1199. ஆமேதான் தயிலத்தை ரசத்திற்றாக்கு
அப்பனே சூதமது மடிந்துபோகும்
தாமேதான்
சூதமதுமடிந்துதானால் தாரணியில் வெகுகோடி வேதையோடும்
வேமேதான் சூதமது நேரேயொக்க
வெடியான வுப்பதுவுங் காலாய்க்கூட்டி
நாமேதான் அறுவகை
ஜெயநீர்தன்னால் நலமாகத் தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
1200. நாலான பில்லையதுக் காயவைத்து
நலமாக ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
காலான குக்குடமாம்
புடத்தைப்போடு கருவான செந்தூரம் யென்ன சொல்வேன்
வேலான வெள்ளியது
செம்பிற்றாக்கு மிக்கான மாற்றதுவு மென்னசொல்வேன்
சூலான வர்ணமது சொல்லப்போமோ
கருதியாம் வாதவித்தை அதீதம்பாரே
விளக்கவுரை :