1181. போகாமல் சவர்க்காரச் சுன்னம்சொல்வேன் பொற்கொடிக்கு ஈசனன்று புகன்றவாறு
வேகாமல் பூநீறுபதக்குவாரி
விரைந்துவொரு பாண்டத்திலளந்துபோட்டு
ஏகாமல் மனிதனுட அமுரிதானும்
இதமாகப் பதினாறுபடிதான்வார்த்து
சாகாமல் மூன்றுநாள்
கலக்கிவைத்துச் சார்ந்தபின்பு நாலாநாள் தெளிவுவாங்கே
விளக்கவுரை :
1182. வாங்கியந்த தெளிவிலே
கல்லுச்சுன்னம் வளமாகத் தீநிறுத்தரைப்படிரண்டுபோட்டு
தேங்கியதைமூன்றுநாள்
கலக்கிவைத்துச் சிறப்பாக நாலாநாள் தெளிவுவாங்கி
ஓங்கியொருபடிதானுங்கல்லுநயப்பொடித்து
வொக்கவந்த தெளிவிலே கரைத்துப்போடு
தாங்கியே நாலாநாள் தெளிவைவாங்கி
சமர்த்தாக வடிகனத்த சட்டியிலேவூற்றே
விளக்கவுரை :
[ads-post]
1183. ஊற்றியே வெடியுப்புச்
சீனந்தானு முயர்ந்துநின்ற துரிசியொடு சாரம்வீரம்
ஆற்றியே வெள்ளையென்ற
பாஷாணந்தா னப்பனே வகைக்குமொரு பலந்தான்தூக்கி
சாற்றியே கல்வத்திற்பொடித்து
மைபோல் சார்பாக முன்தெளிவிலொக்கப்போட்டுப்
போற்றியே ஈசானபூசைபண்ணிப்
புகழாக வடுப்பேற்றி யெரித்திடாயே
விளக்கவுரை :
1184. எரித்திட்டுத்
தீபம்போலடிபாறாவிதமாக வயத்துடுப்பால் கிண்டிக்கிண்டி
வரித்திட்டுக் குழம்புபோல்
வருதல்கண்டு வாகான நல்லெண்ணெய் சேரவார்த்து
தரித்திட்டு மெழுகுபோல்
பில்லைபண்ணிச் சமரசமாய் ரவியிலிட்டுக் காய்ந்தபின்பு
மரித்திட்டு மல்லிகையின்
சாறுவாங்கி வரிசையாய்த் தோய்த்தெடுத்து ரவியிற்போடே
விளக்கவுரை :
1185. போட்டுவா
தினமேழுபக்தோட்டுக்குள் பொலிவான யெண்ணெயெல்லா மோடேயுண்டு
காட்டுவாய் கருப்பாக
யிருக்கும்பாரு கண்டுநீமயங்காதே பாக்குபோல்சீவி
நீட்டுவால் சீலைதனைக்
கீழேபோட்டு நேராகமல்லிகையினிலைபரப்பி
மாட்டுவாய்
சீவல்தன்மேல்வைத்து மல்லிகையினிலையினாலே மூடிப்போடே
விளக்கவுரை :