1186. மூட்டியே நெல்லதனைப்
பாண்டத்திட்டு முயற்சியாய்த் தண்ணீரில்பசரிக்கொண்டு
நீட்டியே யடுப்பேற்றி
யதின்மேல்சீலை நேர்ப்பாக வைத்தெரித்து நினைவாய்வாங்கி
வாட்டியே மேற்சட்டி
கவிழ்த்துமூடி மயங்காதே யாவிகண்டபதத்தில்வாங்கு
தேட்டியே சீவனெல்லா
மொன்றாய்ப்போகும் திறமாக ரவிதனிலே காயப்போடே
விளக்கவுரை :
1187. காய்ந்தபின்பு யிலைபரப்பி
நெற்பாண்டத்திட்டு காரியமாய் முன்போலே அவித்தெடுத்து
மாய்ந்துபின்பு
ரவியிலிட்டுக் காய்ந்தபின்பு மறுக்காலும் மருந்ததனைச் சீவலாக்கிக்
காய்ந்ததின்பு யிலைபரப்பி
அவித்தெடுத்துக் கவனமாமூன்றுதரமானபின்பு
ஆய்ந்தபின்பு பல்லையைப்போல்
பண்ணிக்கொண்டு வுற்பனமாய்க் கீழ்மேலும் கற்சுன்னம்வையே
விளக்கவுரை :
[ads-post]
1188. வையப்பா சீலைக்குள்
கிளிபோல்கட்டு வளமாகசட்டியிலேவோடுநடுவிலேவைத்து
மெய்யப்பா மேலாகவாட்டவோடு
மெல்லிதாய்த் தமருமொரு நூறுமிட்டுச்
செய்யப்பா சட்டியின்மேல்
ஊறப்போட்டுச் சிறப்பாக மல்லிகையினிலையதுவைத்து
கொய்யப்பா தண்ணியிலே
போட்டுக்காய்ச்சி குறிப்பாகத் துவாரத்தால் விட்டுநீற்றே
விளக்கவுரை :
1189. ஆமேதானாகமொரு பலமேவாங்கி அடவாக யிலுப்பைநெய்யில் வுருக்கிச்சாய்த்து
வேமேதான் கிண்ணியிலை
கவசஞ்செய்து மிக்கான காடையென்ற புடத்தைப்போடு
நாமேதான்
புகையதுவுங்கட்டியேதான் நலமாகக் கண்ணெல்லாங் கட்டிப்போகும்
தாமேதான் நாகமிடை
சூதஞ்சேர்த்து தாக்கான களங்காக வுருக்கிடாயே
விளக்கவுரை :
1190. உருக்கையிலே கெந்தியைநீ
களஞ்சியொடு வுத்தமனே நாகமதுகளங்குமாகும்
வருகையிலே கலங்குதனை
யெடுத்துப்பாரு மகத்தான சொர்ணமதுவுள்ளேநிற்கும்
தருகையிலே வெள்ளிசெம்பஇல்
பத்துக்கொன்று தாக்கடாகுருவதனை களங்குதன்னை
நிருகையிலே விருக்குமுகந்
தன்னிலீய நெடிதான மாற்றதுவுமாகும்பாரே
விளக்கவுரை :