போகர் சப்தகாண்டம் 1026 - 1030 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1026. வலுவான லிங்கமது குருவுமாச்சு வரிசைபெற வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
சுலுவாக கொடுத்துருக்கி யூதிப்போடு சூட்சமாமாற்றதுவும் ஆறதாகும் 
மலுவாகத் தங்கமதுக் கிடையேசேர்த்து மதிப்புடனே தானுருக்கிப் புடத்தைப்போடு
மெலுவான மாற்றதுவும் அதிகங்காண மேன்மைபெற கும்பகத்தில் நின்றுகொள்ளே

விளக்கவுரை :


1027. கொள்ளவே யோகசாதனத்தைப்பாரு கறிப்புனே யெப்போதும் வாசிபாரு
மெள்ளவே முப்பூவையறிந்துபாரு மேன்மையாம் ஞானத்தைமேவிப்பாரு
உள்ளவே மனவாக்குகஃ காயம்பாரு உற்பனமா மவஸ்தைமுத லுளவுபாரு
தள்ளவே மோகத்தை யகற்றிப்போடு சதானந்தம் நிஷ்டையிலே தனித்துநில்லே

விளக்கவுரை :

[ads-post]

1028. நின்றதுமே துஷ்டர்களை யகலத்தள்ளி நிட்சயமாய்க் கருவிகாண் ஆதியெல்லாம்
வென்றுமே யாராய்ந்துமேலுக்கேறி வேதாந்த விளக்கொளியை மேவிப்பாரு
குன்றுமேலிருந்தாலும் குறைவுமுண்டோ கூறவே கும்பகத்திலிருந்துகொண்டு
கன்றுதான் தாய்தனையே தேடினாற்போல் கடுகவே சின்மயத்தை யறிந்துகொள்ளே

விளக்கவுரை :


1029. அறியவே யிருளதனைப் போக்கடிக்க அப்பனேசூரியன் வந்துதித்தார்போல
முறியவே லிங்கமது பலந்தானாகும் முசியாத சூடனது பலந்தானாகும்
தெரியவே விரண்டுருவமொன்றாய்ச்சேர்த்து தேய்த்திடவே மெழுகதுபோலாட்டிமைந்தா
கரியவே லிங்கத்திற் கங்கிபூட்டிக் கசகாமல் தீயதனில் வாட்டிடாயே

விளக்கவுரை :


1030. வாட்டவே யிந்தமுறை பத்துமார்க்கம் வரிசைபெற நெருப்பதனிற் றீயாலாட்டு
நீட்டமுடன் லிங்கமதை யெடுத்துப்பாரு நிறையான கட்டியது வுறுகிநிற்கும்
தேட்டமாஞ் ஜெயநீரில் சுருக்குதாக்கு தெளிவாகலிங்கமது வுருக்குபோலாம்
மூட்டனமாம் லிங்கமது சுருக்குருவுமாச்சு முசியாது வர்ணமது கண்கொள்ளாதே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1021 - 1025 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1021. ஆறான மாற்றதுவுமென்னசொல்வேன் அரகரா சியோகம் காணலாச்சு
பாறான தங்கமது நேரேசேர்த்து பரிவாகத் தகடடித்துப் புடத்தைப்போடு
கூறான மட்டதங்கஞ் சேர்த்துருக்க குசலமாம் மாற்றதுவும் பத்ததாகும்
பேறான லிங்கமது குருவினாலே பலத்துதடா வாதவித்தை நிசமதாச்சே

விளக்கவுரை :


1022. நிசமான வாதவித்தைக் கைக்குள்ளானால் நிச்சயமாய் விட்டகுறை வாய்த்ததென்பார்
குசமான விதியாளி சாதியாவான் கும்பகத்தைச் சேர்ந்துகொண்டு கூர்மைசொல்வான்
தசமான மூலத்தை யிருத்திக்கொண்டு தாக்கியே சதாநித்தம் நிஷ்டைசெய்வார்
வசமான நிஷ்டையிலே இருந்துகொண்டு வாதிப்பான் சண்டாளக் கிடங்கொடானே

விளக்கவுரை :

[ads-post]

1023. இடங்கொடான் கோடிபேரணுகினாலும் இயலானது வாதத்திலிருந்துகொண்டு
மடமுடனே சிவாலயங்கள் கட்டுவான்பார் மகத்தான சித்தர்கட்கு தொண்டுபண்ணி
திடமுடனே யவர்களிடங்கோடிகாலந்தான் தெரிசித்து விருப்பமுடன் யாவுங்கேட்டு
சடமதற்கு காயசித்தி யேத்தவென்று சதாகாலம் நிஷ்டையிலே நிற்பர்தானே

விளக்கவுரை :


1024. தானான லிங்கமது பலந்தானொன்று சார்வான சீனமுடனண்டமொன்று
வேனான வெடியுப்பு பலந்தானொன்று வெடியான வீரமதை சேர்த்துமேதான்
பானான முட்டையின் கருவினாலே பதமாகதாதானரைத்துக் கங்கிபூட்டி
மானான ரவிதனிலே காயப்போடு மகத்தான மண்மறைவில் புடத்தைப்போடே

விளக்கவுரை :


1025. போடவே பத்துமுறை முன்போல்தானே போக்கான சரக்கெல்லாம் ஒன்றாய்க்கூட்டி
தேடவே தானரைத்துக் கவசஞ்செய்து தெளிவாக மண்மறைவிற் புடத்தைப்போடு
நாடவே சாண்குழியில் வாட்டிநாலாம் நலமாகப் புடம்போடக் கட்டிப்போகும்
வாடவே கவசமதை நீக்கிநீக்கி வண்மைபெறப் போடுவதுவலுமைபாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1016 - 1020 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1016. சாமந்தான்சுருக்கிடவே கட்டியாகும் சாங்கமாய் வயமதுவும் பொடிகாலாகும்
தாமந்தான் றாளமுங்கால் தானாகும்தனியான கெந்தியது கால்தானாகும்
வெமந்தான் சிங்கியது கால்தானாகும் வெடியான வுப்பதுவும் கால்தானாகும்
ஆமந்தான் சிற்றண்டக் கருவாலாட்டி அப்பனே லிங்கத்திற் கவசம்போடே

விளக்கவுரை :


1017. போடவே ரவிதனிலே காயப்போடு பொங்கமுடன் சீலையதுயேழுஞ்செய்து
நீடவே பூப்புடமாம் உமியிற்போடு நெடிதான லிங்கமது கட்டியாடும்
கூடவே வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று குறிப்புடனே யுருக்கிப்பார் மாற்றாறாகும்
தேடவே னத்துக்குறுதிமெத்த சிறப்பாக யூதியபின் னெடுத்துக்கொள்ளே

விளக்கவுரை :

[ads-post]

1018. கொள்ளவே மாற்றதுவுமுறுதிமெத்த கூறவேயிடைக்கிடைதான் தங்கஞ்சேர்த்து
விள்ளசீவனத்தை செய்துகொண்டு விரிவான சாஸ்திரத்தை யறிந்துகொள்வாய்
தள்ளவே பொய்சூது கள்ளுநீக்கு தாழ்மையா யெளியோரைப் போலவாழ்ந்து
மெல்லவே துன்பசாகரத்தைவிட்டு மெதுவாக துவாதசாந்தத்தில் நில்லே

விளக்கவுரை :


1019. நில்லவே கருவான மின்னமொன்று நெடிதான லிங்கமது பலந்தானாகும்
புல்லவே வங்கமது பலந்தானொன்று புகலவே தாளகமும் பலந்தானொன்று
முல்லவே முலைப்பாலால் நாலுசாமம் மூர்க்கமாய் தானரைத்து கவசித்தேதான்
வெல்லவே லிங்கமதுக்கங்கிபூட்டி விருப்பாக ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :


1020. காயவே ரவிதனிலே யுலர்ந்தபின்பு கருவான சாண்குழியில் புடமேபோடு
மாயவே யுமிப்புடமாம் லகுப்புடந்தான் மயங்கஅமல்தான்போட கட்டிப்போகும்
சாயவே கவசமதுநீக்கிப்பாரு சட்டமுடனுருகியது கட்டிநிற்கும்
பாயவே வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று பாச்சடா மாற்றதுவும் ஆறதாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1011 - 1015 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1011. பொன்னான தேகமது கற்றூணாகும் போகுமே நரைதிரையும் பூதலத்தில்
மன்னான கண்ணிரண்டு மொளியேவீச மயக்கமில்லை யென்நாளும் கொதிப்புமில்லை
கன்னான மாய்கையது யற்றுமேதான் காலனுக்கு நாளதுவுமிடங்கொடாமல்
எந்நாளு மூலமதில் வாழ்வீரென்று இயம்பினார் போகரிஷி எழிலாய்த்தானே

விளக்கவுரை :


1012. தானான நாகமென்ற சிறுகண்ணாகம் தனியான சாரமுட னிலுப்பைநெய்யில்
வேனான வேழுதரமுருக்கிச் சாய்க்க வெழிலான சட்டைதள்ளி சுத்தியாச்சு
கோனானதாளகமும் வீரனொன்று கொடிதான கெவுரியடன் துருசுவொன்று
பானாகவோர் நிறையாயெடுத்துக்கொண்டு பாங்கான நாகத்திற் சரியாய்க்கூட்டே

விளக்கவுரை :

[ads-post]

1013. கூட்டியே தானுருக்கி கிராசமீவாய் குருவானநாதமது கட்டிப்போகும்
தாட்டிகமாய் வெள்ளிக்கு நேராநாகம் தாக்குவாய்த் தானுக்கி வூதிப்போட்டு
மாட்டுவாய் முன்சொன்ன லிங்கசெம்பு மார்க்கமுடன் வெள்ளிதனில் பத்துக்கொன்று
வாட்டமாய் தானுருக்கி யெடுத்துப்பாரு மகத்தான வர்ணமதுமேவும்பாரே

விளக்கவுரை :


1014. பாரான செம்புதனில் வர்ணமுண்டாய்ப் பாங்கான நாகத்தைவேதிக்கும்பா
கூராகவிரண்டிலொன்று தங்கஞ்சேர்த்து குறிப்பாகத் தகடடித்துப் புடத்தைப்போடு
வீரானமாற்றதுவும் விஷம்போலேறி மிக்கான வெட்டரையுமாகும்பாரு
காராககாவிக்கு முப்புக்கேகா கனமான செம்பிலிட வேகந்தானே

விளக்கவுரை :


1015. வேகமாம் லிங்கமொரு பலமுமொன்றாம் மிக்கான முலைப்பாலால் சுருக்குதாக்கு
பாகமா மெலுமிச்சம் பழச்சார்சாமம் பசுவானமேனிச்சார் சாமந்தாக்கு
யூகமாந்தேனுமோர் சாமந்தாக்கு உற்பனமா மெருமைப்பால் சாமந்தாக்கு
சாகாமல் மேதிப்பால் சாமந்தாக்கு சாரவே சாட்டரணை சாமமாமே

விளக்கவுரை :


Powered by Blogger.