போகர் சப்தகாண்டம் 1196 - 1200 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1196. போடேநீ தீமூட்டி யுலையில்வைத்து பொங்கமுடன் தானுருக்கி யெடுத்துப்பாரு
நாடவே களங்கமது யென்னசொல்வேன் நயமான களங்கமது சொல்லப்போமோ
நீடவே வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று நினைவாகத் தானுருக்கி யெடுத்துப்பாரு
நூடவே கரியோட்டி லூதிப்போடு நுணுக்கமா மாற்றதுவு மாறதாமே

விளக்கவுரை :


1197. ஆறான மட்டமது சொல்லப்போமோ அப்பனே நாலுக்கோர் தங்கஞ்சேர்த்து
வாறான வாறடித்துப் புடத்தைப்போடு வரைகட்டித் தங்கமது இறங்கும்பாரு
கூறான தங்கமது பசுமைமெத்தக் குவலயத்தில் யத்தங்கம் சொல்லப்போமோ
நாறான சவளையது வதிதங்காணீர் நாதாக்கள் செய்திடுவார் நளினமாமே

விளக்கவுரை :

[ads-post]

1198. நளினமா மின்னமொரு போக்குசொல்வோம் நாதாக்கள் வித்தையது கூறப்போமோ
மளினமாங் கெந்தியொரு பலமேவாங்கு மகத்தான விரும்பிலியின் தயிலத்தாட்டி
களினமா மாத்திரைபோ லுண்டைசெய்து கலசத்தில் தானடைத்து சீலைசெய்து
தளினமாய் குழித்தயிலம் இறக்கிப்பாரு தாக்கான பொன்வர்ணத் தயிலமாமே 

விளக்கவுரை :


1199. ஆமேதான் தயிலத்தை ரசத்திற்றாக்கு அப்பனே சூதமது மடிந்துபோகும்
தாமேதான் சூதமதுமடிந்துதானால் தாரணியில் வெகுகோடி வேதையோடும்
வேமேதான் சூதமது நேரேயொக்க வெடியான வுப்பதுவுங் காலாய்க்கூட்டி
நாமேதான் அறுவகை ஜெயநீர்தன்னால் நலமாகத் தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


1200. நாலான பில்லையதுக் காயவைத்து நலமாக ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
காலான குக்குடமாம் புடத்தைப்போடு கருவான செந்தூரம் யென்ன சொல்வேன்
வேலான வெள்ளியது செம்பிற்றாக்கு மிக்கான மாற்றதுவு மென்னசொல்வேன்
சூலான வர்ணமது சொல்லப்போமோ கருதியாம் வாதவித்தை அதீதம்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1191 - 1195 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1191. பாரேதான் சரியோட்டி லூதிப்போடு பாங்கான செம்பதுவும் நீங்கியேதான்
சீரேதான் வெள்ளியது மாற்றுகாணும் சிறப்பாகத் தகடடித்துப் புடத்தைப்போடு
நேரேதா னிரண்டுக்கோர் தங்கம்சேர்த்து நேர்ப்பாகத் தானுருக்கி யெடுத்துப்பாரு
தீரேதான் சீவனத்தை செய்துகொண்டு தெளிவாக சாத்திரத்தை யறிந்துபாரே

விளக்கவுரை :


1192. அறிந்துமே யோகமுதலறியவேண்டும் அப்பனே காரணத்தின் குருவைக்கண்டு
முறிந்துமே குருசம்பிரதாயங்கண்டு முடிவணங்கி யடிதொழுது முழுதும்பார்த்து
குறிந்துமே கும்பகத்திலிருந்துகொண்டு கூற்றனுக்குச் சற்றேனுமிடங்கொடாமல்
சறிந்துமே பராபரத்தின் மார்க்கம்கண்டு சாதிப்பஅய் சதாநித்தம் சாதிப்பாயே

விளக்கவுரை :

[ads-post]

1193. சாதிப்பா யின்னமொரு ககருமானங்கேள் சாற்றுகிறேன் லோகத்து மாந்தர்க்காக
வேதிப்பா மயமதுவு மொன்றேகாலாம் வெளுப்பான செம்பதுவும் விராகனொன்று
சொதிப்பாய் கடைசரக்கு சொல்லக்கேளுந்துவான தாளகமும் களஞ்சியொன்று
சாதிப்பாய் காடியென்ற காரந்தானும் கருவான பாஷாணம் களஞ்சியொன்றே

விளக்கவுரை :


1194. ஒன்றான பூரமது களஞ்சியொன்று வுத்தமனே வீரமது களஞ்சியொன்று
குன்றான துரிசியது களஞ்சியொன்று கூரான துத்தமது களஞ்சியொன்று
கன்றான கவுரியது களஞ்சியொன்று தாக்கான வெடியுப்பு களஞ்சியொன்று
அன்றான சீனமது களஞ்சியொன்று அழகான லிங்கமது களஞ்சியொன்றே

விளக்கவுரை :


1195. களஞ்சியாங் காரமது களஞ்சியொன்று கடிதான நாகமது களஞ்சியொன்று
தளஞ்சியாஞ் சூதமது களஞ்சியொன்று தாக்கான விவையெல்லா மொன்றாய்ச்சேர்த்து
அளஞ்சியா மெரிகாலன் பாலாலாட்டி யப்பனே வச்சிரமாங் குகையில்வைத்து
முளஞ்சியாஞ் சில்லிட்டுச் சீலைசெய்து முயற்சியாய் ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1186 - 1190 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1186. மூட்டியே நெல்லதனைப் பாண்டத்திட்டு முயற்சியாய்த் தண்ணீரில்பசரிக்கொண்டு
நீட்டியே யடுப்பேற்றி யதின்மேல்சீலை நேர்ப்பாக வைத்தெரித்து நினைவாய்வாங்கி
வாட்டியே மேற்சட்டி கவிழ்த்துமூடி மயங்காதே யாவிகண்டபதத்தில்வாங்கு
தேட்டியே சீவனெல்லா மொன்றாய்ப்போகும் திறமாக ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :


1187. காய்ந்தபின்பு யிலைபரப்பி நெற்பாண்டத்திட்டு காரியமாய் முன்போலே அவித்தெடுத்து
மாய்ந்துபின்பு ரவியிலிட்டுக் காய்ந்தபின்பு மறுக்காலும் மருந்ததனைச் சீவலாக்கிக்
காய்ந்ததின்பு யிலைபரப்பி அவித்தெடுத்துக் கவனமாமூன்றுதரமானபின்பு
ஆய்ந்தபின்பு பல்லையைப்போல் பண்ணிக்கொண்டு வுற்பனமாய்க் கீழ்மேலும் கற்சுன்னம்வையே

விளக்கவுரை :

[ads-post]

1188. வையப்பா சீலைக்குள் கிளிபோல்கட்டு வளமாகசட்டியிலேவோடுநடுவிலேவைத்து
மெய்யப்பா மேலாகவாட்டவோடு மெல்லிதாய்த் தமருமொரு நூறுமிட்டுச் 
செய்யப்பா சட்டியின்மேல் ஊறப்போட்டுச் சிறப்பாக மல்லிகையினிலையதுவைத்து
கொய்யப்பா தண்ணியிலே போட்டுக்காய்ச்சி குறிப்பாகத் துவாரத்தால் விட்டுநீற்றே

விளக்கவுரை :


1189. ஆமேதானாகமொரு பலமேவாங்கி அடவாக யிலுப்பைநெய்யில் வுருக்கிச்சாய்த்து
வேமேதான் கிண்ணியிலை கவசஞ்செய்து மிக்கான காடையென்ற புடத்தைப்போடு
நாமேதான் புகையதுவுங்கட்டியேதான் நலமாகக் கண்ணெல்லாங் கட்டிப்போகும்
தாமேதான் நாகமிடை சூதஞ்சேர்த்து தாக்கான களங்காக வுருக்கிடாயே
விளக்கவுரை :


1190. உருக்கையிலே கெந்தியைநீ களஞ்சியொடு வுத்தமனே நாகமதுகளங்குமாகும்
வருகையிலே கலங்குதனை யெடுத்துப்பாரு மகத்தான சொர்ணமதுவுள்ளேநிற்கும்
தருகையிலே வெள்ளிசெம்பஇல் பத்துக்கொன்று தாக்கடாகுருவதனை களங்குதன்னை
நிருகையிலே விருக்குமுகந் தன்னிலீய நெடிதான மாற்றதுவுமாகும்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1181 - 1185 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1181. போகாமல் சவர்க்காரச் சுன்னம்சொல்வேன் பொற்கொடிக்கு ஈசனன்று புகன்றவாறு
வேகாமல் பூநீறுபதக்குவாரி விரைந்துவொரு பாண்டத்திலளந்துபோட்டு
ஏகாமல் மனிதனுட அமுரிதானும் இதமாகப் பதினாறுபடிதான்வார்த்து
சாகாமல் மூன்றுநாள் கலக்கிவைத்துச் சார்ந்தபின்பு நாலாநாள் தெளிவுவாங்கே

விளக்கவுரை :


1182. வாங்கியந்த தெளிவிலே கல்லுச்சுன்னம் வளமாகத் தீநிறுத்தரைப்படிரண்டுபோட்டு
தேங்கியதைமூன்றுநாள் கலக்கிவைத்துச் சிறப்பாக நாலாநாள் தெளிவுவாங்கி
ஓங்கியொருபடிதானுங்கல்லுநயப்பொடித்து வொக்கவந்த தெளிவிலே கரைத்துப்போடு
தாங்கியே நாலாநாள் தெளிவைவாங்கி சமர்த்தாக வடிகனத்த சட்டியிலேவூற்றே

விளக்கவுரை :

[ads-post]

1183. ஊற்றியே வெடியுப்புச் சீனந்தானு முயர்ந்துநின்ற துரிசியொடு சாரம்வீரம்
ஆற்றியே வெள்ளையென்ற பாஷாணந்தா னப்பனே வகைக்குமொரு பலந்தான்தூக்கி
சாற்றியே கல்வத்திற்பொடித்து மைபோல் சார்பாக முன்தெளிவிலொக்கப்போட்டுப்
போற்றியே ஈசானபூசைபண்ணிப் புகழாக வடுப்பேற்றி யெரித்திடாயே

விளக்கவுரை :


1184. எரித்திட்டுத் தீபம்போலடிபாறாவிதமாக வயத்துடுப்பால் கிண்டிக்கிண்டி 
வரித்திட்டுக் குழம்புபோல் வருதல்கண்டு வாகான நல்லெண்ணெய் சேரவார்த்து
தரித்திட்டு மெழுகுபோல் பில்லைபண்ணிச் சமரசமாய் ரவியிலிட்டுக் காய்ந்தபின்பு
மரித்திட்டு மல்லிகையின் சாறுவாங்கி வரிசையாய்த் தோய்த்தெடுத்து ரவியிற்போடே

விளக்கவுரை :


1185. போட்டுவா தினமேழுபக்தோட்டுக்குள் பொலிவான யெண்ணெயெல்லா மோடேயுண்டு
காட்டுவாய் கருப்பாக யிருக்கும்பாரு கண்டுநீமயங்காதே பாக்குபோல்சீவி
நீட்டுவால் சீலைதனைக் கீழேபோட்டு நேராகமல்லிகையினிலைபரப்பி
மாட்டுவாய் சீவல்தன்மேல்வைத்து மல்லிகையினிலையினாலே மூடிப்போடே

விளக்கவுரை :


Powered by Blogger.